PDA

View Full Version : பரிணாமம்

ஜான்
03-12-2012, 11:25 AM
இயல்பு மாறிப்

போய்விட்டன எல்லாம் !

தெருவோர சாக்கடைப் பங்கிடுதலில்

பூனைகளை விரட்டாமல்

சமரசம் செய்துகொள்கின்றன

தெரு நாய்கள் !!

பச்சைக் கிளிகள்

கூண்டுக்கு வெளியே வந்து

முதலில் சாப்பிட

காத்துக் கிடக்கின்றன

அபார்ட்மென்ட் பூனைகள்!!

காய்ந்து போன கறித் துண்டுகளுக்காக

காத்துக் கிடக்கின்றன

ரத்த வாசனை மறந்து

பூனைகளாய்ப் போன

பூங்காப் புலிகள் ....

கொலை கொள்ளை வழிப்பறி என்று

செய்திகள் மின்னும்

செய்தித் தாளின்

மூன்றாம் பக்கம் மட்டும்

மாறுவதே இல்லை !!

மஞ்சுபாஷிணி
03-12-2012, 12:44 PM
மிக அற்புதமான வித்தியாசமான சிந்தனை பகிர்வு ஜான்....

மிருகங்களும் பக்*ஷிகளும் பரிணாம வளர்ச்சியில் ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக்கொடுக்கவும் உதவிடவும் முன் நிற்கின்றன..... கூண்டுப்புலி தன் தைரியம் மறந்து மனிதன் இடும் காய்ந்த கறித்துண்டுக்காக காத்துக்கிடப்பில் தொடர்ந்து.. உருவத்தில் பெரிய யானை மனிதனுக்காக பிச்சை எடுத்து அவன் வயிறு வளர்க்க தான் யாசிக்கிறது....

நம் பரிணாமம்.... இதோ இன்றும் கொள்ளை, கொலை, கற்பழிப்பு அதிகமாகிறதே தவிர குறையவில்லை... மனித நேயமும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மொத்தமாக மறைந்தேவிட்டது....

அருமையான பகிர்வுக்கு அன்புநன்றிகள் ஜான்.

கும்பகோணத்துப்பிள்ளை
03-12-2012, 02:52 PM
சில முரண்பாடுகளுடன் தாங்கள் பதிவு செய்துள்ள கவிக்கருத்து மிகவும் வலிமையானது!
சமரசம் - விலங்குகளுக்கு உணவுப்பிரச்சனைகளில் சமரசம் செய்துகொள்கின்றன (வளர்ச்சி அல்லது நிர்பந்தம் காரணம்)
ஆனால் மனிதர்களோ நல்லியல்புகளையும் நற்பண்கபுகளையும் சமரசம் (விட்டுகொடுத்தல்) செய்துகொள்கிறான்
அதனால் வயிற்றுப்பசிக்காக மட்டுமின்றி இன்னபிற காரணங்களுக்காகவும் வன்கொடுமைகள் செய்கிறான்

கொசுறு:

கலிமுத்திடுத்துதோல்லியோ! காலம் கெட்டுடுத்துண்ணா!
அராஜகம் பன்றா! கேட்பாரில்லை!

jayanth
05-12-2012, 02:44 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

ஜான்
05-12-2012, 04:22 AM
சில முரண்பாடுகளுடன் தாங்கள் பதிவு செய்துள்ள கவிக்கருத்து மிகவும் வலிமையானது!
சமரசம் - விலங்குகளுக்கு உணவுப்பிரச்சனைகளில் சமரசம் செய்துகொள்கின்றன (வளர்ச்சி அல்லது நிர்பந்தம் காரணம்)
ஆனால் மனிதர்களோ நல்லியல்புகளையும் நற்பண்கபுகளையும் சமரசம் (விட்டுகொடுத்தல்) செய்துகொள்கிறான்
அதனால் வயிற்றுப்பசிக்காக மட்டுமின்றி இன்னபிற காரணங்களுக்காகவும் வன்கொடுமைகள் செய்கிறான்

கொசுறு:

கலிமுத்திடுத்துதோல்லியோ! காலம் கெட்டுடுத்துண்ணா!
அராஜகம் பன்றா! கேட்பாரில்லை!

நன்றி கும்பகோணத்துப்பிள்ளை .....அழகிய பின்னூட்டம்

கொசுறு நல்லா இருக்கு!!!
உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துகள்

ஜான்
05-12-2012, 04:23 AM

நன்றி ஜெயந்த்