PDA

View Full Version : வாக்கு



கௌதமன்
05-12-2012, 02:02 PM
சிலருக்கு காசு

சிலருக்கு ஜாதி

சிலருக்கு மதம்

சிலருக்கு மது

சிலருக்கு சினிமா கவர்ச்சி

சிலருக்கு அபிமானம்

சிலருக்கு மாற்றம்

விலைதான் வேறு வேறு

விற்கும் பொருள் ஒன்றுதான்

வாக்கு....

கீதம்
05-12-2012, 09:32 PM
அந்தக்காலத்து பண்டமாற்று முறை நினைவுக்கு வருகிறது. பண்டமாய் இங்கே உரிமைகளும் கடமைகளும்.

கவிதை நன்று. பாராட்டுகள் கௌதமன்.

M.Jagadeesan
06-12-2012, 04:04 AM
கெளதமனின் மீள்வரவுக்கு நன்றி! விலைமதிப்பில்லாத வாக்கு, கடைச்சரக்காக மாறிவிட்ட அவலத்தை சுட்டிக் காட்டும் கவிதை. பாராட்டுக்கள் கெளதமன்!