PDA

View Full Version : எச்சமும் மிச்சமும்



nandagopal.d
20-11-2012, 04:41 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQyrewzlXK2IE2MQgQGycxyg5m4IeA8NwKNxtWafpumeD_tXF3d
காமத்தின் எச்சமும்
காவலுக்கு இருந்த
மின்மினி பூச்சியும் பறந்தது
ஒரு இரவில்
வெள்ளை படுக்கையில்
சருகு ஆகி போன மல்லிகையின் சரங்கள்
சிதிலடைந்த சிகரெட் துண்டின்
அடைக்கப்பட்ட நிகோடின் சாம்பலும்
காய்ந்து போன கறை உதட்டு சாயமும்
வன்முறையில் தெளிக்கப்பட்ட
உயிரின் துளியும்
ஏதோ ஒரு நிலையில்
உடைப்பட்ட மது பாட்டிலிருந்து
கடைசி துளி வெளியேறியது

ந.க
20-11-2012, 05:07 PM
பலமிழக்கும் படிநிலைகள் ..
மனிதனைக் கடித்து
கடைசித் துளி வரை
உறிஞ்சிப் போகும் அவலத்தை
இங்கே புகையவிட்டீர்கள்.......நன்றி.

சுகந்தப்ரீதன்
21-11-2012, 02:52 PM
எச்சமும் மிச்சமும் மனிதவாழ்வின் சொச்சத்தின் உச்சமாய்..!!
தொடருங்கள் நந்தகோபால்..!!:icon_b: