PDA

View Full Version : தொப்புள் கொடி உறவு



nandagopal.d
28-11-2012, 03:01 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRtUknlX2MncQ1Hmbf0y674u-9PS-M6c6FtcgMs8VTp82C_iOsfcg

காதல்
பித்து பிடித்த,
ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,
தன்னால்

எதுவும் செய்ய இயலாது
பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்
அகற்றி விட்டு,
தொலைந்து விட வேண்டும்
என்ற முனைப்புடன்

திரும்புகையில்

எதேச்சையாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப்ப் படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........

ந.க
28-11-2012, 05:44 PM
அம்மாவின் முத்தம்
உன்னை எமனிடமிருந்தும் மீட்கும் ,
எவரிடமிருந்தும் காக்கும்,

அந்த முத்தம் ஒன்றுக்குத்தான் உலகில் தேவலோகத்தின் சத்துண்டு...

வாழ்க அன்னை புகழ்மாலை செய்த நீவிர்.
நன்று உமது புதுச் சொல்லோவியம்..........

jayanth
29-11-2012, 02:21 AM
அம்மவின் ஒரு முத்தம்...

சகல தொல்லைகளுக்கும் நிவாரணி...!!!

A Thainis
29-11-2012, 07:30 PM
அம்மாவின் முத்தத்தில் மொத்த கவிதையும் சிறப்பு பெற்றது.

கீதம்
29-11-2012, 09:50 PM
எந்த மகனும் தாயின் பிரிவால் தற்கொலை செய்துகொள்வதில்லை. தாயின் அன்பு அத்தகையது. எத்துயர் வந்தாலும் போராடி வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற எண்ணத்தை முளையிலேயே பிள்ளையிடம் ஊட்டிவளர்ப்பவள். காதல் பித்தால் அப்பிள்ளை தன் உயிரை மாய்த்துக்கொள்வதை தாங்கிக்கொள்வாளா? வாழ்வின் துயரனைத்தும் தாயின் அரவணைப்பால் தொலைந்துபோகும் என்னும் அழகிய கருத்தைக் கவிதையாய் உரைத்தமை சிறப்பு. பாராட்டுகள் நந்தகோபால் அவர்களே.