PDA

View Full Version : நகைச்சுவை கவிதை....2

rema
21-11-2012, 06:54 AM
ஏகாந்தம்

நீளும் மின்வெட்டால்
மின்னொளியை மறந்து
மெழுகுவர்த்தியின் ஒளியில்
ஏகாந்திருந்த வேளையில்...
திடுக்கென எரிந்து
எரிச்சலூட்டியது மின்விளக்கு

aren
21-11-2012, 07:13 AM
இக்காலத்திலிருந்து கற்காலத்திற்கு போய்விட்டீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது.

கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.

சுகந்தப்ரீதன்
21-11-2012, 02:06 PM
ஏகாந்தம் கவிதையில் எதார்த்தம் அருமை..:lachen001:

jayanth
21-11-2012, 02:11 PM
திடுக்கென எரிந்து
எரிச்சலூட்டிய மின்விளக்கு
கண்களைப் பழுதாக்கவில்லையே...!!!

கவிதை நன்றாக இருக்கின்றது...!!!

கீதம்
29-11-2012, 10:40 PM
மின்சாரத்தால் நாம் பெற்றவை அதிகம், இழந்தவையும் அதிகம். முக்கியமாய் குடும்ப நேரங்களை இழந்துவிட்டோம். அத்தகு அற்புதத் தருணங்களை மீண்டும் உருவாக்கித்தரும் முன்னிரவு மின்வெட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்திருக்கும்வேளையில் திடுமென மின்சாரம் வந்துவிட்டால் எரிச்சல்தானே வரும்! தொலைக்காட்சியையும், கணினியையும் நாடிக் கலைந்துவிடும் குடும்பம்! மறுபடி ஆளுக்கொரு தீவாய் வாழ்க்கை!

மின்வெட்டு என்னும் எதிர்மறையில் ஏகாந்த மகிழ்வெனும் நேர்மறை சிந்தனை. அழகிய அனுபவத்துக்கும் அசத்தல் கவிதைக்கும் பாராட்டுகள் ரேமா.

A Thainis
30-11-2012, 07:49 AM
பல செய்திகளை மக்கள் துன்பங்களை நகைச்சுவை சிலேடையில் கவிதந்த கவிக்கு வாழ்த்துக்கள்

rema
02-12-2012, 02:38 AM
இக்காலத்திலிருந்து கற்காலத்திற்கு போய்விட்டீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது.

கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.
நன்றி ஆரென் !

rema
02-12-2012, 02:39 AM
ஏகாந்தம் கவிதையில் எதார்த்தம் அருமை..:lachen001:

நன்றி சுகந்தப்ரீதன் !

rema
02-12-2012, 02:44 AM
திடுக்கென எரிந்து
எரிச்சலூட்டிய மின்விளக்கு
கண்களைப் பழுதாக்கவில்லையே...!!!

கவிதை நன்றாக இருக்கின்றது...!!!
கண்களையல்ல !:lachen001: மனதை தான் கொஞ்சம் பாழாக்கியது !
நன்றி ஜெயந்த் !

rema
02-12-2012, 02:47 AM
மின்சாரத்தால் நாம் பெற்றவை அதிகம், இழந்தவையும் அதிகம். முக்கியமாய் குடும்ப நேரங்களை இழந்துவிட்டோம். அத்தகு அற்புதத் தருணங்களை மீண்டும் உருவாக்கித்தரும் முன்னிரவு மின்வெட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்திருக்கும்வேளையில் திடுமென மின்சாரம் வந்துவிட்டால் எரிச்சல்தானே வரும்! தொலைக்காட்சியையும், கணினியையும் நாடிக் கலைந்துவிடும் குடும்பம்! மறுபடி ஆளுக்கொரு தீவாய் வாழ்க்கை!

மின்வெட்டு என்னும் எதிர்மறையில் ஏகாந்த மகிழ்வெனும் நேர்மறை சிந்தனை. அழகிய அனுபவத்துக்கும் அசத்தல் கவிதைக்கும் பாராட்டுகள் ரேமா.
அருமையாய் சொன்னீங்க கீதம் ! அழகிய புரிதலுடன் ஆன மறுமொழிக்கு மிக்க நன்றி கீதம் !

கலைவேந்தன்
02-12-2012, 12:24 PM
எரிச்சலூட்டும் மின்சாரம்.. :) ரேமாவின் குறும்பு கொஞ்சம் அதிகம் தான்.. நல்லா இருக்கு ரேமா..

lenram80
05-12-2012, 05:49 PM
நகைக்க என்ன இருக்கு?
நல்லா தானே இருக்கு! :-)

rema
24-03-2013, 03:57 AM
எரிச்சலூட்டும் மின்சாரம்.. :) ரேமாவின் குறும்பு கொஞ்சம் அதிகம் தான்.. நல்லா இருக்கு ரேமா..

நன்றி கலையண்ணா !!

rema
24-03-2013, 03:58 AM
நகைக்க என்ன இருக்கு?
நல்லா தானே இருக்கு! :-)

நன்றி lenram80 !!

rema
24-03-2013, 03:59 AM
நகைச்சுவை கவிதை....2

பூமி தினம்..
இரவு ஒரே நேரம்
அனைவரும் ஒன்றாய்

அத்தியாவசிய விளக்குகள்
மட்டுமே எரித்து பூமி தினம்
அனுசரிப்போமென்ற அறிவிப்பு !

பொறுப்புள்ள பிரஜையாய்
நான் தயாராய் இருக்க.,
திடுமென மின்வெட்டு வந்து

அதீத பொறுப்புடன்
அணைத்தது அனைத்தையும் !!

கும்பகோணத்துப்பிள்ளை
24-03-2013, 04:41 PM
நாங்களாய் விளக்கனைத்தால்
அது சேமிப்பு!
அங்கே இனிமையாய் அணைக்கும்
குடும்பவிளக்கு!
நீங்களாய் விளக்கனைத்தால்
அது மின்வெட்டு!
எரிச்சலில் எரிந்தது குடும்பவிளக்கு...
என்ங்க!... கையஎடுங்க!
கச கசன்னு மனுசி இங்க எரிஞ்சுபோறா!...
நீங்க வேற! சும்மா இருக்காம!..

கீதம்
25-03-2013, 12:39 AM
நகைச்சுவை கவிதை....2

பொறுப்புள்ள பிரஜையாய்
நான் தயாராய் இருக்க.,
திடுமென மின்வெட்டு வந்து

அதீத பொறுப்புடன்
அணைத்தது அனைத்தையும் !!

நம் பொறுப்புணர்ச்சி மேல் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை!:icon_ush:

கவிதை நன்று ரேமா. துன்பம் வரும்வேளையில் சிரித்துவைப்போம்....:)

ஜான்
25-03-2013, 01:37 AM
சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பதுதான் நிஜமான நகைச்சுவை

நன்று