PDA

View Full Version : களவு!



M.Jagadeesan
08-11-2012, 02:37 AM
இரண்டு நாள் விடுமுறையில், சரவணன் மீனாட்சி தம்பதியினர் திருப்பதிக்கு சென்றனர், ஏழுமலையானைக் கண்குளிர, மனம்குளிர தரிசனம் செய்தனர். திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தம்பதியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

" அய்யய்யோ! எல்லாம் போச்சே! என்று அலறி அடித்துக்கொண்டு மீனாட்சி வீட்டிற்குள்ளே ஓடினாள். அங்கே பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில், வைத்தபடி இருந்தன. பீரோவைத் திறந்து பார்த்தாள். நகைகள், பணம் எல்லாம் பத்திரமாக இருந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். கணவனிடத்தில் ஓடிவந்து, " அந்த ஏழுமலையான் அருளாலே எதுவுமே திருடு போகலீங்க! " என்று சந்தோஷமாகச் சொன்னாள் மீனாட்சி.

ஆனால் சரவணன் முகத்தில் கவலை தெரிந்தது. அவன் தழுதழுத்த குரலில்," மீனாட்சி! நகைநட்டு, காசுபணம், பண்ட பாத்திரம் எது போயிருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்; ஏன்னா அத நாம மறுபடியும் சம்பாதிச்சிடலாம், ஆனா என்னுடைய தாத்தா காலத்திலிருந்து நம்ம வீட்டுப் பொக்கிஷமா இருந்த பூட்டு திருடு போயிடிச்சே! அந்த விலை மதிப்பில்லாத பூட்டை, என் தாத்தா லண்டனுக்குப் போயிருந்தபோது வாங்கி வந்ததா , என்னோட அப்பா அடிக்கடி சொல்லுவாரு! பத்திரமா வச்சிக்கோடா! ன்னு சொல்லி அப்பா என்கிட்டே கொடுத்தாரு! இப்ப நான் என்ன பண்ணுவேன்? லட்ச ரூபா கொடுத்தாலும் அந்த மாதிரி பூட்டுக் கிடைக்குமா? " என்று சொல்லி சரவணன் கதறி அழுதான்.

Mano.G.
08-11-2012, 02:58 AM
செண்டிமென்டான பூட்டு,
இதிலெருந்து என்ன தெரியுதுண்ணா
பணம் காசவிட செண்டிமென்டான பொருளுக்கு
மதிப்பு அதிகம்

M.Jagadeesan
08-11-2012, 03:20 AM
செண்டிமென்டான பூட்டு,
இதிலெருந்து என்ன தெரியுதுண்ணா
பணம் காசவிட செண்டிமென்டான பொருளுக்கு
மதிப்பு அதிகம்

உண்மைதான் மனோ அவர்களே! தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

முரளி
08-11-2012, 03:51 AM
சுருக்கமான அழகான கதை. கவிதையை போலவே கதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி..

ஒரு சிறிய குறை. நகை பணம் போனாலும் பரவாயில்லை எனும் சரவணன், ஓர் கபட வெளி வேஷக்காரனோ?. பூட்டுக்கு ஒரு லட்சம் என ஒரு விலை சொல்கிறான். பூட்டும் ஒரு பொக்கிஷம் என கதறி அழுகிறானே? இது ஏன்? அவன் ஒரு சென்டிமென்டல் மாதிரி தெரியவில்லை, மெண்டல் மாதிரி தெரிகிறது. :lachen001::lachen001:

M.Jagadeesan
08-11-2012, 05:22 AM
சுருக்கமான அழகான கதை. கவிதையை போலவே கதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி..

ஒரு சிறிய குறை. நகை பணம் போனாலும் பரவாயில்லை எனும் சரவணன், ஓர் கபட வெளி வேஷக்காரனோ?. பூட்டுக்கு ஒரு லட்சம் என ஒரு விலை சொல்கிறான். பூட்டும் ஒரு பொக்கிஷம் என கதறி அழுகிறானே? இது ஏன்? அவன் ஒரு சென்டிமென்டல் மாதிரி தெரியவில்லை, மெண்டல் மாதிரி தெரிகிறது. :lachen001::lachen001:

சரவணன் மெண்டல் இல்லை; களவுபோன பூட்டு, அவனுடைய அப்பாவின் கைபட்ட பூட்டு; அவன் தாத்தாவின் கைபட்ட பூட்டு. எனவேதான் அது களவுபோனது அறிந்து கதறி அழுகிறான். நாம் பயன்படுத்தும் பேனாவுக்கும், காந்தி பயன்படுத்திய பேனாவுக்கும் வேறுபாடு உண்டல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

முரளி
08-11-2012, 08:18 AM
உண்மையே! எனது தவறுக்கு வருந்துகிறேன். உங்களது பதிலுக்கு நன்றி.

sarcharan
16-11-2012, 04:31 AM
ஹ்ம்ம்! சரவணன் என்னும் பேருக்கு பதிலாக மயூரேசன் என்று வைத்திருக்கலாம். :redface::redface::redface:

மதி
16-11-2012, 04:38 AM
சில விஷயங்கள் என்றும் பொக்கிஷங்கள் தான். விலைமதிக்க முடியாதவை. சரி. உண்மையிலேயே திருடன் எதுக்கு பூட்ட உடைச்சிருப்பாங்கற கேள்வியும் எழாமல் இல்லை.

தாமரை
16-11-2012, 04:48 AM
பூட்டுக்கு அப்படி மதிப்பு கொடுக்கிறவர் பூட்டை தனியா லாக்கர்ல லாக் பண்ணி வைக்காம, ஏன் அசால்ட்டா அதெ வெளிய தொங்க விட்டுட்டு போனார்னு கேள்வி வருதே..

எதை நாம மதிக்கறமோ அதை பாதுகாக்கணும் இல்லையா? ( நம்ம பண்பாடு மாதிரி )

சொ.ஞானசம்பந்தன்
16-11-2012, 05:31 AM
தாமரை அவர்களின் வினா அறிவு பூர்வமானது .

கீதம்
17-11-2012, 07:10 AM
என் பாட்டன் காலத்துப் பூட்டு, லட்சரூபாய் கொடுத்தாலும் இன்று இதுபோல் கிடைக்காது என்று சரவணன் பெருமை பேசுவதை எந்த திருடனாவது கேட்டிருக்கவேண்டும். அதன்காரணமாகவே பூட்டு திருடப்பட்டிருக்கவேண்டும். ரசிக்கவைத்ததொரு அருமையானக் கதைக்குப் பாராட்டுகள் ஐயா.

ந.க
17-11-2012, 07:16 AM
இந்தச் சம்பவத்தைப் பின்னணியை வைத்து-இந்த சம்பவம் முடிவில் தொடங்கும் ஒரு நகைச்சுவை நாடகம் தயார் பண்ணிவிட்டேன், சிறு கதை வடிவம் கொடுத்துள்ளேன்-அது லண்டனில் மேடையேறும், அதற்காக வாழ்த்துக்களையும் நன்றியையும் திரு ஜெகதீசன் அவர்களுக்குத் தெரிவிக்கின்றேன்.