PDA

View Full Version : காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 2



குணமதி
15-11-2012, 12:20 PM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 2


1. தலைவனுடன் மாறுபட்டு நின்று துயரூட்டும் தலைவியிடம், "உடலும் உயிரும் ஒன்றாகித் தலைமட்டும் இரண்டாகிய பறவையின் இரண்டு தலைகளுள் ஒன்று மற்றொன்றைத் தாக்கிப் போரிடும் தன்மைத்தாக உன் புலவி (ஊடல்) உள்ளது" என்று தலைவன் கூறுகிறான்.

ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ. - கலி.89.

2. தலைவன் தலைவியர் ஆகிய இருவரின் செருக்குமிக்க செயலால் நிகழ்ந்த பூசலால், அவர்களுள் ஒருவரை மட்டுமே ஒரு நல்லபாம்பு கடித்தாற் போல தன் அல்லல் நெஞ்சம் மிகவும் கலக்கத்தை அடைகின்றது என்று தலைவி வருந்துகிறாள்.

இருபேராண்மை செய்த பூசல்
நல்ல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. - குறுந். 43.

3. நீரின் ஓட்டத்தில் இடையீடு பட்டுக் கிடக்கும் நுண்ணிய மணல் அதுபோல், ஒருவேளை விட்டு ஒருவேளை உண்ணும் நிலைமையில் தன்னைக் கொண்ட கொழுநன் குடும்பம் வறுமையுற்றாலும், செல்வம் மிக்க தன் தந்தையின் வீட்டுச் செழிப்பான உணவைப் பண்புடைய தலைவி நினையாள்.

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப்
பொழுது மறுத்துண்ணும் சிறு மதுகையளே.- நற்றிணை.110.

4. ஒரு காலத்தில் இன்பத்தையும் மற்றொரு காலத்தில் துன்பத்தையும் தலைவிக்குத் தரும் தலைவனின் செய்கை, இனிய காற்றை வழங்கிய வானமே, கொடிய தீயையும் வழங்கியது போன்றது.

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் துன்பமும் ஆகின்று மாதோ
... ... ... ...
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே - நற்றிணை.294..

-------------------------------------------------------------------------------------------------------------------------------

சுகந்தப்ரீதன்
15-11-2012, 02:26 PM
புரிதலற்ற ஊடலின் உள்ளகிடங்கை கலித்தொகையும் குறுந்தொகையும் உணர்த்துகிறது..!!
நற்றிணையோ பக்குவமான புரிதலை வெளிப்படுத்தி வாழ்வியலை வளப்படுத்துகிறது..!!
தொடருங்கள்... குணமதி அண்ணா..!!:icon_b:

இலக்கிய காதலை ஒரே திரியில் தொடரலாமே..?!!

கீதம்
18-11-2012, 03:23 AM
மிகவும் வியக்கவைத்த வரிகள். இலக்கியக் காதல் பற்றி அறிந்துகொள்ள இன்னும் வேட்கை மிகுகிறது.

தொடர்ந்து தாருங்கள். தங்களுடைய முயற்சிக்குப் பாராட்டும் நன்றியும்.

கோபாலன்
18-11-2012, 03:17 PM
ஊடலும் ஊடல் நிமித்தமுமாய் காதல் அழகாய் இருக்கிறது. மேலும் தொடருங்கள் :)

சொ.ஞானசம்பந்தன்
20-11-2012, 05:06 AM
நல்ல முயற்சி : பாராட்டுகிறேன் .

nandagopal.d
20-11-2012, 05:00 PM
நன்றாக இருக்கு தொடர்ந்து தாருங்கள் இது போன்ற பதிவை அருமை

குணமதி
25-11-2012, 02:01 PM
பதிவைப் படித்துப் பின்னூட்டமிட்ட
சுகந்தப்ரீதன்
கீதம்
கோபாலன்
சொ.ஞானசம்பந்தன்
நந்தகோபால் ஆகியோர்க்கும்,
படித்துச்சுவைத்த மற்றையோர்க்கும்
மனமார்ந்த நன்றி.

குணமதி
25-11-2012, 02:09 PM
அடுத்த பகுதி விரைவில் தொடரும்.

ஆதி
25-11-2012, 03:36 PM
இதனை, பண்பலையில் ஒரு நிகழ்ச்சியாக்கலாமே, உங்களால் செய்ய இயலுமா குணமதி

ஜான்
26-11-2012, 03:58 AM
அருமையான உதாரணங்கள்

குணமதி
26-11-2012, 08:26 AM
நன்றி ஆதி.
நன்றி ஜான்.

பண்பலை நிகழ்ச்சியாக்க என்ன எப்படிச் செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒலிப்பதிவாக்கி உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினால் போதுமா? அப்படியானால் மின்னஞ்சல் முகவரியைத் தெரியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

கீதம்
26-11-2012, 08:48 AM
நன்றி ஆதி.
நன்றி ஜான்.

பண்பலை நிகழ்ச்சியாக்க என்ன எப்படிச் செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒலிப்பதிவாக்கி உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினால் போதுமா? அப்படியானால் மின்னஞ்சல் முகவரியைத் தெரியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

பண்பலைக்கான மின்னஞ்சல் முகவரி உட்பட பண்பலை தொடர்பாக தங்களுக்குத் தோன்றும் பல ஐயங்களை நிவர்த்தி செய்யக்கூடும் இந்தத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php/30374-பண்பலையில்-உங்கள்-குரல்-ஒலிக்க-என்ன-செய்யவேண்டும்-விளக்கப்படங்களுடன்). மேலும் விவரங்கள் வேண்டுமெனில் கேட்கத் தயங்காதீர்கள்.