PDA

View Full Version : மதுபானம்



nandagopal.d
10-11-2012, 05:21 AM
பால்யத்தில்,
ஒரு நாள்,
நண்பர்களுடன் ,
நிகழ்ச்சி.

அதில்,

நண்பர்களின்,
உந்துதலினால்.
சிறிது,
ஆல்கஹால்,
வயிற்றில்,

கசப்பு,
போதுமென்றான்.

யாரும் விடவில்லை,

குடிடா எல்லாம்,
அப்படிதான் இருக்கும்.
நண்பர்களின் அன்பு பேச்சு, =♥

சிறிது,
நேரத்தில்,
சிதறியது,
குடலினுள் இருந்த,
உணவு துகள்கள்,

சாராய நெடி,
வீச தொடங்கியது.

அவனது வாழ்வில்,

கூடியிருந்த.
கூ ட்டம்.
எல்லாம்,
குடிகாரன் என்ற பேச்சில்,
காணமால் போயிருந்தது.

இப்பொழுது,

அவனும்,
குடுவையும் (பாட்டிலும்),
மட்டுமே.
இன்னும்,
சிறிது காலத்திற்கு,

பிறகு,

குடுவை(பாட்டில்),
மட்டுமே ,
உலகத்தில்

ந.க
10-11-2012, 05:45 AM
நன்றி, மதுவின் ஆக்கிரமிப்பை, அதற்கு அடிமைப் பட்டுப்போகும் நிலையை சொன்னீர்கள்.
குடுவை(பாட்டில்) என தமிங்கிலிசில் அடைப்புக்குறிக்குள் அழுத்திச் சொல்லும் நீங்கள் , ஆங்கிலப்பதமான அல்கஹோல் என்பதை ஏன் மதுசாரம் என்று அடைப்புக்குள் போடவில்லை. அதுதான் தமிழ் சொல்லை ஆங்கிலத்தால் விளங்கப்படுத்தவேண்டிய நிர்பந்தம் இன்று.

jayanth
10-11-2012, 12:52 PM
சொன்னதெல்லாம் உண்மை...!!!

nandagopal.d
10-11-2012, 04:40 PM
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் நண்பரே

சுகந்தப்ரீதன்
10-11-2012, 05:04 PM
ரௌத்திரம் பழகும் வயதில் ரசபானம் பருகி தள்ளாடும் தமிழ்நாட்டின் தலைமுறையை நினைவூட்டும் கவிதை..!!

தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் நந்தகோபால்..!!

கீதம்
10-11-2012, 10:06 PM
ஆல்கஹால் தாங்கிய குடுவைகள் கூட மீள்சுழற்சிக்கு ஆளாகிவிடும். ஆனால் ஆல்கஹால் தாங்கிய குடல்களும் உடல்களும்?

மெல்ல அன்பின் ஆளுமையோடு தயங்கித் தயங்கி உள்நுழைந்து, முடிவில் அவனேயே ஆளும் சக்தி கொண்ட மதுபானத்தின் இயல்பை வெளிப்படுத்திய அருமையானதொரு கவிதைக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

M.Jagadeesan
11-11-2012, 11:27 AM
ஆல்கஹால் தாங்கிய குடுவைகள் கூட மீள்சுழற்சிக்கு ஆளாகிவிடும். ஆனால் ஆல்கஹால் தாங்கிய குடல்களும் உடல்களும்?

மெல்ல அன்பின் ஆளுமையோடு தயங்கித் தயங்கி உள்நுழைந்து, முடிவில் அவனேயே ஆளும் சக்தி கொண்ட மதுபானத்தின் இயல்பை வெளிப்படுத்திய அருமையானதொரு கவிதைக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆல்கஹால் தாங்கிய குடுவைகள் மட்டுமல்ல மனிதனின் ஆன்மா கூட ஏழுமுறை மீள்சுழற்சிக்கு ஆளாகின்றன. ஆனால் மனிதப்பிறவி என்பது ஒருமுறைதான்.

nandagopal.d
20-11-2012, 11:14 AM
கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்