PDA

View Full Version : பேயாகிப்போன என் கவிதை



shibly591
20-11-2012, 03:55 PM
திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
காகிதமொன்றை எடுத்து
கவிதை எழுதுகிறேன்..
இல்லை இல்லை
கவிதை போல
ஏதேதோ எழுதுகிறேன்..

கனவுகள் நிறைந்த என்
தூக்கமொன்று
காணாமல் போனது பற்றி..

நேற்றைய தோல்வியின்
நெருடல்கள் பற்றி..

நானும் நீங்களும்
தொலைத்துவிட்ட
வசந்த காலங்கள் பற்றி..

கனவாகிவிட்ட
அவளின் அருகாமை பற்றி..


இன்னும்
உங்களுக்கும் எனக்கும்
புரியவே புரியாத சில
பின்நவீன கருதுகோள்கள் பற்றி..

நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
கவிதை போல ஏதேதோ எழுதுவது
தற்கொலைக்கு ஒப்பானது

உண்மையின் சுயம் முடிச்சவிழும்
உண்மையான நேரம் அது..

எழுதி முடிக்கும் தருணம்
கிட்டத்தட்ட
இறந்து போய்விட்டேன்..

இனி பின்னிரவில் விழித்தெழுந்தால்
எதுவுமே எழுதப்போவதில்லை

என் கவிதையை தூக்கி
இரவின் இடுக்குகளில் எறிகிறேன்..
பல்லைக்காட்டி சிரிக்கிறது
ஒரு பேயை போலவே...

-நிந்தவூர் ஷிப்லி-

ந.க
20-11-2012, 04:45 PM
உங்கள் பதிவில்
ஒரு தர்க்கிக்கும் உண்மை,

-உணர்வுப் பேயை எழுப்பி
வரிகளில் உசுப்பேத்தி
உருவாக்கப்பட்ட படைப்பு
பேயாய்ப் பயமுறுத்துதல் ,

ஒரு நல்ல
உளவியல் மேதாவித்தனம்..
மேலும்,
இது நன்றாக செதுக்கப்பட்டு,
முடிவில் வெடித்துக் கிழம்பும்
உண்மையின் சுயம்-
பேயின் பல்லின்
இடுக்கில் ஆணியடித்துச் சொருகப் பட்டுள்ளது. ..

அது சிரிக்கின்றது!!!!!!!

என் இதயத்தில் ஆயிரம் முறை கைதட்டிக் கொள்கின்றேன்:

'சுயம் முடிச்சவிழும்'

இந்த வரியின்/சொற்றொடர் மூலம் உங்கள் பதிவு உச்சத்தைத் தொட்டுவிடுகிறது......பாராட்டுக்கள்! :icon_b:

nandagopal.d
20-11-2012, 05:10 PM
திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
காகிதமொன்றை எடுத்து
கவிதை எழுதுகிறேன்..
இல்லை இல்லை
கவிதை போல
ஏதேதோ எழுதுகிறேன்..

இதை போன்று நிறையமுறை எனக்கு கூடஇரவில் நடந்து உள்ளது
யாதர்த்தமான வரிகள் நண்பரே

கீதம்
20-11-2012, 11:33 PM
நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
கவிதை போல ஏதேதோ எழுதுவது
தற்கொலைக்கு ஒப்பானது

ஒட்டுமொத்த கவிதையின் கனத்தையும் தன்னுள் தக்கவைத்துக்கொண்டிருக்கும் வரிகள்.

பின்னிரவுக் கவிதையின் வடிவம் முழுமையுறாமல் சிதைந்துபோகும் உணர்வை அழுந்தச் சொன்ன வரிகள்.

பேயைப் போலச் சிரிக்கும் கவிதையும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் ஷிப்லி.

ஜானகி
21-11-2012, 03:28 AM
நினைப்பதை எழுதத் தெரியாததால்தான், கவிதையைப் பாராட்டவும் வார்த்தைகள் வரவில்லை.....நன்று

தாமரை
21-11-2012, 03:47 AM
திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
---
----


நானும் நீங்களும்
தொலைத்துவிட்ட
வசந்த காலங்கள் பற்றி..
.............
.............

இன்னும்
உங்களுக்கும் எனக்கும்
புரியவே புரியாத சில
பின்நவீன கருதுகோள்கள் பற்றி..

நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
கவிதை போல ஏதேதோ எழுதுவது
தற்கொலைக்கு ஒப்பானது

உண்மையின் சுயம் முடிச்சவிழும்
உண்மையான நேரம் அது..

எழுதி முடிக்கும் தருணம்
கிட்டத்தட்ட
இறந்து போய்விட்டேன்..

இனி பின்னிரவில் விழித்தெழுந்தால்
எதுவுமே எழுதப்போவதில்லை

என் கவிதையை தூக்கி
இரவின் இடுக்குகளில் எறிகிறேன்..
பல்லைக்காட்டி சிரிக்கிறது
ஒரு பேயை போலவே...

-நிந்தவூர் ஷிப்லி-

பின்னிரவில்
திடுக்கிட்டு எழுந்தும்
எங்கள் நினைவு வரக்கண்டு
சந்தோஷப்படுவதா??
கவலைப்படுவதா???

புரியாமல் விழிக்கிறேன்.
திடுக்கிட்டு எழுந்து
எழுதிய கவிதை
இதுவோ இல்லை
வேறும் எதுவோ..

இதுவென்றிருந்தால்
எறிந்த இடம்
இரவின் இடுக்கென்றால்..
இத்தனை கைவிளக்குகள்
இங்கெப்படி?

திடீரென கண்ட காட்சியில்
இத்தனைக் கேள்விகள்
என்னில்