PDA

View Full Version : பொருளும் குறளும்!



குணமதி
26-11-2012, 08:18 AM
பொருளும் குறளும்!

பொருள் என்ற சொல்லுக்குப் பொருளாக அகராதியில் நாம் காண்பவை:
செல்வம், உண்மை, குணம், சொற்பொருள், தலைமை, பணம், கடவுள், வீடுபேறு, நூற்பயன்களுள் ஒன்று, பலபண்டம், கருத்து, மெய்ம்மை, அறிவு, கொள்கை, பயன், தன்மை முலியன.

பெற்ற குழந்தைகளை மக்கள் என்பது தமிழ் வழக்கு. நல்ல மக்களால் பொருள்கள் பலவும் வருகின்றன. நல்லவரல்லாத மக்களால் பொருள்கள் பலவும் இழக்கப்படுகின்றன. செல்வம் முதலிய பொருள்களைப் பெறக் காரணமான மக்களையே பொருளாகக் கருத வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இப்பொருள்படவே, “தம்பொருள் என்ப தம்மக்கள்” என்று கூறினார்.
உரையாசிரியர் பரிமேலழகர், “பொருள் செய்த மக்களைப் பொருள் என மதித்தார்" என்று எழுதுகிறார்.

அறுபத்து மூன்றாம் குறளாக அமைந்துள்ள அதன் முழு வடிவம்:

தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

கும்பகோணத்துப்பிள்ளை
26-11-2012, 10:24 AM
அதனால்தான் மக்கட்ச்செல்வம் என்றனரோ!
கல்யாணமானபின் வரும்!
கல்யாணமானபின் போகும்!

வரும்படியச்சொல்லலைங்கோ!

M.Jagadeesan
26-11-2012, 01:34 PM
பெற்ற மக்களைத் ," தம்பொருள் " என்று அழைத்த வள்ளுவர், அடுத்தவன் மனைவியைப் ," பிறன்பொருள் " என்று அழைப்பார்.

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். ( பிறனில் விழையாமை -141 )


வ.உ .சி. அவர்கள் எழுதிய ," திருக்குறள் அறப்பால் " என்னும் நூலில், தாங்கள் குறிப்பிட்ட குறளை

தம்பொருள் என்பவே தம்மக்கள் அப்பொருள்
தம்தம் வினையான் வரும்.

என்று பாடம் கொண்டு பின்வருமாறு பொருள் காண்கிறார்.

பொருள்: தமது மக்கள் தமது பொருள்.அம் மக்களாகிய பொருள் தம்தம் வினைகளுக்கு ஏற்றவாறு உண்டாகும்.

சிறப்புரை: முதற்சீர் , " தம்பொருள் " என்று குறிப்பிட்ட பிறகு, " அவர்பொருள் தம்தம் வினையான் வரும். " என்பது பொருத்தமான பொருள் ஒன்றும் தாராமையின், " அப்பொருள் " என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. அப்பொருள் என்பது நான்காஞ் சீர் ஆயக்கால், மூன்றாஞ் சீர், " தம்மக்கள் " எனவும்,இரண்டாம் சீர் , " என்பவே " எனவும் இருத்தல் வேண்டும். அப்பொழுது மூன்றாஞ் சீர் மோனையின்பம் பயத்தலையும் நோக்குக.

கருத்து : மக்கள் உளராதலும், இலராதலும், நன்மக்கள் பிறத்தலும், தீய மக்கள் பிறத்தலும் அவரவர் வினைகளின் பயன்களேயாம்.

ஜான்
27-11-2012, 12:24 AM
பொருள் என்று குறிக்கப்படுவது சொத்து என்பதைக் கொள்வதாகவே நான்
எண்ணுகிறேன்