PDA

View Full Version : பசி



nandagopal.d
24-11-2012, 01:16 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5c04SVXdIiveT93oL2E__jRrT5XH1AcmiMRcoh-0t6xYAMkxssQ

வெளியுரின் புதுமையில்
தொலைந்தது
கையிலிருந்த காசு
பூ கூட,
வீழ்த்தி விடும்
பலவீனம்
சாலையோர பாதையில்
நடக்கையில்,
வயிற்றின் சூட்டில் வலி
ஒரு வாய் சோற்றுக்கு
அலைகின்ற
ஒரு நாயை போல
பழக்கமற்ற மனிதர்களை
பார்த்து
பரிதவிகிறது
வெட்கமற்ற வயிறு

கண்கள்
கண்ணாமுச்சி
ஆடி கொண்டு இருக்கிறது
உடலை
சாந்தி அடைய
செய்யலாமென்று
தெருவின் ஓரத்தில் இருந்த குழாயை
திறந்தால்
தண்ணீர் சொட்டுகிறது.
ஒரு துளி பட்டவுடன்
நாக்கு
தண்ணீர் சொட்டுகிறது
இன்னொரு துளி தண்ணீருக்கு

தனி மனிதனுக்கு
உணவு இல்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி
ஜகத்தினை அழிக்க வேண்டாம்
மனிதமற்ற ஜந்துகளை அழியுங்கள் என்று
மனதின் அலைகள் ஓடி கொண்டு இருக்க

அதி வேக
காற்றடித்து விட்டு
சிறிது
பெய்ய துவங்கியது
வானம்
அதன் கண்ணீரை ..........

A Thainis
24-11-2012, 07:15 PM
பசி இன்றும் நீடிக்கிறது என்றால், நாடுகள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து என்ன புண்ணியம், ஏழைகளின் பசியில் வங்கிகள் பணத்தால் நிரும்புவதா.
உணவின்றி உயிர் துடிக்க பஞ்சு மெத்தையில் பலருக்கு உறக்கம், பட்டினி சாவு நீங்கி பசியற்ற உலகம் வேண்டும்.

கீதம்
24-11-2012, 10:42 PM
பழக்கமில்லா ஊரில், பழக்கமில்லா மனிதர்கள் மத்தியில் பசியால் தவிக்கும் வயிற்றுக்கு சமாதானம் தேட முயன்று தோற்றுப்போன மனத்தின் வெளிப்பாட்டை அருமையாக கவிதையாக்கிவிட்டீர்கள். அனுபவத்தின் சாயல் புலப்படுகிறது கவிதையின் அடியாழத்தில். ஆனால் கவிதையின் கருவோடு முழுதும் ஒன்றவியலாதபடி தடுக்கின்றன முதல் மூன்று வரிகள். கையிலிருக்கும் காசை, வெளியூரின் புதுமையில் தொலைத்தது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயம் அல்லவா? தனிமனிதன் ஒருவன் நாளையைப் பற்றிக் கவலைப்படாமல் இன்றைய சுகத்துக்காக பணத்தை செலவு செய்துவிட்டு சமுதாயத்தைக் குறை சொல்லி என்ன பயன் என்றே எண்ணத்தோன்றுகிறது. கவிதையை சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. எனினும் பசியின் கொடுமையை சுயபச்சாதாபத்தோடு வரிக்கும் வரிகள் அருமை. பாராட்டுகள்.

jayanth
26-11-2012, 02:26 AM
"தெருவின் ஓரத்தில் இருந்த குழாயை
திறந்தால்
தண்ணீர் சொட்டுகிறது.
ஒரு துளி பட்டவுடன்
நாக்கு
தண்ணீர் சொட்டுகிறது
இன்னொரு துளி தண்ணீருக்கு"

இரசிக்க வைத்த வரிகள்...!!!

lenram80
05-12-2012, 06:11 PM
பசி தான் ஆசைக்குக் காரணம். ஆசை தான் அறிவுக்கு காரணம். அறிவு தான் வளர்ச்சிக்குக் காரணம். வளர்ச்சி தான் வாழ்க்கைக்குக் காரணம். ஒருத்தன் வாழ்து தான் அடுத்தவன் பசிக்குக் காரணம்.

ஆக, பசி நல்லதே!

வானம் பொழிவது இருக்கட்டும்! இனிமேல் புது இடங்களுக்கு செல்லும் முன் தண்ணீர் பாட்டில் வாங்கிச் செல்லுங்கள் :-)