PDA

View Full Version : ஆயிரம்



kulakkottan
14-11-2012, 05:05 PM
ஓரிரு நிமிட தேநீர் சந்திப்பு
சொல்லி தந்த துயரங்கள் நூறல்ல -ஆயிரம்

நான் பார்க்காத பக்கங்கள்
சுமக்காத சுமைகள் சுமந்து கொண்டு -ஆயிரம் பேர்

அவன் கூலியோ அவனைகூட
அன்று பசியாற்றாது ஆனாலும் -ஆயிரம் கனவு

விடிந்தது முதல் தேடுகிறான்
விடியுமா என விரைகிறான் -ஆயிரம் நோட்டுக்காய்

தீபங்கள் சுடர் பரவலாம்
தீ மட்டுமே பரவும் இவன் குடிலில் -அரை வயிற்றில்

நாளை அவன் கட்டை ஏறும்
நான் தொடர்வேன் என அவன் மகன் துயர் தொடர்வானோ

செல்வா
15-11-2012, 01:12 AM
குலக்கல்வி திட்டம் என்பது போல் இது
குலத்துயர் திட்டம்.
ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாத் தலைமுறைக்கும் ஒரே போல் இருப்பதில்லை
வாழ்க்கைச் சுழன்று கொண்டே இருக்கும். தலைமுறைகளில் அவர்கள் நிலை மாறும்.

தொடர்ந்து எழுதுங்கள் குளக்கோட்டன்.

கீதம்
15-11-2012, 05:50 AM
பண்டிகையின் நெருக்கத்தில் கழுத்தில் சுருக்குவிழும் குடிசைவாசிகளின் துயரம் பறைசாற்றும் வரிகள். செல்வா குறிப்பிடுவது போல் மாறலாம் இந்நிலைமை அடுத்த தலைமுறைகளில். பாராட்டுகள் குளக்கோட்டன். தொடர்ந்து எழுதுங்கள்.

ந.க
15-11-2012, 08:56 AM
'குலத்துயர் திட்டம்'
மகன் மாற்றுவான்
மடமையும்
மாறாப் பசிப்பிணியும்
தொற்றிக்கொல்லுமோ -தொடராது இனி...
பற்றிக் கொள்ளும் தன்மான தீ......
வற்றாது எம் செல்வம்
கட்டை ஏறும் மூடத்தனம்
கட்டை ஏறிப்போய் கனகாலமாச்சு.
எழுச்சி மிக்க வாலிபா எழு...
முதுகெலும்பு நீ
முத்தமிழின் சொத்து நீ
எந்நாளும் கொண்டாடு
பஞ்சமும் பட்டினியும் ஓடட்டும்
உன்னால் புது யுகம் பிறக்கட்டும்...

நன்றி சத்தான பின்னூட்டத்திற்க்கும்...... குளக்கோட்டான் எழுச்சி மிக்க கவிதையாய் எழுங்கள், உங்கள் எண்ணப் பதிவின் வரிகள் மிக நன்று. நன்றி.

குருதவசி
15-11-2012, 10:32 AM
மாற்றம் அவசியம் ...

சுகந்தப்ரீதன்
15-11-2012, 01:40 PM
கனவுகளும் தேடல்களும் மட்டுமே தீராத துக்கங்களையும் தாளாத சுமைகளையும் தளர்த்தி ஆயிரமாயிரம் அனுபவங்களை அள்ளிதந்து மானிடவாழ்வை மகிழ்வுடன் முன்னெடுத்து செல்கின்றன... தோயாது தொடரும் தேடல்களில் தொலைந்து போகட்டும் எல்லோரது துயரங்களும்..!!:icon_b: