PDA

View Full Version : முத்தத்துக்கும் கண்ணில்லை...



rema
31-10-2012, 08:31 AM
Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness
Of the firmament
And the stretch of the land
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers
Soothing and leading it
On and on to a
devouring sleep...

மதி
31-10-2012, 08:59 AM
ரெமா.. மேலே பதிக்கப்பட்ட பாடலுக்கு நீங்கள் மொழியாக்கம் செய்திருந்தால் அதனுடன் சேர்த்து பதியுங்கள். ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுகள் பதிதல் கூடாது.

புரிதலுக்கு நன்றி.

rema
01-11-2012, 08:21 AM
ரெமா.. மேலே பதிக்கப்பட்ட பாடலுக்கு நீங்கள் மொழியாக்கம் செய்திருந்தால் அதனுடன் சேர்த்து பதியுங்கள். ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுகள் பதிதல் கூடாது.

புரிதலுக்கு நன்றி.

அப்படியா ? மாலைக்குள் மொழிப்பெயர்ப்புடன் இடுகிறேன் ;... தகவலுக்கு நன்றி !

rema
01-11-2012, 08:24 AM
அதுவரை மறைவாக வைக்க இயலுமா ?

கலைவேந்தன்
01-11-2012, 12:35 PM
நல்லா இருங்க தாயி.. :) இங்கே எனக்கு தமிழே தாளம் போடுது. இதுல இங்லிபீசு கவிதை எல்லாம் எப்படி புரிஞ்சுக்கினு பின்னூட்டம் போடறது..?


ஒரு பொட்டல் வெளியில்
யாருமில்லா மோனத்தில்
ஓர் அமைதி
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர்
ஆசையில்லை..
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில்
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே
வாட்டிவதைக்கும்
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும்
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல்
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய்
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி
எங்கோ பறக்க வைக்கும்..!!

ஏனுங்... எனக்கு தெரிஞ்ச இங்க்லீசுல கொஞ்சூண்டு எழுதிப்பார்த்தனுங்க.. நல்லா இருக்குங்களா..?

( அருமையான கவிதை ஒன்றை பார்வைக்குக் கொணர்ந்த எங்கள் அன்பு ரேமாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்..! )

மதி
01-11-2012, 12:48 PM
நல்ல மொழியாக்கம் கலைவேந்தரே..

ரேமா உங்க மொழிபெயர்ப்பையும் இடுங்கள்.. உங்கள் பதிவையே எடிட் செய்து..!

ஜானகி
01-11-2012, 01:56 PM
ஆகா....மௌனத் [ தமிழ் ] ஊஞ்சல், சுகமாகத் தாலாட்டுகிறதே... அருமை !
இரு படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள் !

சுகந்தப்ரீதன்
01-11-2012, 07:31 PM
மௌனம் சம்மதமானால் மனமெங்கும் மயக்கும் சங்கீதமோ..?!:)

கலையண்ணா... நீங்க இரட்டை புலவர்ன்னு எங்களுக்கு தெரியுமாக்கும்..!!:icon_b:

rema
02-11-2012, 07:00 AM
நல்லா இருங்க தாயி.. :) இங்கே எனக்கு தமிழே தாளம் போடுது. இதுல இங்லிபீசு கவிதை எல்லாம் எப்படி புரிஞ்சுக்கினு பின்னூட்டம் போடறது..?


ஒரு பொட்டல் வெளியில்
யாருமில்லா மோனத்தில்
ஓர் அமைதி
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர்
ஆசையில்லை..
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில்
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே
வாட்டிவதைக்கும்
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும்
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல்
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய்
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி
எங்கோ பறக்க வைக்கும்..!!

ஏனுங்... எனக்கு தெரிஞ்ச இங்க்லீசுல கொஞ்சூண்டு எழுதிப்பார்த்தனுங்க.. நல்லா இருக்குங்களா..?

( அருமையான கவிதை ஒன்றை பார்வைக்குக் கொணர்ந்த எங்கள் அன்பு ரேமாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்..! )
நல்லாருக்கு கலையண்ணா...
எனக்கு உங்களைப்போல் கவித்துவமான மொழிப்பெயர்ப்பு வரவில்லை...
நேரடியாக மொழிப்பெயர்க்கத் தான் வருகிறது...எனவே உங்க கவிதை படிக்க நன்று !

rema
02-11-2012, 07:06 AM
நல்ல மொழியாக்கம் கலைவேந்தரே..

