PDA

View Full Version : சிரிப்பு கனவு



nandagopal.d
01-12-2012, 03:11 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSUpeznjN_yyUTAeR16mcZq21bxtALQtC7M9wiUaAchy9MyE8zy



எதோ ஒரு விலங்கின் துரத்தலில்
மூச்சிரைக்க ஓடி வந்தேன்
நடு வழியில்
ஒரு எலி நிறுத்தி ஆசுவசபடுத்தி ஏன் என்றது.
விலங்கு துரத்துகிறது என்று
சொல்லி கொண்டுருந்த வேளையில்,
வந்தது பூனை
அதை பார்த்து எலி பயந்து ஓடியது நானும்
திடிரென விழித்தேன் "இச்சே ஒரு பூனைக்கு பயந்து விட்டேனே" என்று திரும்பி படுத்தேன்
அகப்படவே இல்லை அந்த பூனையும் எலியும்

jayanth
02-12-2012, 02:36 AM
பூனை குறுக்கே சென்றால் பயந்து அவ்வழி தாண்டாமல் செல்பவர் எத்தனையோபேர் இருக்கின்றார்களே...
கனவில் வந்த பூனையை கண்டு பயப்படாமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை...!!!

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

கீதம்
02-12-2012, 09:21 PM
அரண்டவன் கண்ணுக்கு பூனையும் புலியானது போலும். :sprachlos020:

விழித்தபின் அசட்டு சிரிப்பை உதிர்த்தாலும், கனவில் விதிர்த்தது மெய்தானே...

கனவைக் கவிதையாக்கியது அழகு. பாராட்டுகள்.

ஜானகி
03-12-2012, 12:24 AM
வாழ்க்கையில் வரும் பிரச்சனைக்கண்டு ஓடுவதைக் குறிப்பிடுகிறீர்களா.....வேடிக்கைதான் ! வாடிக்கையும்தான்...!