PDA

View Full Version : காதலும் காதலரும் - இலக்கியங்களில்!



குணமதி
06-11-2012, 03:21 AM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்!

தொகுப்பு -1

இக்காலத்தில், படிப்போர் சலிப்படையாதவாறு காதலைப் பற்றியும் காதலரைப்பற்றியும் பல்வேறு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் துணுக்குத்தொகுப்பாக எழுத வேண்டுமென்ற கருத்தில் தொடங்குகிறேன். வரவேற்பைப் பொறுத்து, தொடர்வதா நிறுத்திவிடுவதா என்று முடிவுசெய்யலாம்!

1. அழகும் மணமும் உடைய இரண்டு மாலைகளை ஒருங்குப் பிணைந்த ஒருமாலை போன்ற பொலிவு உடையவர் இக்காதலர்!

துணைமலர்ப் பிணையல் அன்னஇவர்
மணமகிழ் இயற்கை - குறுந்தொகை: 229.

2. நாங்கள் பிரிவின்றிப் பொருந்திய பிளவுபடாத காதலில் இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவைபோல் இரண்டு உடற்கு ஓர் உயிரினம் ஆவோம்.

யாமே,
பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே! - அகநானூறு 12.

3. உயிரொடு கலந்து தோன்றும் உயர்ந்த காதலன் காதலியரின் அரிய நட்பு, அவிழ்த்துப் பிரித்தெடுக்க முடியாத முடிச்சுப் போல்வதாகும்.

யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. - குறுந். 313[/COLOR]

4. உனக்கு நான் ஓருயிரை இரண்டு உடம்புகளில் பகுத்து வைத்தாற் போன்ற மாண்பினை உடையவன்.

நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினனே. - நற்றிணை 128.

த.ஜார்ஜ்
06-11-2012, 07:31 AM
விளக்கவுரையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறே ன்

கீதம்
06-11-2012, 08:25 AM
இருதலைப் பறவை என்னும் உவமை அறிந்து வியப்புற்றேன். அந்த வியப்பு மறையுமுன் அடுத்ததாய், ஓருயிரை இரு உடல்களில் பகுத்துவைத்தாற்போன்று என்னும் கருத்து கண்டு இன்னும் வியந்தேன். இலக்கியங்களில் காணப்படும் இதுபோன்ற வியக்கத்தகு செய்திகளை தொடர்ந்து அறியத்தாருங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன். இத்தகுத் தொடரைத் தர விழைந்தமைக்கு மிகவும் நன்றி.

சுகந்தப்ரீதன்
06-11-2012, 12:26 PM
தித்திக்கும் இலக்கிய சுளைகளை சுவைக்க தரும் இத்தொடர் இனிதே தொடரட்டும் குணமதி அண்ணா..!!:icon_b:

துணுக்கு தொகுப்பு என்றாலும் கொஞ்சம் விரிவாக விளக்கம் தந்து இன்னும் கொஞ்சம் சுவை கூட்டலாமே..?!:)

jayanth
06-11-2012, 01:24 PM
காதலும் காதலரும். . . குறுகிய உரை சிறப்பாக இருந்தது...!!!

கலையரசி
08-11-2012, 01:59 PM
இலக்கியத்தைப் படிக்க முடியாவிட்டாலும் சுவையான செய்திகளை யாவரும் சுவைக்க இது போன்ற தொடர்கள் உதவி செய்யும். கண்டிப்பாக தொடருங்கள்.

ந.க
08-11-2012, 02:51 PM
நன்றி-தங்களின் தொகுப்பு இலக்கிய விருந்து.....

நாஞ்சில் த.க.ஜெய்
08-11-2012, 05:20 PM
மாறிவரும் காதலர் உலகில் இத்தகவல் புதியதோர் அத்தியாயம் அக்காலகாதல் வரிகள் இக்காலநிலையில் எவ்வித மாற்றத்தினை ஏற்படுத்தாவிடினும் இவ்வரிகள் போல் எனை வர்ணி என் காதலா என் விளித்தால் திகைப்பதற்கில்லை...விளக்கவுரை இருந்தால் இந்த வரிகளை ஆழ்ந்து அதன் சுவைதனை உணர முடியும் என நினைக்கிறேன் ..தொடரட்டும் இலக்கிய சுவை விருந்து ..

குணமதி
15-11-2012, 06:41 AM
படித்துக் கருத்துரைத்த உள்ளங்ககள்
த.ஜார்ஜ்
கீதம்
சுகந்தப்ரீதம்
Jayanth
கலையரசி
ந.தண்ணப்பு
நாஞ்சில் த.க.ஜெய் ஆகியோர்க்கும்
கருத்துரைக்காது போனாலும் படித்த மற்றைய அன்புள்ளங்களுக்கும்
மனங்கனிந்த நன்றி.