ரேமா உங்க மொழிபெயர்ப்பையும் இடுங்கள்.. உங்கள் பதிவையே எடிட் செய்து..!

இதோ...


உயிர்கள் ஏதுமற்ற
ஓர் பாலையியில் நான் !
ஏக்கங்களோ
ஆசைகளோ எதுவுமின்றி
நிச்சலன இதயத்துடன்…
எல்லாம் அமைதியாக இருக்க..
கோப அசைவுகள் இல்லை
ஒரே இடைவேளை ஜதியில்
அசையும் இமைகளைத் தவிர..
முன்தெரியும் வான்பரப்பையும்
என் பாதங்கின் கீழ்
நீளும் நிலப்பரப்பையும் அளப்பதாய்..
தாகமோ பசியோ இல்லை…
ருசியான ஓர் அமைதியில்
மனம் நிறைந்திருந்ததால்…
சத்தமில்லா…நிசப்தம்
என்றாலும்…. ஒரு மௌன இசை
என் இதயத்தை மென்மையாய் தொட்டு
அதன் வடிவமில்லா விரல்கள்…
என் இதயத்தை வருடி
மோகனமாய்
இழுத்துச்…..செல்லும்…
ஒரு மரண சயனத்திற்கு !

rema
02-11-2012, 07:36 AM
ஆகா....மௌனத் [ தமிழ் ] ஊஞ்சல், சுகமாகத் தாலாட்டுகிறதே... அருமை !
இரு படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள் !

நன்றி ஜானகி !

ஜான்
19-12-2012, 04:10 AM
Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness
Of the firmament
And the stretch of the land
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers
Soothing and leading it
On and on to a
devouring sleep...


ஏதுமற்றுப்போன மணல்வெளியென
ஏதுமற்றிருக்கிறதென் மனவெளி ...
ஆசையின்றி நிராசையின்றிப் பேராசையின்றி
அமைந்துவிட்ட மனதுடன்
உணர்வற்ற சட நிலையில்
ஏதுமற்றிருக்கிறதென்
இதயம்


கண்ணிமையின் அசைவும்
காலடி நீளும் மணலும் தவிர்த்து
தாகமின்றி மோகமின்றித் தவிப்பின்றி '
சயனித்திருக்கிறதென் மனம் ....



அப் பெருவெளியில்
உறையவைத்த இசைக் குறிப்பொன்று
தன்
உருவமிலாக் கரங்களால்
எனை குலவித் தழுவிச் செல்கையில்
அமைதிஎனும் உறக்கத்தில்
மீளவும் ஆழ்கிறேன் நான்

ஜான்
19-12-2012, 04:11 AM
நானும் ஜீப்புல ஏறிக்கிட்டேன் .....ஹிஹி !!!

ஆதி
24-12-2012, 08:09 AM
அடடா ஆளுக்கு ஆள் மொழி பெயர்ப்பில் பின்னுராங்களே, இன்னும் ஒருவர் இதை மொழி பெயர்த்தாலும் பண்பலையில் ஒரு நிகழ்ச்சியா செய்துடலாமே
அந்த இன்னொருத்தர் யாரு மக்கா ?

சீக்கிரம் மொழி பெயர்ப்பு செய்ங்க நிகழ்ச்சியாக்கிடலாம்

ஜானகி
24-12-2012, 08:59 AM
Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness
Of the firmament
And the stretch of the land
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers
Soothing and leading it
On and on to a
devouring sleep...


ஏதுமற்றுப்போன மணல்வெளியென
ஏதுமற்றிருக்கிறதென் மனவெளி ...
ஆசையின்றி நிராசையின்றிப் பேராசையின்றி
அமைந்துவிட்ட மனதுடன்
உணர்வற்ற சட நிலையில்
ஏதுமற்றிருக்கிறதென்
இதயம்


கண்ணிமையின் அசைவும்
காலடி நீளும் மணலும் தவிர்த்து
தாகமின்றி மோகமின்றித் தவிப்பின்றி '
சயனித்திருக்கிறதென் மனம் ....



அப் பெருவெளியில்
உறையவைத்த இசைக் குறிப்பொன்று
தன்
உருவமிலாக் கரங்களால்
எனை குலவித் தழுவிச் செல்கையில்
அமைதிஎனும் உறக்கத்தில்
மீளவும் ஆழ்கிறேன் நான்

ஆகா...என்னையும் தழுவாதோ இசைக்கும் இந்தப் பேருறக்கம்.... " தூங்காமல் தூங்கி சுகம் காணும் "பெரு விழிப்பு...!

