PDA

View Full Version : ஒரு உயிரின் சாபம்



nandagopal.d
17-11-2012, 05:29 PM
ஒரு விபச்சாரியின் கதை,
ஆரவாரத்துடன்(துன்பத்தில்),
தொடங்கி அமைதியான(இன்பத்தில்)
கல்லறையில் முடிந்தது.
பிணத்தை எரிக்க,
யாவரும் இங்கு இல்லை
புழுக்கள் விழுந்த
உடலை புணர்வதற்கு
இனி எந்த கூட்டமும்,
தேடி வரபோவதில்லை,
என்றென்றும்,
தனிமையின்,
ஆனந்த தூக்கத்தில் அவள் .............

கீதம்
18-11-2012, 03:36 AM
விலைமகளின் தாய் இறந்தால் வீடுதேடிவருமாம் சனம். விலைமகளே இறந்துவிட்டால் தூக்கவும் ஆளிருக்காதாம். எங்கோ படித்தது...மனம் தொடும் கருவுடனான கவிதைக்குப் பாராட்டுகள் நந்தகோபால் அவர்களே...


சில நாட்களுக்கு முன் இதே கருவைக்கொண்டு ரௌத்திரன் அவர்கள் எழுதிய ஒரு விலைமகளின் இறுதி ஊர்வலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/30409-ஒரு-விலைமகளின்-இறுதி-ஊர்வலம்!)கவிதை நினைவுக்கு வருகிறது. அவலம் நிறைந்த அவள் வாழ்க்கையை ஆழமாகக் காட்டியிருப்பார்.

nandagopal.d
19-11-2012, 04:26 PM
கவிதையை படித்தேன் மிக அருமை நண்பரே

கோபாலன்
19-11-2012, 06:32 PM
கவிதை கனக்கிறது. நல்ல படைப்பு. :)

மஞ்சுபாஷிணி
20-11-2012, 04:50 AM
உயிரோடு இருக்கும் வரை அவள் உடலை ஆண்கள் தின்று தீர்த்தனர்.. பெண்கள் சபித்து தீர்த்தனர்... இறந்தப்பின்னரோ மண் தின்று தீர்த்தது.... இருக்கும் வரை ஓய்வில்லாமல் வேலை.. இறந்தப்பின்னர் தனிமையின் நிம்மதி... அருமையான கவிதை வரிகள்... மனம் கனக்கவைத்த வரிகள்...

அன்புவாழ்த்துகள் பகிர்வுக்கு...