PDA

View Full Version : சிரிப்பு ..!



vasikaran.g
01-11-2012, 10:09 AM
உதடுகளின் விரிப்பு !
உள்ளக் கதவுகள்
மெல்லத் திறப்பு !
உண்மையான நகையின்
மென்மையானப் பிறப்பு !

நரம்புகளின் லேசான தளர்வு !
மனதை லேசாக்கும் -ஒரு
நேச உணர்வு !

மனித இனத்துக்கு மட்டுமே
இறைவன் தந்தது !
மருந்துக்கு கூட -பலர்
பயன்படுத்த மறுப்பது !

காசில்லாமல் வருவது !
கல்மனதையும் தகர்ப்பது !

உதடுகளை பிரித்து பிரித்து
உள்ளத்தில் இருந்து
சிரித்து சிரித்து
மனபாரத்தை இறக்கிவைப்போம் !
மரணத்தை துரத்தி வைப்போம் !

கலைவேந்தன்
01-11-2012, 12:10 PM
சிரிப்பின் பெருமைகள் அருமை வசிகரன்.


நரம்புகளின் லேசான தளர்வு !
மனதை லேசாக்கும் -ஒரு
நேச உணர்வு !

இவ்வரிகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் வசிகரன்.

ஜானகி
01-11-2012, 02:13 PM
மத்தாப்பூவாக மலர்ந்து, பிறரையும் தொற்றிக்கொள்ளும் அருமருந்தான சிரிப்பிற்குக் கூறுவோம் பலத்த வரவேற்பு...

சுகந்தப்ரீதன்
01-11-2012, 07:24 PM
பூப்போல மலர்ந்திருக்கும் புன்னகை கவிதை கண்டு ரசித்தேன்... ருசித்தேன்... சிரித்தேன்..!!:lachen001:

கீதம்
01-11-2012, 10:25 PM
பிறந்து பதினேழாம் நாளிலேயே குழந்தை சத்தமாய் சிரிக்கத்துவங்கிவிடுகிறதாம். பிறவிக்குருடு, பிறவிச்செவிடு குறைபாடுள்ள குழந்தைகளும் விதிவிலக்கல்லவாம். ஒருநாளைக்கு குழந்தைகள் சராசரியாக முந்நூறு தடவைகள் சிரிக்கிறார்கள் என்றால் பெரியவர்கள் வெறும் இருபது தடவைதான் சிரிக்கிறார்களாம்... :frown:

சிரிக்கத்தூண்டும் கருத்துக்களோடு அழகிய கவிதை படைத்து எங்களை ரசிக்கத்தூண்டிய உங்களுக்குப் பாராட்டுகள் வசீகரன். :icon_b:

jayanth
02-11-2012, 04:02 AM
சிரிப்பு***சிறப்பு...!!!

அனுராகவன்
02-11-2012, 04:54 AM
சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.
அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல.

HEMA BALAJI
02-11-2012, 04:25 PM
சொன்னதெல்லாம் ரொம்ப உண்மைதாங்க வசிகரன். மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமான சிரிப்பை மனிதன் மட்டும் தான் அவ்வப்போது கூட செய்வதில்லை. நல்ல கவிதை. பாராட்டுகள். சிரிப்பைப் பற்றிய வைரமுத்துவின் வரிகளையும் நினைவு படுத்துகிறது.

vasikaran.g
13-01-2013, 06:45 AM
சிரிப்பு பற்றிய என்கவிதைக்கு கருத்து புனைந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

இனியவள்
27-04-2015, 04:16 AM
சிரிக்க மறந்தவர்களுக்கு
சிறந்த மருந்து இக் கவி,,

கவியை ரசித்தேன்
இழையோடும் சிறு புன்னகையோடு,,

வாழ்த்துக்கள் வசீகரன்..!