PDA

View Full Version : நல்ல தீபாவளி ....!



govindh
14-11-2012, 10:18 PM
நிலவொளியில் தீபாவளி...
நிம்மதியில்லா தீபாவளி...!

அது-பட்டாசு சத்தம் அல்ல...
படபடக்கும்..... நம்
இதயத்து வெடிச் சத்தம்...!

நல்ல தீபாவளி-
நம் அனைவருக்கும்
அமைய வேண்டும்..!

அரசியல் -
அழகு ஆடை
அணிய வேண்டும்...!

அரக்க மனங்கள்... அழிந்து
அன்பு மனங்கள்... புரிந்து-

அகிலமெலாம்....
அமைதி அணிகலன்
அணிய வேண்டும்...!

சுவைமிகு உணவும்..
சுத்தமிகு பண்டங்களும்...
சுகாதாரமாகவும்...
சிக்கனப் பொருளாதாரமாகவும்...
சேதாரமில்லாமல்..
தாராளமாகக் கிடைக்க வேண்டும்....!

உள்ளக் கனவெல்லாம்....
உள்ளபடி நனவாக வேண்டுமெனில்....

ஊழல் அரக்கன் ஒழிய வேண்டும்...!
உழைப்பு சுரங்கம் கொழிக்க வேண்டும்...!

நல்ல தீபாவளி-
நம் அனைவருக்கும்
அமைய வேண்டும்..!

செல்வா
15-11-2012, 01:08 AM
நிலவொளியில் தீபாவளி...


நிலவொளியில் ??? தீபாவளி அமாவாசையன்று தானே வரும்?

தாமரை மாதிரி நிலவு+ஒளி+இல் (இல்லாத) அப்படி நு தப்பிக்க மாட்டீங்க நு நெனக்கிறேன்.

ஒரு வேளை இல்பொருள் உவமையணியா?

ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை.

காணி நிலம் கேட்ட பாரதிக்கே கடைசி வரை எதுவும் கெடைக்கல உங்களுக்கு ஆசை கொஞ்சம் அதிகம் தான்.

வாழ்த்துக்கள் கோவிந்த்.

கீதம்
15-11-2012, 05:04 AM
பண்டிகை சமயங்களில் ஒரு சாமான்யனின் இதயத்தில் உருவாகும் படபடப்பையும் பரிதவிப்பையும் ஒருங்கே காட்டிய கவிதை.

வேண்டும் யாவும் இல்லாவிடினும் வேண்டியவற்றில் ஒன்றிரண்டாவது நிறைவேற வாழ்த்துக்கள்.

நல்லதொரு மனத்தியல்பை வெளிப்படுத்தும் கவிதைக்குப் பாராட்டுகள் கோவிந்த்.

தாமரை
15-11-2012, 05:17 AM
தம்பி செல்வா!

சமாளிப்பு 1 :

தமிழன் தீபங்களை வரிசையா வைப்பது கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்றுதான். அதுதாங்க தமிழ் தீபாவளி..

சமாளிப்பு 2:

நிலவு ஒளி இல் - வாழ்க்கையில் நிலவ வேண்டிய ஒளி இல்லாத - .. அடுத்த வரியைச் சேர்த்துப் பார்த்தீங்கன்னா இது புரியும்.

சமாளிப்பு 3:

நில + ஒளி + இல் - நிலம் ஒளி இன்றிக் கிடக்குது - தமிழ்நாடு இருண்டு கிடக்குது என்பதைச் சொல்கிறார்

சமாளிப்பு 4 ஐத்தான் நீங்க சொல்லி இருக்கீங்க

நிலவெளி-இல்

நீங்க இன்னும் வளரணும் தம்பி...

உண்மையில் இன்றைய நரகாசுரன் ஊழலே ஆகும். அதை ஒழித்தால் நிஜமாவே தீபாவளிதான். சரியான கருத்து கோவிந்த்

govindh
15-11-2012, 09:33 PM
தவறினைச் சுட்டிக் காட்டி...
தடுக்கி விழுந்தவனை....
தட்டி எழுப்பி...
சமாளிப்பு-முதலுதவி
செய்த செல்வாவிற்கு
மிக்க நன்றி....!

கைக் கொடுத்து...
தூக்கி விட்டு...
காய*ங்க*ள் விரைவில்
ந*ன்கு ஆற வேண்டுமென*
நான்கு ச*மாளிப்பு மருந்திட்ட*
தாம*ரை அண்ணாவிற்கும்..
மிக்க நன்றி....!