PDA

View Full Version : கேள்வி



ந.க
10-11-2012, 06:08 PM
கேள்வி

http://i3.squidoocdn.com/resize/squidoo_images/-1/lens18612442_1317329125How-To-Start-Seedling-For
மொட்டின் சத்தம்
இதழ்களில்
கேள்வியாய் வெடித்தால்தான்
இயற்கையின் இயல்பே அர்த்தப்படும்...

மலர் பிறப்பைப் பத்திரப்படுத்தி
தொடர்ந்து வரும் வித்தில்
கேள்விகளை விதைப்பதால்தான்
முளைகள் கேள்விக்குறியாயின..
கேள்விக்கும்
முளைக்கும் வித்துக்கும
மூளைமனிதன் போட்ட முடிச்சு இது..

--கண்ணப்பு

கீதம்
10-11-2012, 10:01 PM
கேள்விக்கும் முளைக்கும் வித்துக்கும் உங்கள் மூளை போட்ட முடிச்சு ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் கண்ணப்பு அவர்களே..

ந.க
10-11-2012, 10:40 PM
மிக்க மகிழ்ச்சி, உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

M.Jagadeesan
11-11-2012, 11:53 AM
கவிதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கொடுத்திருந்தால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

ந.க
11-11-2012, 02:11 PM
கவிதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கொடுத்திருந்தால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

உயிர் முளை எண்ணப் பதிவில் இதை விரிவாய் பதிகின்றேன். அதன் ஒரு பகுதி இங்கே, உங்கள் விருப்பம் நிறைவாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.
உங்களின் மேலான பின் ஊட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

விதை முனை வளைவு எப்படி கேள்வியாகும்?

வாழ்வோடு சமாந்திரமாய்
நம் இயற்கையும்,

எம்மை அங்கே காணலாம்
உண்மையை அவை உணர்த்தி நிற்கும்

மலரின் இதழ்
மொட்டின் பாகம்

மலரின் இதழ்களே
மொட்டை இழைக்கின்றன

மொட்டு அவிழ
இதழ்கள் விரிய

மலர் வெடிக்கின்றது
இங்கே
மொட்டின் இதழ் மலராகி

அந்த மொட்டின்
மௌனம்
தவம்

'பக்தா உன் பக்தியை மெச்சினேன் உனக்கென்ன வரம் வேண்டும் கேள்..'
'அழுகையோடு ஆரம்பிக்கும் கேள்வி..
'மொட்டு மலராவது எப்படி?
'மொட்டு மலராக வேண்டுவது ஏன்?
'பிறப்பு இறப்பு ரகசியம் என்ன ?
விஞ்ஞான் மெய்ஞான தத்துவதுவத்தின் கால்கோள் கேள்விகள்.

மொட்டின் சத்தம்
இதழ்களில்
கேள்வியாய் வெடித்தால்தான்
இயற்கையின் இயல்பே அர்த்தப்படும்...

ஒரு வளர்ச்சியில் கேள்வியும் இருக்கும்
கேள்வியால் வளர்ச்சியும் இருக்கும்

மலர் பிறப்பைப் பத்திரப்படுத்தி
தொடர்ந்து வரும் வித்தில்
கேள்விகளை விதைப்பதால்தான்
முளைகள் கேள்விக்குறியாயின..

கல்வி கேள்வி ஞானம்
பிறப்பை நிர்மாணிக்கும் பரிணாம அளவுகோல்

அவை
வித்தில் விதைக்கப்படும்
பரம்பரை அலகுகள் காவிச் செல்லும்
இன்னும் வீரியமாய்ச் சொல்லப்படும்

கேள்விக்கும்
முளைக்கும் வித்துக்கும
மூளைமனிதன் போட்ட முடிச்சு இது..

கேள்வி அடையாளம் போல்
இருப்பது நெளிவு அல்ல
அது சொத்தி அல்ல...
கேட்பது இழுக்கல்ல

பக்தா என்ன வரம் வேண்டும்?
கேளுங்கள் கொடுக்கப்படும் ..

கேள்வி அடையாளம் போல்
இருப்பது நெளிவு அல்ல ..

இது வளர்ச்சி
ஒளியை நோக்கிய உந்தல்
அண்டக் கதிரைக் கிரகிக்க,
கிளைவிட்டு கொம்பேறி
பச்சை இலைகளை எறிய
ஒரு
ஆவேச கிளர்ச்சி...

