PDA

View Full Version : ஹைக்கூ ?



ஜான்
07-12-2012, 02:55 PM
பல கேள்விகளை விட்டுவிட்டு

பறந்துபோய் விட்டது

ஒற்றையாய் வந்த மைனா

கீதம்
08-12-2012, 10:26 AM
பல எண்ணங்களைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது, ஒற்றையாய் வந்து போன மைனாக்கவிதை. அழகு. பாராட்டுகள்.

ஜான்
09-12-2012, 11:37 AM
மிக்க நன்றி கீதம் அவர்களே

ஜான்
22-12-2012, 09:33 AM
அலையெழுப்புகின்றன

ஆற்றுமணல் படுகையில் உலரும்

வண்ண வண்ண சேலைகள்

கும்பகோணத்துப்பிள்ளை
25-12-2012, 01:15 AM
பல கேள்விகளை விட்டுவிட்டு

பறந்துபோய் விட்டது

ஒற்றையாய் வந்த மைனா

அட!.. அட!..
உங்கள்
இதயத்திலுமொரு இறகை விட்டுச்சென்றிருக்கும்!
இதமாக வருடவென்று!

ஒரு மைனா மைனா குருவி! மனசார பாடுது!
மாயங்கள் காட்டுது! கோய்! கோய்!

ஜான்
25-12-2012, 02:50 AM
நன்றி kkpillai

baboo
26-12-2012, 04:20 AM
நல்ல முயற்சி. தங்களிடம் இன்னும் நிறைய ஹைக்கூ கவிதைகளை எதிர் பார்க்கிறோம்.

மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:13 AM
பல கேள்விகளை விட்டுவிட்டு

பறந்துபோய் விட்டது

ஒற்றையாய் வந்த மைனா

பதில் வரும் என்ற நம்பிக்கையுடன்.....

அருமையான வரிகள் ஜான்....

மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:14 AM
அலையெழுப்புகின்றன

ஆற்றுமணல் படுகையில் உலரும்

வண்ண வண்ண சேலைகள்

ரசனையான ஹைக்கூ... ரசித்தேன் ஜான். அன்பு வாழ்த்துகள்.

ஜான்
31-12-2012, 02:23 PM
நல்ல முயற்சி. தங்களிடம் இன்னும் நிறைய ஹைக்கூ கவிதைகளை எதிர் பார்க்கிறோம்.

நன்றி பாபு ...தாங்களும் முயலுங்கள் அனைவரும் முயல்வோம்

ஜான்
31-12-2012, 02:23 PM
ரசனையான ஹைக்கூ... ரசித்தேன் ஜான். அன்பு வாழ்த்துகள்.

நன்றி மஞ்சு ...

ஜான்
27-01-2013, 03:59 AM
இன்னும் யாரும் படிக்காமல்

புதுசாகவே கிடக்கிறது

போனமாதப் பத்திரிகை

மஞ்சுபாஷிணி
27-01-2013, 09:37 AM
இன்னும் யாரும் படிக்காமல்

புதுசாகவே கிடக்கிறது

போனமாதப் பத்திரிகை

அருமையா இருக்குப்பா ஜான்.... ஆனா ஏனாம்?

ஜான்
05-03-2013, 01:17 AM
தாலாட்டுகிறாள் அப்பத்தா

பிடிவாதமாய் விழித்திருக்கிறது

குழந்தை

சுகந்தப்ரீதன்
08-03-2013, 05:15 PM
ஒற்றை மைனாவும் வண்ண சேலைகளும் ஆழ்ந்த பார்வையின் ரசனைவீச்சு... ரசிக்க வைக்கிறது..!!:icon_b:

போனமாத பத்திரிக்கையும் பிடிவாத குழந்தையும் பிடிவாதமாய் பிடிபட மறுக்கிறது ஜான்..!!:)

ஜான்
09-03-2013, 03:06 AM
ஆழ்ந்து வாசித்தமைக்கு நன்றி சுகந்தப்ரீதன்...உற்சாகம் மிகுகிறது!!

குழந்தையின் மனநிலை...பாடலை ரசிக்கும் தூங்கிவிட்டால் பாடலை இழக்கும் குழந்தை ...ஆனால் தூக்கம் பிடிவாதமாய் ஆட்கொள்ளும் ....

நன்றி

கும்பகோணத்துப்பிள்ளை
10-03-2013, 07:49 PM
ஆழ்ந்து வாசித்தமைக்கு நன்றி சுகந்தப்ரீதன்...உற்சாகம் மிகுகிறது!!

குழந்தையின் மனநிலை...பாடலை ரசிக்கும் தூங்கிவிட்டால் பாடலை இழக்கும் குழந்தை ...ஆனால் தூக்கம் பிடிவாதமாய் ஆட்கொள்ளும் ....

நன்றி

இன்னாடாயிது! மெய்யாலுமேவா!
சர்தாம்பா ஜானு சொன்னா சரிதாங்!

ஜான்
11-03-2013, 01:58 AM
:):):)

ஜான்
11-03-2013, 02:00 AM
சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு

sarcharan
11-03-2013, 04:05 AM
ஒரு தடவை உரிந்த சட்டையை
மீண்டும் அணியான் இந்த
"ராயல்" ராயப்பன்

ரமணி
11-03-2013, 04:07 AM
'சென்றது பாம்பு' என்றிருந்தால் better அல்லவா?


சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு

ரமணி
11-03-2013, 04:15 AM
சட்டையை உரித்துச் சென்றது
பயத்தையோ புகழையோ நிரப்பிவிட்டு
மனித உயிர்


சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு

ஜான்
11-03-2013, 08:00 AM
ஒரு தடவை உரிந்த சட்டையை
மீண்டும் அணியான் இந்த
"ராயல்" ராயப்பன்

மிக்க நன்றி sarcharan

ஜான்
11-03-2013, 08:03 AM
சட்டையை உரித்துச் சென்றது
பயத்தையோ புகழையோ நிரப்பிவிட்டு
மனித உயிர்

ஆழ்ந்த துல்லியமான புரிதலுக்கு நன்றி ஐயா ..

சென்றது என்றிருந்தால் மேலும் ஒரு பொருள் கிடைக்கிறது!!

மதி
12-03-2013, 05:58 AM
ஹைக்கூக்கள் நன்று.. சில வார்த்தைகளில் அதீத அர்த்தங்கள்..

ஜான்
12-03-2013, 02:17 PM
மிக்க நன்றி மதி

ஜான்
25-03-2013, 01:30 AM
பொழிந்து மறையும் வரை

ஏதேனுமோர் உருவத்தை

ஏற்றுக் கொள்கிறது கார்மேகம்

கும்பகோணத்துப்பிள்ளை
25-03-2013, 02:11 AM
பொழிந்து மறையும் வரை

ஏதேனுமோர் உருவத்தை

ஏற்றுக் கொள்கிறது கார்மேகம்

மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கத்தில் நீங்களும் ஒரு மெம்பரா!
இதைதான் 'அனுபவிச்சு' எழுதறதுன்னு சொல்றாங்களோ!

ஜான்
25-03-2013, 09:17 AM
நன்றி கும்பகோணத்துப் பிள்ளை