கும்பகோணத்துப்பிள்ளை
24-12-2012, 02:13 PM
கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
உயிர்களின் உரசல்களில்லை!
உந்தேத்தும் கோபங்களில்லை!
தேடுதல்களும் தேவைகளுமில்லாத
நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
பசியேதுமில்லை!
இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
உருவமில்லா விரல்களாலே என்
உள்ளம்தடவி உறங்க வைக்கும்
மீண்டும்! மீண்டும்!

ஜான்
25-12-2012, 03:02 AM
ஆகா...என்னையும் தழுவாதோ இசைக்கும் இந்தப் பேருறக்கம்.... " தூங்காமல் தூங்கி சுகம் காணும் "பெரு விழிப்பு...!

நன்றி ஜானகி

ஜான்
25-12-2012, 03:03 AM
கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
உயிர்களின் உரசல்களில்லை!
உந்தேத்தும் கோபங்களில்லை!
தேடுதல்களும் தேவைகளுமில்லாத
நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
பசியேதுமில்லை!
இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
உருவமில்லா விரல்களாலே என்
உள்ளம்தடவி உறங்க வைக்கும்
மீண்டும்! மீண்டும்!

முயற்சி முதல் முயற்சியாக இருக்கலாம்.....

ஆனால் ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளீர்கள் பிள்ளை...வெகு சிறப்பு

ஆதி
25-12-2012, 09:59 AM
ஒரு மொட்டை பாலையில்
ஆளரவம்மற்ற தனிமையில்
எவ்வேக்கங்களும்
எத்தேவைகளும் இல்லாமல்
நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
மௌனித்திருக்கும் மனம்
ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
அரூப விரல்களால் மீட்டப்படுகிற
நிசப்த சுரத்தில்...

ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*

rema
25-12-2012, 03:41 PM
கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
உயிர்களின் உரசல்களில்லை!
உந்தேத்தும் கோபங்களில்லை!
தேடுதல்களும் தேவைகளுமில்லாத
நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
பசியேதுமில்லை!
இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
உருவமில்லா விரல்களாலே என்
உள்ளம்தடவி உறங்க வைக்கும்
மீண்டும்! மீண்டும்!

கன்னி முயற்சி போல தெரியவில்லை பிள்ளை !
நன்று ! வாழ்த்துகள் !

பாண்டி
25-12-2012, 03:53 PM
ஒவ்வொருத்தரும் மொழிபெயர்ப்பில் கலக்குறாங்கலே:icon_b:

rema
25-12-2012, 03:59 PM
ஒரு மொட்டை பாலையில்
ஆளரவம்மற்ற தனிமையில்
எவ்வேக்கங்களும்
எத்தேவைகளும் இல்லாமல்
நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
மௌனித்திருக்கும் மனம்
ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
அரூப விரல்களால் மீட்டப்படுகிற
நிசப்த சுரத்தில்...

ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*

ஆதியின் கைவண்ணத்தில் மொழிப்பெயர்ப்பு ஜென் வரிகளுடன் மிளிர்கிறது

நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்

குறிப்பாக இவ்வரிகள் .....நன்றி ஆதி !

கும்பகோணத்துப்பிள்ளை
25-12-2012, 06:20 PM
இல்லை இல்லை ஜான்
இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!

இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்

Covering the vastness
Of the firmament

இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!

rema
27-12-2012, 03:16 AM
இல்லை இல்லை ஜான்
இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!

இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்

Covering the vastness
Of the firmament

இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பிள்ளை !!
92-94 வருடங்களில் தோன்றியதை எழுதியது...
இப்போது பதிந்தால் நன்றாக இருக்குமா என தயங்கியபடியே பதிந்தேன்...

இன்று மொழிப்பெயர்த்தவர்களால் சிறப்புற்றது என் கவிதை....மீண்டும் நன்றி !!

கும்பகோணத்துப்பிள்ளை
27-12-2012, 03:50 PM
ரிமா அவர்களே
ஒரு பொறிக்கவிதை
எத்தனை இதழ்களை விரித்தது
இந்த தமிழ்தளத்தில்!
கலையழகு பொழிந்த
கலைவேந்தன் வரிகள்!
மனவோட்டத்தை மயக்கிய
ஜானின் ஜாலங்கள்!
ஆதியின் ஆழமான
ஜென்வரிகள்!
ஆன்ம வெளிப்பாடுடைய
ஜானகியம்மாவின் வரிகள்!
எத்தனை முகங்களோடு
எழுந்தது அந்த கவிதை!
எழுதுங்கள் தொடர்ந்து!