பச்சையம் தாங்கி
கடினத்தை கடந்து
ஆகாசத்தை வருடிக்கொள்ளும்
உந்து சக்தியின் விசை வில்லு ...

கேளுங்கள் கொடுக்கப்படும்.....
கேள்விக்குள் ஞானம்
அந்தத் தேடலுக்குள் வளர்ச்சி.....

கேள்வியின் தத்துவத்தை
மலர் மொட்டாக்கி வெடித்து
ஓசை எழுப்பி
பிரணவப் பொருள் தெரியுமா
என்ற முருகக் கேள்வியோடு ...

முளை வளைவு
வெறும் கோணல் அல்ல ,,,

அது
கேள்வி குறி !

ஒரு வேளை
கேள்வி அடையாளம்
இப்படித்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்குமோ?

விதை முளை வளைவில்
'கேள்வி '
அது உயிரின் உந்து சக்தியின் குறியீடு ..

குறியீடு
போல் சொல்லப்படும்
சில
எண்ணப் பதிவுகள் உண்டு ..

வார்த்தைகளால் சோடிக்கப்பட்டு
சிறய கடுகைத் தாளிப்பதும்
சொல்லப்படுவதும்
உன்னத பிரசங்கக் கலைதான்...

குறுக்கிச் சூத்திரம் போல்
வாசகப் பெருமகனின் ஊகத்தை மதித்து
வரிகளை அடக்கி வாசிப்பதும் ஒரு கலைதான்.
அந்தக் கலையின் கற்றுக்குட்டி நான்
இப்போது தவழ்கின்றேன்
பொறுக்கும் பருவம் இதுதான்
பொறுக்கிப் பெருக்கிக் கொள்கின்றேன்
பதிவுக்கலையின் மேன்மையை.

எதுவும் தப்பாய் சொல்லியிருந்தால்
சொல்லிய முறையில் தப்பு
நோகச் சொல்ல வேண்டும் என்பது
என் நோக்கல்ல..

எல்லோரும் வாழ்க..

சுகந்தப்ரீதன்
12-11-2012, 05:40 PM
முளைக்கும் கேள்விக்கும் முளைக்கும் வித்துக்கும் முடிச்சிட்டு கேள்விக்குறி விளைந்ததின்.. மன்னிக்க.. வளைந்ததன் பிண்ணனியை அழகிய கற்பனை கோர்த்து வார்த்தைகளில் வார்த்து நிறுவிய கவிதையின் கரு வேர்விட்டு விளைந்திட எமது வாழ்த்துக்கள் கண்ணப்பு..!!:icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
13-11-2012, 09:24 AM
தன் இயல்பு மாறாது இயற்கையின் நிகழ்வினில் முளைவிடும் வித்துக்கள் தன்னில் எழுந்த கேள்விகள் மூலம் தன்னில் காணும் நிறைவு ....

jayanth
13-11-2012, 12:28 PM
உயிர் முளை எண்ணப் பதிவில் இதை விரிவாய் பதிகின்றேன். அதன் ஒரு பகுதி இங்கே, உங்கள் விருப்பம் நிறைவாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.
உங்களின் மேலான பின் ஊட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

விதை முனை வளைவு எப்படி கேள்வியாகும்?

......................................................

எதுவும் தப்பாய் சொல்லியிருந்தால்
சொல்லிய முறையில் தப்பு
நோகச் சொல்ல வேண்டும் என்பது
என் நோக்கல்ல..

எல்லோரும் வாழ்க..

விளக்கத்திற்குபின் விளங்கியது....(?)....உங்கள் கேள்வி...!!!

ந.க
13-11-2012, 12:54 PM
சுகந்தப்பிரிதன்,நாஞ்சில் த.க.ஜெய்,ஜெயந்த்.வாழ்த்தும் உங்கள் மேலான பின்னூட்டத்திற்கு- ஊட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

மஞ்சுபாஷிணி
13-11-2012, 06:48 PM
வார்த்தைக்கோர்ப்பு மிக அற்புதம்....

ரசனையான சொல்லாடல்....

முத்தான கவிதைப்பகிர்வு....

ரசித்தேன்....

அன்புவாழ்த்துகள் கண்ணப்பு....