PDA

View Full Version : அன்பின் பரிமாற்றம்



nandagopal.d
26-11-2012, 02:47 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT3hvHH1FBQnQl3wMw2DwdJUFLLZVA1FOqeVHyoov0IqKgiixFYIg

புலர் பொழுதில்
தானியங்களை சுற்றி
சிறகடிக்கும் சிட்டு குருவி
துவங்குகின்றன
லேசான வெப்பத்தின்
வழியே அனுப்புகிறது
தன் ஈரமான காதலை

சுகந்தப்ரீதன்
26-11-2012, 04:29 PM
காட்சியை கவிதையாக்கி பறிமாறியவிதம் நன்று...:icon_b:

துவங்குகின்றன என்றவரி துவங்கும் என்றிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது..:)

கீதம்
29-11-2012, 10:26 PM
கவிதையின் கரு அழகு என்றாலும் சுகந்தப்ரீதன் குறிப்பிடுவது போல், கோர்த்த வார்த்தைகளின் இடமாற்றமோ தடுமாற்றமோ, கவிதையை முழுவதுமாய் ரசிக்கவியலாமல் செய்கிறது. வரிகளை இன்னும் மெருகேற்றினால் கவிதை இன்னும் சிறக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள்.

A Thainis
30-11-2012, 07:53 AM
துவங்கும் என மாற்றி வாசித்தால் அன்பின் பரிமாற்றம் அழகு கவிதையாய் விரிகிறது.