PDA

View Full Version : தனிப்பட்ட கருத்து



குருதவசி
15-11-2012, 11:27 AM
காதல் முட்டாளின் நூலகம்
கல்விமானின் கொலைகூடம்
தலைவிதியின் மறுபெயர்
கடவுளின் கையாயுதம்
கவிகளின் பிறப்பிடம்
காவியங்களின் முதல்பகுதி
தெரிந்தே செய்த பிழை
எதிர்பார்த்த ஏமாற்றம்
மாயையின் விளையாட்டு
துன்பத்தின் இன்பவேடம்

ந.க
15-11-2012, 12:30 PM
கல்விமானின் கொலைகூடம் ....காதல், எப்படி? உங்களின் தனிப்பட்ட கருத்துக்கு, எண்ணப்பதிவுக்கு நன்றி.

கீதம்
17-11-2012, 08:16 AM
தனிப்பட்டக் கருத்து என்று தலைப்பிட்டுவிட்டதால் கருவைப் பற்றி எதுவும் விமர்சிக்க இயலவில்லை. எனினும் இக்கவிதையில் காதலைப் பற்றிய அனைத்து வரிகளும் எதிர்மறைக் கருத்துக்களைக் கொண்டிருப்பதன்மூலம் கவிதை எழுதிய நேரத்தில் கவிஞரின் மனநிலையை அறிய முடிகிறது. :)

காலம் மாறினால் கருத்துக்களும் மாறலாம். அப்போது தோன்றுவதையும் எழுதுங்கள். பாராட்டுகள்.

jayanth
19-11-2012, 04:35 AM
காதலில், அவரவர் மன நிலைக்கேற்ப இன்பமும் உண்டு... துன்பமும் உண்டு...!!!