PDA

View Full Version : கதைப் போட்டி 06 - முடிவுகள்



மதி
05-12-2012, 10:33 AM
இனிய உறவுகளுக்கு!

மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட கதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அனைவரையும் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு 29 கதைகள் வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு மாதகாலம் அவகாசம் இருந்தும் அதிகளவில் வாக்களிக்கப்படவில்லை. ஒருவர் நான்கு கதைகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றிருந்தும் சில ஒன்றிரண்டு கதைகளுக்கு மட்டுமே வாக்களித்திருந்தது வருத்தம் கொள்ள செய்தது. அவர்களின் வாக்குகள் செல்லா வாக்குகளாக ஆக்கப்பட்டு முடிவுகள் அதற்கேற்றாற் போல் அறிவிக்கப்படுகின்றன.

முதலில் மனம் தளராது போட்டிக்கு தங்கள் படைப்புக்களை அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

திருத்தப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,

ரிஷ்வன் அவர்களின் கதை "கடவுளும் மனிதனும்" அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

புதுவை.வெ.செந்தில் அவர்களின் கதை "மாற்றாள்" அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.

முதல்முறையாக மூன்றாம் இடத்தை இரு கதைகள் பிடித்திருக்கிறது.

கலைவேந்தன் அவர்களின் கதை "அண்ணி என்றால்" மற்றும் முரளிதரன் எழுதிய "சந்தேகம்" ஆகியவை மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது..

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நால்வரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபெற்ற ஏனைய கதாசிரியர்களைப் பாராட்டுகிறது.

நன்றி

கதையும் ஆசிரியர்களும்




எண்
கதை தலைப்பு
தமிழ்மன்ற பயனர் பெயர்


1
பந்தா
seabird


2
சில நிஜங்கள்
arunbharathi


3
புரிதல்
அப்பாவிதங்கமணி


4
அண்ணி என்றால் ...
கலைவேந்தன்


5
வீரபத்திரன் ..
NKannappu


6
யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா
tamilppr


7
கடவுளும் மனிதனும்
rishvan


8
சந்தேகம்
murali12


9
தீர்ப்பு
கலையரசி


10
எதார்த்தம்
நாஞ்சில் த.க.ஜெய்


11
நான் சொல்வதெல்லாம் உண்மை...
pk_muthukumaran


12
தகுதியுடையவை தழைத்தோங்கும்
கோபாலன்


13
அரளிப்பூக்கள்
ஐரேனிபுரம் பால்ராசய்யா


14
அன்பு சாம்ராஜ்ஜியம்
க.கமலக்கண்ணன்


15
காதல் பண்பாடு
srisivasubramanyan


16
பச்சை நிறமே இல்லை
prakashsembai


17
மாற்றாள்
puduvai.ve.senthil


18
மாமன் மகள்
wilsongnanasingh


19
மாயை
இன்பக்கவி


20
நானும்,ஜெயனும்,திருச்சியும்
subamenu


21
உண்மைகள் தெளிவாகும் போது
Ravee


22
கடவுள்களின் முகவரி
PUTHUVAI PRABA


23
செல்போன்
KARUNAGARAN


24
காதலுக்கு உருவம் உண்டு
Shanmugakala


25
பிராயச்சித்தம்
M.Rishan Shareef


26
தண்ணீர்
Raji Iyer


27
சக்ரவியூகம்
shreemurali


28
ஆசான்
Kovai Puthiyavan


29
கடைசிவரை
Keelai Naadaan

கலைவேந்தன்
05-12-2012, 12:28 PM
கதைப் போட்டியில் களமிறங்கி முதலிடத்தைப் பெற்ற ரிஷ்வன் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்ற புதுவை வெ செந்தில் அவர்களுக்கும் மூன்றாமிடம் பெற்ற முரளிதரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

ஏனையோர் கதைகளையும் அவர்தம் பெயருடன் குறிக்கலாமே..

கலையரசி
05-12-2012, 12:52 PM
முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், இரண்டாமிடம் பிடித்த செந்தில் மூன்றாவதாக வந்த முரளிதரன் ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள். கவிதைப் போட்டி, கதைப்போட்டி இரண்டிலும் பரிசு வென்ற கலைவேந்தன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

எனக்குப் பிராயச்சித்தம் என்ற கதை மிகவும் பிடித்திருந்தது. நடையும் அருமை! போட்டியில் வெல்லவில்லையாயினும் அந்தக் கதாசிரியருக்கும் என் பாராட்டுக்கள்!

Keelai Naadaan
05-12-2012, 03:33 PM
கதைப்போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் ரிஷ்வன், புதுவை.வெ.செந்தில், கலைவேந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

உண்மையில் பல கதைகள் சிறப்பாய் இருந்தது.
பிடித்த நான்கு கதைக்கு வாக்களிக்க தேர்ந்தெடுப்பதில் பலமுறை யோசிக்க வேண்டியிருந்தது.
பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

PUTHUVAI PRABA
05-12-2012, 04:01 PM
கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், கவிதைப் போட்டி, கதைப்போட்டி இரண்டிலும் பரிசு வென்ற புதுவை.வெ.செந்தில் , கலைவேந்தன் மூன்றாவதாக வந்த முரளிதரன்ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்!

சுகந்தப்ரீதன்
05-12-2012, 04:45 PM
கதைப்போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் பங்குபெற்ற அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!:icon_b:

கோபாலன்
05-12-2012, 05:54 PM
கதைப் போட்டியில் வெற்றி பெற்ற ரிஷ்வன், புதுவை.வெ.செந்தில், கலைவேந்தன், முரளிதரன் ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்:)

கீதம்
05-12-2012, 09:18 PM
கதைப்போட்டியில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற ரிஷ்வன், புதுவை.வெ. செந்தில், கலைவேந்தன், முரளிதரன் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். தங்கள் கதைகளால் இப்போட்டியை களைகட்டவைத்த அனைத்துக் கதாசிரியர்களுக்கும் பாராட்டுகள். பங்கேற்றவர்கள் அனைவரும் இப்போட்டியோடு நின்றுவிடாமல் தொடர்ந்து தங்கள் படைப்புகளால் மன்றத்துக்கு மெருகூட்ட வாழ்த்துக்கள்.

ஜானகி
06-12-2012, 12:13 AM
வெற்றிவாகை சூடியவர்களுக்கும், பங்குகொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள் !

போட்டியுடன் நின்றுவிடாமல், அவ்வப்போது எழுதிவரவும்.

jayanth
06-12-2012, 02:28 AM
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் உளம் கனிந்த பாராட்டுக்கள்...!!!

முரளி
06-12-2012, 02:45 AM
முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், இரண்டாமிடம் பிடித்த செந்தில் மூன்றாவதாக வந்த கலைவேந்தன் ஆகியோர்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

கதையெழுத நினைத்து நான் எழுதிய முதல் கதை சந்தேகம். எனக்கெல்லாம் கதை எழுத வருமா என்ற சந்தேகத்தோடு. அப்போது கதையில் எந்த செய்தியும் சொல்லத்தெரியாத புதியவன் (இப்போது மட்டும் என்ன வாழ்ந்தது? நீங்க சந்தேகபடறது சரியே!).அதற்கு பரிசு எனும்போது மிக மிக மகிழ்ச்சி. கதை போட்டி மூலம் என்னை மன்றத்தில் இணைத்தது சந்தேகமே இல்லாமல் 'சந்தேகமே'.

மன்ற நடுவர்கள், நீங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.

puduvai.ve.senthil
06-12-2012, 03:47 AM
கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்ளும் கலைவேந்தன் மற்றும் முரளி ஆகியோர்க்கு என் உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்..... இப்போட்டியில் பங்குபெற்ற அனைத்து படைப்புகளும் சிறந்தவையே.... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
எனது கதை இரண்டாம் இடத்திற்கு தேர்வாக காரணமாயிருந்த அனைவருக்கும் நன்றி..நன்றி...

M.Jagadeesan
06-12-2012, 03:49 AM
கதைப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரிஷ்வன் அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற திரு. புதுவை வெ. செந்தில் அவர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற திரு. கலைவேந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மஞ்சுபாஷிணி
06-12-2012, 03:52 AM
கதைப்போட்டியில் பங்குப்பெற்று சிறப்புடன் கதைகளை பகிர்ந்த அனைவருக்கும் வெற்றிப்பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

சொ.ஞானசம்பந்தன்
06-12-2012, 06:00 AM
வென்றவர்களுக்குப் பாராட்டு ; பங்கு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்து .

rishvan
06-12-2012, 06:15 AM
சிறுகதைப் போட்டியில் என் சிறுகதையை வெற்றிபெற வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்... அன்பன்... ரிஷ்வன்.. http://www.rishvan.com

முரளி
06-12-2012, 11:45 AM
கதை போட்டியில் பங்கு பெற்ற 29 கதைகளும் மீண்டும் " சிறுகதைகள் தொடர்கதைகள்" பகுதியில் வெளிவருமா?
வாரா வாரம் மூன்று கதைகளாக வெளியிட கூடுமா? சுவைத்து படிக்க வசதியாக இருக்குமோ என தோன்றுகிறது. கருத்து அறிய ஆவல்.

Ravee
06-12-2012, 03:40 PM
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .... :icon_b:

கீதம்
06-12-2012, 07:10 PM
கதை போட்டியில் பங்கு பெற்ற 29 கதைகளும் மீண்டும் " சிறுகதைகள் தொடர்கதைகள்" பகுதியில் வெளிவருமா?
வாரா வாரம் மூன்று கதைகளாக வெளியிட கூடுமா? சுவைத்து படிக்க வசதியாக இருக்குமோ என தோன்றுகிறது. கருத்து அறிய ஆவல்.

சிறுகதைகள் பகுதியில் கதைகளை வெளியிடுவது அந்தந்தக் கதாசிரியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. மன்ற உறவுகளின் கருத்தறிய விரும்புபவர்கள் தங்கள் கதைகளை தங்கள் பயனர் பெயரிலேயே வெளியிடலாம்.

A Thainis
08-12-2012, 07:26 AM
கதை போட்டியில் வென்ற தமிழ் மன்ற நண்பர்களான திரு. ரிஷ்வன், திரு. புதுவை வெ. செந்தில், திரு. கலைவேந்தன் மற்றும்
திரு. முரளிதரன் ஆகியோருக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்!

Mano60
20-11-2016, 03:43 AM
கதை போட்டி 06 ல் வெற்றி பெற்றவர்களுக்கும் இதில் பங்களித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதன் பிறகு போட்டி எதுவும் நடக்கவில்லையா? இந்த மன்றம் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு" என்று மனோகரா திரைப்படத்தில் கண்ணாம்பா என்னும் நடிகை பேசிய வீரவசனம் நினைவிற்கு வருகிறது. நண்பர்களே இனியும் உறக்கம் வேண்டாம். திருப்பாவை எழுதிய ஆண்டாள் தன் 12 வது பாசுரத்தில் சொல்லியது போல் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?' என்று நானும் கூவுகின்றேன். தமிழ் மன்ற இனிய நட்பு உறவுகளே உங்களின் பங்களிப்புகளை பெருக்கி நம் மன்றத்திற்கு புத்துணர்ச்சி தாருங்கள். வாருங்கள் நண்பர்களே.