PDA

View Full Version : குழந்தையின் நகைச்சுவை



nandagopal.d
27-11-2012, 11:10 AM
மரகிளையில் உட்கார்ந்த காக்கைகள்,
இரண்டும் பேசியதாம்.
அதில் ஒரு காக்கை,
நேற்று சாப்பிட்ட வடை நல்லாவேயில்லை என்று,
மற்ற காகம் சொன்னதாம். அந்த பாட்டி சுட்ட வடையா!
அது ரொம்ப பழசுப்பா என்று,

புத்தகத்தை பார்த்து கதை சொல்லி கொண்டு,
இருந்தது நகைச்சுவையோடு
ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பார்த்து ............

கீதம்
27-11-2012, 11:13 AM
பாட்டி வடை சுடும் கதைக்குதான் எத்தனை பரிணாமங்கள். வடை பழசு என்றாலும் குழந்தைகளின் நகைச்சுவை புதிதாய் ரசிக்கவைக்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுகள்.

rema
28-11-2012, 05:17 AM
பாட்டி வடை சுடும் கதைக்குதான் எத்தனை பரிணாமங்கள். வடை பழசு என்றாலும் குழந்தைகளின் நகைச்சுவை புதிதாய் ரசிக்கவைக்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுகள்.

ஆம்... குழந்தைகள் 16 அடி பாய்கிறார்கள் !

அனுராகவன்
28-11-2012, 05:45 AM
அருமையான சுவை:lachen001::lachen001::lachen001::lachen001:

jayanth
28-11-2012, 12:42 PM
ஊசிப் போன வடை குழந்தையின் நகைச்சுவையில் நன்றாக இருந்தது...!!!

arun
28-11-2012, 11:54 PM
ம் இந்த குழந்தைகள் தேறி விடுவார்கள் .. ரசனையாக இருந்தது பாராட்டுக்கள்

அமரன்
30-11-2012, 10:01 PM
பாட்டி சுட்ட வடையை சூடாக்கிப் பரிமாறி இருக்காங்க. சுவைக்கத்தான் செய்யுது. பாட்டியின் கைப்பகுவமா? சூடாக்கியதாலா?

ஆமா.. நரி எங்கே?

கலைவேந்தன்
02-12-2012, 12:33 PM
அடடா.. ஊசிப்போன வட போச்சே... :)

aren
06-12-2012, 03:40 AM
இப்போதெல்லாம் பாட்டி எங்கே வடை சுடுகிறார்கள். எல்லாமே எந்திரம் மயமாகிவிட்டது.