PDA

View Full Version : காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 3.

குணமதி
25-11-2012, 02:33 PM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 3.

1. பலவகைத்துயரங்களும் நிரம்பிய உலகியல் வாழ்வில் ஒருவனுக்கு உயிர்த்துணையாம் நல்ல தலைவி ஒருத்தி வாய்ப்பது, சுழித்துச் செல்லும் வெள்ளத்தில்பட்டு துன்புறும் ஒருவனுக்கு வலிய மிதப்பு ஒன்று கையகத்து வந்து வாய்த்தது போல் நலமாகும்.

அருஞ்சுழி நீத்தத் தாழும் ஒருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பு. – பெருங்கதை 2.17.122

2. உருவத்தை விட்டு எத்தகு முயற்சியாலும் பிரிக்க முடியாதது நிழல். அதுபோல்,காதல் என்னும் உயரிய தன்மையும் காதல் உடையாரை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்றாகும்.

சுழலும் நெஞ்சொடு கைவளை சோருமால்
சுழலும் கண்களும் சூடுறு பொன்னென
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ. – சீவகசிந்தாமணி: 1511.

3. நீர் மேலும் மேலும் பெருக்கெடுத்து மோதுதலால் ஓங்கிய மணற்கரை அழியும். அதுபோல், காமம் மிகுந்து உள்ளத்தில் மோதுதலால் நாணம் சிதையவும் நேரிடும்.

வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில் லாதே. - குறுந்தொகை. 149.

4. நீங்காக் காதலால் நெஞ்சம் உருகி நைபவர் நிலைமை, திரட்டி வைக்கப்பெற்ற வெண்ணெய்க் குன்றத்தில் தீப்பிடித்துவிட்டாற் போன்றது.

கண்ணியற் காதலாள்தன், கன்னியின் உருவங் கண்டே
வெண்ணெயின் குன்றத் தீயால் வெதும்புகின் றதனோ டொத்தான்.
- சூளாமணி: 1020.

கீதம்
02-12-2012, 10:44 PM
1. பலவகைத்துயரங்களும் நிரம்பிய உலகியல் வாழ்வில் ஒருவனுக்கு உயிர்த்துணையாம் நல்ல தலைவி ஒருத்தி வாய்ப்பது, சுழித்துச் செல்லும் வெள்ளத்தில்பட்டு துன்புறும் ஒருவனுக்கு வலிய மிதப்பு ஒன்று கையகத்து வந்து வாய்த்தது போல் நலமாகும்.

அருஞ்சுழி நீத்தத் தாழும் ஒருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பு. – பெருங்கதை 2.17.122

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் என்கிறார் வள்ளுவர். வாழ்க்கை வெள்ளத்தை நீந்திக் கடக்க பற்றிக்கொள்ளும் மிதப்பாய் அதுவும் வலிய மிதப்பாய் நல்லதொரு மனைவியின் துணையை உவமையாய்க் கூறியுள்ளது ஒரு மனிதனின் வாழ்க்கையில், காதலோடும் கடமையோடும் மனைவி ஆற்றவேண்டிய பெரும்பங்கை ஆணித்தரமாய் எடுத்துரைக்கிறது.

2. உருவத்தை விட்டு எத்தகு முயற்சியாலும் பிரிக்க முடியாதது நிழல். அதுபோல்,காதல் என்னும் உயரிய தன்மையும் காதல் உடையாரை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்றாகும்.

சுழலும் நெஞ்சொடு கைவளை சோருமால்
சுழலும் கண்களும் சூடுறு பொன்னென
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ. – சீவகசிந்தாமணி: 1511.

காதலர் உள்ளத்துக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பை உருவத்துக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்போடு ஒப்பிட்டமை வெகு அற்புதம்.

3. நீர் மேலும் மேலும் பெருக்கெடுத்து மோதுதலால் ஓங்கிய மணற்கரை அழியும். அதுபோல், காமம் மிகுந்து உள்ளத்தில் மோதுதலால் நாணம் சிதையவும் நேரிடும்.

வன்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில் லாதே. - குறுந்தொகை. 149.

