PDA

View Full Version : நானும் ஐஸ்கிரீமும் நீயும்ஆதி
05-12-2012, 05:21 AM
வெளிச்சத்தை இழக்க ஆரம்பித்த*
சாயுங்கால பொழுதொன்றில்
உனக்காக காத்திருந்தேன்

இருட்செறிந்த ஒரு வனாந்தரத்தில்
திசை தவறியவர்களை
சரியான பாதையில் சேர்க்கும்
தேவதையின் கருணையோடு
வந்தாய்

குழும துவங்கியிருந்த*
இருளின் அடர்த்தியில்
விழிகளை அகல விரித்து
உனை பார்க்க முயன்ற*
மெழுகுவர்த்திகள் ஒளி மங்கின*

உனது வெளிச்சம்
அவற்றின் கண்களை
கூசியிருக்க வேண்டும்

என் எதிரே
ஒரு இளவரசியின் தோரணையோடு
ரம்மியமாய் அமர்ந்தாய்

மங்கிய வெளிச்சத்தில்
உன் பூ வதனத்தை
நெருக்கமாய் அமர்ந்து ரசித்தலின்
சுகம் அலாதியானதுதான்

இனி இந்த நிமிடங்கள்
என்னுடையவை

இனி உன் ஒவ்வொரு
பாவனையும் என்னுடையவை

இனி உன் ஒவ்வொரு
புன்னகையும் எனக்கானவை

பாதார்த்த பட்டியலை எடுத்து
ஆளுக்கொரு ஐஸ்கிரீம்
ஆடர் செய்துவிட்டு
மீண்டும் என்னை பார்த்தாய்
அடி!
எப்படி கற்றாய்
அப்படியொரு பார்வை பார்க்க ?
நுண்மீதமுமின்றி தொலைந்துவிட்டேன்

நான் உருகி கொண்டிருந்த போதே
உன் கன்னங்கள் போன்ற*
கண்ணாடி கோப்பைகளில்
உன் மேனியின் மென்மை கொண்ட*
ஐஸ்கிரீம் வந்தது

நீ உண்ண ஆரம்பித்தாய்

உன் பார்வையின் லாவகத்தை
கைகளில் உள்ள ஸ்பூனுக்கும்
கற்று கொடுத்துவிட்டாய் போலும்
எப்படி எனக்கு வலிக்காமல்
என் மனதை மெல்ல தின்கிறாயோ
அப்படி ஐஸ்கிரீமையும்
நளினமாய் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்

rema
05-12-2012, 06:58 AM
ஆதி ஐஸ்கிரீமாய் உருகியிருக்கும் கவிதை ரசிக்க வைத்தது !


நுண்மீதமுமின்றி தொலைந்துவிட்டேன்


வெகுவாய் கவர்ந்த வரிகள் !

சரி, எனக்கொரு டவுட் ! நீங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டது புனேயிலா இல்லை லண்டனிலா ?

கீதம்
12-12-2012, 07:55 AM
பனிக்குழைவை விடவும் குழைவான கவி வரிகள். ஒரு தேவதையின் கருணையை விவரித்த வரிகள் அலாதி அழகு. அந்த தேவதையின் நளினத்திலும் நாசுக்கிலும் நுண்மீதமுமின்றி நீங்கள் தொலைந்துபோன கணங்களை ரேமாவைப்போலவே நானும் ரசித்தேன். புத்தனிடம் பித்தாயிருந்தவனை தன்பக்கம் திருப்பிய தேவதைக்கும் தேவதைக்கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

HEMA BALAJI
28-12-2012, 06:06 AM
நல்ல பனிப்பொழுதில் தொண்டையில் ஜில்லென்று ஐஸ்க்ரீம் இறங்கிய மாதிரி இருக்கு கவித... சூப்பர்.

maniajith007
19-06-2013, 05:57 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php/31422-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D


எனது கவிதையும் உங்களின் இந்த கவிதையும் கிட்டத்தட்ட தொடரை போல அமைந்துள்ளது என தோன்றுகிறது

தாமரை
19-06-2013, 08:10 AM
என்னவள் என்ன அவ்வளவு
குளிர்ச்சியா என்ன..?

அவளின் நுனிநாக்கு பட்டதும்
ஐஸ்க்ரீமுக்கும் குளிர்கிறதே!!”

காதல்னா சும்மாவா? (http://www.tamilmantram.com/vb/showthread.php/19474-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?p=409111&viewfull=1#post409111)

மதி
19-06-2013, 11:51 AM
2009???:confused:

பென்ஸ்
19-07-2013, 04:39 PM
ஆதி..


ஊருகும் முன் சாப்பிடது நல்லதே... ஐஸ்கிரீமோடு இதயத்தையும்...


ஆமா.. இது எப்போ..??

மும்பை நாதன்
08-10-2013, 05:44 PM
கிண்ணத்தில் ஐஸ்க்ரீமை ஆதியின் அவளும்
கவிதையில் நளினத்தை ஆதியும்
எதுவுமே வைக்கவில்லை மீதி !

கும்பகோணத்துப்பிள்ளை
08-10-2013, 10:05 PM
ஆதி அவர் ஆளுக்கு
ஜஸ் (கிரீம்) வைத்தாரலும் வைத்தார்
அவர் மட்டுமா உருகினார்
நம்மையும் உருக்கிவிட்டார்!

மும்பை நாதன்
16-10-2013, 04:44 PM
ஆதி கவிதை எழுதினாலும் எழுதினார், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது.

ஜான்
18-10-2013, 02:43 AM
ஆதி கவிதை எழுதினாலும் எழுதினார், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது.

அதற்குக் காரணம் ஐஸ்கிரீம் அல்ல...சூடும் குளிரும் இதமுமாய் உருகிவழியும் வார்த்தைகள்

ஜான்
18-10-2013, 02:44 AM
ஆதி கவிதை எழுதினாலும் எழுதினார், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது.

அதற்குக் காரணம் ஐஸ்கிரீம் அல்ல...சூடும் குளிரும் இதமுமாய் உருகிவழியும் வார்த்தைகள்

மும்பை நாதன்
18-10-2013, 03:00 PM
அதற்குக் காரணம் ஐஸ்கிரீம் அல்ல...சூடும் குளிரும் இதமுமாய் உருகிவழியும் வார்த்தைகள்

உண்மைதான் ஜான்.