PDA

View Full Version : ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட திறமைகள்..



முத்து
04-12-2003, 08:33 PM
இந்த நிகழ்ச்சி தலைப்புக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை ...
என்றாலும் சொல்லிவிடுகிறேன் ....

முதல் உலகப்போர் முடிந்த சமயம் ...
ஜெர்மனி ராணுவத்தில் நிறையப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது ..
ஏனோ தெரியவில்லை .. ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவில்லை ..
அந்த ராணுவ வீரன் மேலதிகாரியிடம் போய் முறையிட்டான் தனக்கும் பதவி உயர்வு தரப்பட்டிருக்கவேண்டும் என்று ..
அவனுடைய மேலதிகாரி சொன்னார் .. உனக்கு நிர்வாகத் திறமை என்பதே கொஞ்சம் கூட இல்லை ..
எனவே உனக்கு பதவி உயர்வு கிடையாது என்று திருப்பி அனுப்பிவிட்டார் ...

அந்த ராணுவ வீரன் யார் தெரியுமா ... ?

இரண்டாம் உலகப்போருக்கே காரணமான உலகையே கலக்கிய ஹிட்லர் ....

puppy
04-12-2003, 08:51 PM
இது சுவையான சம்பவங்களில் வரும்...உங்க அண்ணன் வந்தவுடன் வெட்டி
அங்க பதிய சொல்லுங்க முத்து....

முத்து
04-12-2003, 09:00 PM
சரிங்க .. பப்பி அவர்களே ....

இளசு
09-01-2004, 09:21 PM
மாத்தியாச்சு முத்து...

முத்து
09-01-2004, 11:05 PM
நன்றி அண்ணா!

Nanban
10-01-2004, 03:41 PM
ஹிடலரைப் பற்றிய சுவையான சம்பவம் இது..... ஒருவேளை அன்று பதவி உயர்வு கிடைத்திருந்தால் சும்மா இருந்திருப்பான்.... கிடைக்காததினால், ஜெர்மானியர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக புரளியைக் கிளப்பி, நாஜியிஸம் என்ற கோட்பாட்டையே உண்டாக்கி, உலகத்தையே உண்டு, இல்லை என்றாக்கி, கடைசியில் தானே இல்லாமல் போனவன் அவன்........

இன்றைய சதாமைப் போல.......

samuthira
13-01-2004, 04:43 AM
தகுதி இல்லாதவர் தான் தரணி ஆள்வார்கள் போல் இருகிறது...

poo
13-01-2004, 12:47 PM
நம்மூர் கொ.ப.செ-க்கள் கொஞ்சம் வித்தியாசமாய் தானே தலைவராகிவிடுவர்..


ஹிட்லர் பொறுத்து பூமியை அழித்துவிட்டார்!

முத்து சுவையான சம்பவங்கள் இன்னும் சொல்லுப்பா!!

சேரன்கயல்
13-01-2004, 12:49 PM
நல்ல தகவல் முத்து...
நன்றிகள்...

sara
15-01-2004, 05:23 AM
ஐஸ்வர்யாராய் அவரின் மாடலிங் வாழ்க்கைத்தொடக்கத்தில், சில நிறுவனங்களால் அவர் மாடலிங்குக்கு தகுதியான உடலமைப்பு கொண்டவரல்ல என்று நிராகரிக்கப்பட்டார், என்று எங்கேயோ படித்த நினைவு (வதந்தியா தெரியவில்லை..). காலம் மட்டும்தான் மாறுகிறது. காட்சிகள் அப்படியே..!

பைத்தியகாரன்
15-01-2004, 07:11 AM
அனைத்து திறமைசாலிகளும் முதலில் நிராகரிக்க்கப்பட்டவர்கள்தான்.............பின் அவர்கள் செயல்கள் மூலமே வெளிப்பட்டார்கள்...............அவர்கள் மோசமானவர்கள் ஆயினும்

பரஞ்சோதி
22-01-2004, 11:11 PM
நிராகரிக்கப்பட்டு சாதனை செய்தவர்களில் ஒருவர், ஈபில் கோபுரத்தை கட்டியவர். பொறியாளர் படிப்பு படிக்கும் போது அவரது ஆசிரியரால் திறமையற்றவர் என்று வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

kavitha
02-06-2004, 07:20 AM
உலகையே தமது மயக்கும் இசையால் கட்டிப்போட்ட பீதோவான் கூட காதுகேளாதவராம்!

ஓவியன்
26-10-2007, 05:12 PM
ஹிட்லரைப் பற்றிய இன்னுமோரு சுவையான தகவல்....

இரண்டாம் இலக்கத்தில் பிறந்த ஹிட்லர் கலை ஆர்வமிக்கவன். தன் ஆரம்ப காலத்தில் தான் ஒரு பெரிய ஓவியனாக வரவேண்டுமென நினைத்து அதற்காக முயற்சித்து ஓவியக் கல்லூரியில் சேரவென சென்றானாம். ஆனால் ஓவியக் கல்லூரியில் கட்டணமாக கேட்ட தொகையினை அன்று மிக ஏழையாக இருந்த ஹிடலரினால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. உடனே வேறு வழியின்றி பிழைப்புக்காக இராணுவத்திலே சேர்ந்தான். அதன் பின்னர் நடந்தது தான் எல்லோருக்கும் தெரியுமே....!! :frown: