PDA

View Full Version : என்ன வாழ்க்கை இது...?



கலைவேந்தன்
01-12-2012, 01:59 PM
என்ன வாழ்க்கை இது...?

வாழ்நாள் முழுதும் நான்
வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்..

எண்ணற்ற எதிரிகள்
என்னெதிரில் காத்திருக்க
புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்...

விண்ணில் மிதப்பதாய்
வீண்கனவு பலகண்டேன்...
புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்..

கண்விழித்தேன் காரிருளில்
கசக்கியபின் காண்கின்றேன்..
முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...

’’ ஊதித் தள்ளியபின்
அணைந்துவிடும் தீவர்த்தி
உலகை எரித்திடுமோ
உன்னுறுதி அழித்திடுமோ..?

இன்றுந்தன் கண்ணெதிரில்
நன்று நடம் ஆடிநிற்கும்
நச்சுக் கொடிகளையும்
நன்றாய் அறுத்தெறிவாய்..’’

நன்றாய் முன்வந்து
நான் வணங்கும் தெய்வங்கள்
நன்றே சொன்னதம்மா..
நம்பிக்கை பிறந்ததம்மா..

M.Jagadeesan
01-12-2012, 02:14 PM
எதிரிகளைவிட புண்ணாக்கும் நட்பு ஆபத்தானது. நம்மிடம் இருக்கும் அழுக்கு நமக்குத் தெரியாது;அடுத்தவன் முதுகில் இருக்கும் அழுக்கை அவசரமாகத் துடைப்போம்.முண்டிநிற்கும் முதுமை ஆபத்தானது அல்ல; புண்களில் நெளியும் புழுக்கள்தான் ஆபத்தானது. நச்சுக்கொடிகளை அறுத்தெறிந்து நாசம் செய்!- அருமையான கருத்துக்கள் கலைவேந்தன்! கவிதையும் படிப்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

கீதம்
01-12-2012, 09:30 PM
இத்தனை நாட்களை அலட்சியமாய்க் கழித்திருந்தாலும் இறுதி நாட்களிலாவது சுதாரிப்பு உண்டானதே. ஒவ்வொருவரும் முதுமையில்தான் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார்கள். தன் வாழ்க்கையை தானே ஒரு பார்வையாளராய் மீண்டும் மனத்திரையில் ஒலிபரப்பிப் பார்க்கும்போதுதான் செய்த தவறுகளும் தவறவிட்ட சரிகளும் புலப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய இளைஞராய் இருப்பவர்க்கும் ஒரு விழிப்பை, எச்சரிப்போடு எடுத்துரைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் கலைவேந்தன். ஜெகதீசன் ஐயா குறிப்பிட்டது போல் வாசிக்கவும் இனிமையான கவிதை.

கும்பகோணத்துப்பிள்ளை
01-12-2012, 10:07 PM
"முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமை"

மிகவும் யதார்த்தமான வரிகள்!
முதுமை எல்லோர்க்கும் தவிர்க்கமுடியாத இயல்பு!
ஆனால் முதிர்வுடனான (அறிவு அல்லது பட்டறிவு) முதுமையென்பது
தனக்கு கிடைத்த அனுபவங்களிள்
தனக்குத்தானே தன்னை நேர்படுத்திகொண்டவர்க்கே கிட்டும்!

"புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்"

"புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்"

இவ்வ(லி)ரிகள் அனுபவசிற(றாய்)ப்புகள்!

அருமை! பதிந்து பகிர்ந்தது நன்று! நன்றி!

ஜானகி
02-12-2012, 12:31 AM
பட்டறிவு என்பது இதுதானோ ?

முண்டிவரும் முதுமையை இவ்வறிவு முந்திக்கொண்டால் நலமே வாழ்க்கை !

கலைவேந்தன்
02-12-2012, 12:08 PM
எதிரிகளைவிட புண்ணாக்கும் நட்பு ஆபத்தானது. நம்மிடம் இருக்கும் அழுக்கு நமக்குத் தெரியாது;அடுத்தவன் முதுகில் இருக்கும் அழுக்கை அவசரமாகத் துடைப்போம்.முண்டிநிற்கும் முதுமை ஆபத்தானது அல்ல; புண்களில் நெளியும் புழுக்கள்தான் ஆபத்தானது. நச்சுக்கொடிகளை அறுத்தெறிந்து நாசம் செய்!- அருமையான கருத்துக்கள் கலைவேந்தன்! கவிதையும் படிப்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

கலைவேந்தன்
02-12-2012, 12:10 PM
இத்தனை நாட்களை அலட்சியமாய்க் கழித்திருந்தாலும் இறுதி நாட்களிலாவது சுதாரிப்பு உண்டானதே. ஒவ்வொருவரும் முதுமையில்தான் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார்கள். தன் வாழ்க்கையை தானே ஒரு பார்வையாளராய் மீண்டும் மனத்திரையில் ஒலிபரப்பிப் பார்க்கும்போதுதான் செய்த தவறுகளும் தவறவிட்ட சரிகளும் புலப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய இளைஞராய் இருப்பவர்க்கும் ஒரு விழிப்பை, எச்சரிப்போடு எடுத்துரைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் கலைவேந்தன். ஜெகதீசன் ஐயா குறிப்பிட்டது போல் வாசிக்கவும் இனிமையான கவிதை.


வயதானபின் தான் இத்தனை ஞானோதயம் கீதம்.. நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு..!

கலைவேந்தன்
02-12-2012, 12:12 PM
மிகவும் யதார்த்தமான வரிகள்!
முதுமை எல்லோர்க்கும் தவிர்க்கமுடியாத இயல்பு!
ஆனால் முதிர்வுடனான (அறிவு அல்லது பட்டறிவு) முதுமையென்பது
தனக்கு கிடைத்த அனுபவங்களிள்
தனக்குத்தானே தன்னை நேர்படுத்திகொண்டவர்க்கே கிட்டும்!

உண்மைதான். அந்த அனுபவங்களைப் பெறாமலேயே மரித்துவிடும் முதியோர்களும் உண்டுதானே கும்பகோணத்துப் பிள்ளை..? பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே.

கலைவேந்தன்
02-12-2012, 12:13 PM
பட்டறிவு என்பது இதுதானோ ?

முண்டிவரும் முதுமையை இவ்வறிவு முந்திக்கொண்டால் நலமே வாழ்க்கை !

ஆம்.. ஜானகி அவர்களே... மிக்க நன்றி.

lenram80
05-12-2012, 05:53 PM
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்..

முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...

யோக்கியனை மட்டும் காட்டும் கண்ணாடியும்
முதுமை கடக்காத உடம்பையும் எவ்வாறு பெறுவது?

வாழ்த்துகள் கலை!

கலைவேந்தன்
08-12-2012, 01:57 AM
மிகவும் நன்றி லெனின்.

குணமதி
08-12-2012, 02:06 AM
கெட்டபின்பு ஞானி!

அழகிய ஆசிரியப்பா வடிவம்!

பாராட்டுகிறேன்.

கலைவேந்தன்
26-01-2013, 06:23 AM
மிகவும் நன்றி குணமதி..!