PDA

View Full Version : மீண்டும் ஒரு மழை காலம்



nandagopal.d
30-11-2012, 01:27 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR3cAoDsiNlg9V4wp37OSYOiurItiQzjOTM-JhqD2YeP_-PwGwHew

அனலை
தன்னுள் இழுத்து கொண்டது
சூரியன்
அந்தி நேர வரவேற்ப்புக்கு,
திடிரென
சாவு ஊர்வலத்தின் சர வெடியாய்
மேகங்களின் சத்தம்
சிறிது நேரம்
காற்றின் பஞ்சாயத்தில்
மழை தூளி
உணவு கிடைத்த சந்தோஷத்தில்
மண்
நனையாத இடம் தேடின
மனித உடல்கள்
நனைந்ததை மறைத்து கொண்டு,

தன் இருப்பிடத்தில் இருந்து
எட்டி பார்த்து எக்காளமிட்ட்டது
தவளை
மழைக்கு பயந்து ஓடும் மனிதனை பார்த்து

சேற்றை வாரி இறைத்த வாகனம்
அறிவித்தது தன் வேகத்தை

வேலை கெட்டு விட்டதென்று
கவலையுடன் சிலர்
ஆனாலும் சந்தோஷத்தில்,
கப்பல் செய்ய கற்றுத்தருகின்றன.
குழந்தைகள்

சில நாழிகைகள்
தன் கவலையெல்லாம்
கொட்டி தீர்த்து விட்டு
வெள்ளை ஆடை அணிந்தது
மேகம்

lenram80
05-12-2012, 06:37 PM
" வெள்ளை ஆடை அணிந்தது மேகம் !"

சுயநலமில்லா அன்னை தெரசாவை பார்த்துத் தான் இப்படி வெள்ளை ஆடை உடுத்தியதோ?

அது சரி.. நமது அரசியல் வாதிகளும் வெள்ளையாய் திரிகிறார்களே? அது ஏன்?

brucelee
19-12-2012, 08:42 AM
Arumai:)

கும்பகோணத்துப்பிள்ளை
19-12-2012, 05:57 PM
காட்சி விரிப்பும்
குறிப்பேற்றமும்
நன்றாகவிருக்கிறது!
ஆரம்பம் சடபுடா
வென்மையில் அமைதி
இறுதியில்
பாராட்டுகள்!

jayanth
20-12-2012, 02:19 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

முரளி
20-12-2012, 08:45 AM
"நனையாத இடம் தேடின
மனித உடல்கள்
நனைந்ததை மறைத்து கொண்டு"

வெளுத்து கட்டி விட்டீர்கள், வெள்ளை ஆடை அணிந்த மேகம் போல்

நன்றி.

A Thainis
21-12-2012, 07:15 AM
நந்தகோபால் உங்களின் மீண்டும் ஒரு மழைக்காலம் என்ற இந்த கவிதை சாரல் சொற்களை கொண்டு மிக நேர்த்தியாக எங்களது உள்ளங்களில் கவிமழை பொழிகிறது வாழ்த்துக்கள்.

ஆதி
21-12-2012, 08:12 AM
நல்லா இருக்கு நந்த கோபால் தொடருங்கள், வாழ்த்துக்கள்