நீர்ப்பெருக்குக்குக் காமத்தையும் அதைக் கட்டுப்படுத்தும் கரைக்கு நாணத்தையும் உவமை காட்டும் அழகிய பாடல்.

4. நீங்காக் காதலால் நெஞ்சம் உருகி நைபவர் நிலைமை, திரட்டி வைக்கப்பெற்ற வெண்ணெய்க் குன்றத்தில் தீப்பிடித்துவிட்டாற் போன்றது.

கண்ணியற் காதலாள்தன், கன்னியின் உருவங் கண்டே
வெண்ணெயின் குன்றத் தீயால் வெதும்புகின் றதனோ டொத்தான்.
- சூளாமணி: 1020.

வெண்ணெய்க்குன்றத்தில் தீப்பிடித்தால் அத்தனை எளிதில் அணைத்திட இயலுமோ?

அறிந்திராத பல இலக்கிய உவமைகளைக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களை அறியச் செய்தும், அந்நாளைய புலமை கண்டு வியக்கச் செய்தும் தொடர்ந்து இலக்கியப் பகிர்வுகளைப் படைக்கும் தங்கள் சேவைக்குப் பாராட்டுகள் ஐயா.

குணமதி
19-12-2012, 01:53 PM
மிகவும் நன்றி.

ஜான்
22-12-2012, 09:48 AM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 3.

1. பலவகைத்துயரங்களும் நிரம்பிய உலகியல் வாழ்வில் ஒருவனுக்கு உயிர்த்துணையாம் நல்ல தலைவி ஒருத்தி வாய்ப்பது, சுழித்துச் செல்லும் வெள்ளத்தில்பட்டு துன்புறும் ஒருவனுக்கு வலிய மிதப்பு ஒன்று கையகத்து வந்து வாய்த்தது போல் நலமாகும்.

அருஞ்சுழி நீத்தத் தாழும் ஒருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பு. – பெருங்கதை 2.17.122

COLOR]

அருமை

குணமதி
22-12-2012, 04:22 PM
அருமை

நன்றி ஜான்.

கும்பகோணத்துப்பிள்ளை
23-12-2012, 12:52 AM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 3.

4. நீங்காக் காதலால் நெஞ்சம் உருகி நைபவர் நிலைமை, திரட்டி வைக்கப்பெற்ற வெண்ணெய்க் குன்றத்தில் தீப்பிடித்துவிட்டாற் போன்றது.

கண்ணியற் காதலாள்தன், கன்னியின் உருவங் கண்டே
வெண்ணெயின் குன்றத் தீயால் வெதும்புகின் றதனோ டொத்தான்.
- சூளாமணி: 1020.[/SIZE]

அனல்பட்டு அருகிய தேகம்!
மணல்வெளியில் மருகிய உள்ளம்!
காதலாள் நினைவிலே உருகிய நெஞசம்!
பாலைவனப்பரதேசிகள் நாங்கள்
எங்களுக்கு இவ்வரிகள் எவ்வளவு பொருத்தம்!

குணமதி
23-12-2012, 04:10 AM
அனல்பட்டு அருகிய தேகம்!
மணல்வெளியில் மருகிய உள்ளம்!
காதலாள் நினைவிலே உருகிய நெஞசம்!
பாலைவனப்பரதேசிகள் நாங்கள்
எங்களுக்கு இவ்வரிகள் எவ்வளவு பொருத்தம்!

ஒன்றரை யாண்டு உழன்றன் யானவ்
வன்பால் நிலத்து வளமிகு சவுதியில்
அக்கால் வலைப்பூ வசதிகள் அறிந்திலன்!
மக்கி மருகியே நேரங் கொல்லுவன்!
தொலைக்காட் சியுங்காண் பொலியுமே உண்டு!
இன்றோ பற்பல ஏந்துகள் பெருகி
அன்றுபோ லன்றி ஆக்கம் பலவுள!
என்றா லும்பிரி வியற்றிடுந் துன்பம்
நனகறிந் ததினால் நானதைத் தெரிவேன்
உங்கள் உணர்வுரை உன்னி
தங்கொளிர் நன்றி தகவுரைத் தனனே!