PDA

View Full Version : இரவல் இதயம் .



M.Jagadeesan
04-11-2012, 02:38 PM
உன்னுடைய
கண்களைக் கொஞ்சம்
கடனாகத் தா!
காதல் செய்வதை நான்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன்னுடைய
கைகளைக் கொஞ்சம்
கடனாகத் தா!
கவிதை எழுதுவதை நான்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன்னுடைய
கால்களைக் கொஞ்சம்
கடனாகத் தா!
காதலுக்காக காத்திருப்பதை நான்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன்னுடைய
இதயத்தைக் கொஞ்சம்
இரவல் தா!
காதலை மறக்காமல் இருக்கக்
கற்றுக்கொள்வதற்காக.

கடனாகப் பெற்றதை எல்லாமே
கவனமாகத் திருப்பித் தந்திடுவேன்.
ஆனால்
இரவலாகப் பெற்ற இதயம் மட்டும்
இறுதிவரை என்னிடமே இருக்கட்டும்.
பதிலாக
என்னுடைய இதயத்தை
எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 05:37 PM
இரவல் வாங்கி மாறுதலாய் ஒரு காதல் ..தன்னை மறைத்து பொய்யுருவம் புனைந்து செய்யம் காதல் தேவையோ ...