ஜானகி
28-12-2012, 12:10 AM
மௌனம் எல்லோரையும் பேசவைக்கிறது.........விந்தையாக இல்லை ?

rema
04-01-2013, 03:00 PM
ரிமா அவர்களே
ஒரு பொறிக்கவிதை
எத்தனை இதழ்களை விரித்தது
இந்த தமிழ்தளத்தில்!
கலையழகு பொழிந்த
கலைவேந்தன் வரிகள்!
மனவோட்டத்தை மயக்கிய
ஜானின் ஜாலங்கள்!
ஆதியின் ஆழமான
ஜென்வரிகள்!
ஆன்ம வெளிப்பாடுடைய
ஜானகியம்மாவின் வரிகள்!
எத்தனை முகங்களோடு
எழுந்தது அந்த கவிதை!
எழுதுங்கள் தொடர்ந்து!

ஊக்கத்திற்கு மிக்க நன்றி பிள்ளை !!
எத்தனை இதழ்களை விரித்தது என அழகாக விவரித்த பாங்கு வியக்க வைத்தது...!!
நிச்சயம் தொடர்வேன் .... மிக்க நன்றி !!

rema
04-01-2013, 03:01 PM
மௌனம் எல்லோரையும் பேசவைக்கிறது.........விந்தையாக இல்லை ?

உண்மை ! இனிமையான விந்தை ஜானகி ...
நன்றி !

கலையரசி
04-01-2013, 05:54 PM
அருமையான கவிதை ரேமா! என் பங்குக்கு நானும்...


”உயிரினம் ஏதுமிலாப்
பாலையொன்றில்
ஏக்கங்களை ஆசைகளைத்
துறந்து விட்ட
சலனமில்லா
இதயத்துடன் நான்!


இமைகளின் இயல்பான
சிமிட்டலைத் தவிர
அதிர வைக்கும்
வேறெந்த அசைவுமில்லை!


பரந்து விரிந்த வானுக்கும்
காலுக்குக் கீழான பூமிக்குமிடையே
பசியோ தாகமோ இன்றி
பரிபூரண அமைதியில்
வியாபித்திருக்கிறது என் மனம்.

ஓசை சிறிதுமில்லா அந்த
ஆழ்ந்த மெளனத்தில்
நெஞ்சைத் தழுவிச் செல்கிறது
அமைதியான சங்கீதம் ஒன்று.
உருவமில்லா அதன் விரல்கள்
மனதை வருடிக் கொடுத்து
அழைத்துச் செல்கிறது
மீளாத் துயிலை நோக்கி!

rema
05-01-2013, 02:35 AM
உங்கள் பங்களிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி கலையரசி....

rema
05-01-2013, 02:37 AM
THE BLIND KISS

I was just blind
when i kissed you !
My lips read your face ,
the contours of it

touching every cell
from top to down
and ear to ear...

My lips were then
my fingers ...
Your face was full of letters..
The beautiful braille !

Out of the blue
I opened my eyelids
And.....Alas !
I no longer
wished to kiss you !

Beauty is all but skin and
only a little touch !!

முத்தத்துக்கும் கண்ணில்லை...
.
கண்ணில்லாமலிருந்தேன்...
உனை முத்தமிடுகையில்...
என் இதழ்கள் உன் முகம் படித்தன...
அதன் ஏற்ற இறக்கங்களையும்..!

அணுஅணுவாய் தொட்டன...
காது மடல் முதல்...
முக மேலிருந்து கீழும்

இதழ்கள் விரல்களாயிருந்தன அக் கணங்களில்...
உன் முகமெங்கும் எழுத்துக்கள்...
அழகிய ப்ரெய்ல் எழுத்துகள் !

சடீரென இமை திறந்தேன்..
பின்பு.....அந்தோ !
அதற்கு பின் உன்னை
முத்தமிட விருப்பமில்லை...

அழகு என்பது நிறைய
தோற்றமும் கொஞ்சம் தொடுதலும் !!

சுமாராக மொழிப்பெயர்த்துள்ளேன்...
விரும்புவர்கள் இன்னும் சிறப்பாக மொழிப்பெயர்க்கக் கூடும்... நன்றி !