PDA

View Full Version : சதவீதக் கணக்கு...!!!



சிவா.ஜி
31-10-2012, 07:58 AM
சத்துணவில் முட்டைகளின்
எண்ணிக்கை கூட்டல்,
பள்ளி மாணவர்களுக்கு
இலவச மிதிவண்டி,
பொங்கல் தீபாவளிக்கு
எல்லோருக்கும் வேட்டி சேலை,
தாலிக்குத் தங்கம்,
இலவச மடிக்கணினி விநியோகம்
இந்த எல்லா முக்கிய
அரசாங்க முடிவுகளினால்
பயன்பெறுவோர்...
20 சதவீதம் வாக்களித்தவர்....
80 சதவீதம் வாக்கு பெற்றவர்....!!!
ஜனநாயகம் வியாபாரமாகும்போது
தலைவர்கள் வியாபாரிகளாகிறார்கள்...!!

jayanth
31-10-2012, 09:19 AM
உண்மையான கசப்புகள் சிவா...!!!

சிவா.ஜி
31-10-2012, 10:26 AM
ஆமாம் நண்பா. எதையெல்லாமோ இலவசமா தர்றவங்க குடிதண்ணீரை ஏன் இலவசமா தரமாட்டேங்கறாங்க? அதுல கமிஷன் அடிக்க முடியாதே.

aren
31-10-2012, 10:35 AM
தண்ணீரை இலவசமாகக் கொடுத்தார்கள் சிவாஜி. காரணம் கொண்டு வந்த லாரி முதலாளிகளிடமிருந்து தினமும் கமிஷன் கிடைத்ததே.

சிவா.ஜி
31-10-2012, 11:32 AM
ஆமாங்க ஆரென். கார்பொரேஷன் தண்ணி வராத நாட்கள்ல, இடங்கள்ல...லாரித் தண்ணி கொடுத்தாங்க. ஆனா நம்மள மாதிரி ஆளுங்க கிட்ட ஆறு மாசத்துக்கு அல்லது மூணு மாசத்துக்கு ஒரு முறை வாட்டர் டாக்ஸ் வாங்கிடறாங்களே. அதை ஏன் இலவசமாக்க கூடாது. ஏன்னா அதுல அவங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்ல. நீங்க சொன்ன மாதிரி தண்ணி லாரின்னா ரொம்ப பிரயோசனம்.

மஞ்சுபாஷிணி
31-10-2012, 01:15 PM
ஊருக்கு போயிட்டு வந்து எப்படி சிவா இப்படி நச்னு இந்த கவிதை போட்டீங்க?? சரியான சாட்டையடி வரிகள்பா.... மிக்க அருமை...

கலைவேந்தன்
31-10-2012, 01:34 PM
அவலமான உண்மையை உரைக்கும் அசத்தலான வரிகள். பாராட்டுகள் சிவா.

அனுராகவன்
31-10-2012, 01:36 PM
சிவாவின் கவியில் ஒரு விடுமுறை சென்ற ஒரு அனுபவம் நன்றாக தெரியுது....
சமுதாய பிரச்சனையே சுட்டிக்காட்டி மக்களுகாக சொல்லநினைத்தது நன்று...

சிவா.ஜி
31-10-2012, 01:52 PM
சரியா புடிச்சிட்டீங்க மஞ்சு. ஊருக்குப் போய்ட்டு வந்ததாலத்தான் இந்த வரிகள். இன்னும் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது நிறைய இருக்கு. எழுதத்தான் நேரமில்லை. எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகும். நன்றிங்க மஞ்சு.

சிவா.ஜி
31-10-2012, 01:53 PM
ரொம்ப நன்றி கலை. சாட்டையை எத்தனைதான் சுழற்றினாலும்.....நமது முதுகில்தான் வரிகள் விழுகின்றன.

சிவா.ஜி
31-10-2012, 01:54 PM
ரொம்ப நன்றிங்க அச்சலா.

arun
31-10-2012, 04:29 PM
நிதர்சனமான உண்மை ! ..

ஆனால் யாரை குற்றம் சொல்வது வாக்களித்தவர்களையா அல்லது வாக்கு பெற்றவர்களையா ? ..

கவிதைக்கு பாராட்டுக்கள்

கீதம்
01-11-2012, 01:48 AM
ஜனநாயகம் வியாபாரமாகும்போது
தலைவர்கள் வியாபாரிகளாகிறார்கள்...!!

விரக்தி தொணிக்கும் வரிகள்.

இரு சூதாடிகளுக்கிடையில் தங்கள் வாழ்க்கையை பணயமாய் வைத்து வாழும் தமிழக மக்களை நினைக்கையில் பரிதாபம்தான் எழுகிறது.

நச்சென்று உள்ள(த்)தை உரைக்கும் கவிதை வெகு அருமை சிவா அண்ணா.

சிவா.ஜி
01-11-2012, 07:10 AM
இலவச திட்டங்கள் எல்லாமே அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும்....தொழிலதிபர்களுக்குமே அதிக அளவில் உபயோகமாகிறது. என்ன செய்ய...அந்த 20 சதவீத பாவப்பட்டவர்களுக்காக....பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

நன்றிம்மா.

சுகந்தப்ரீதன்
01-11-2012, 08:31 PM
20 சதவீதம் வாக்களித்தவர்....
80 சதவீதம் வாக்கு பெற்றவர்....!!! 100 சதவீதம் உண்மை..!!:icon_b:

கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு கரெக்ட்டா வரும்ன்னு சொன்னது இதைத்தானா சிவாண்ணா..?!:)

HEMA BALAJI
02-11-2012, 04:29 PM
ஆதங்கத்தைக் கூட சுருக்கென்று கூறும் உங்கள் பாணிக் கவிதை.. சூப்பர் அண்ணா... உணர்நதால் தேவலை இந்த அவல நிலையை.

சிவா.ஜி
03-11-2012, 10:00 AM
ஆமா சுபி...கூட்டிக்கழிச்சுப் பாத்தா கணக்கு சரியாத்தான் வரும். ஆனா வாக்காளர்கள் போட்டக் கணக்கு எப்பவுமே தப்பாத்தான் முடியுது.

சிவா.ஜி
03-11-2012, 10:02 AM
ரொம்ப நன்றிம்மா ஹேமா.

govindh
04-11-2012, 09:12 AM
சதவீதக் கணக்கு....
மக்கள் சக்தி இழந்து விட்டதை-
உணர்த்தும் சாட்டை வரிகள்...!

பாராட்டுக்கள் சிவா.ஜி அண்ணா.

ந.க
04-11-2012, 01:17 PM
நன்றி- மக்களுக்காக தலைவர்கள் ௦%
தலைவர்களுக்காக மக்கள் 1௦௦%

சிவா.ஜி
04-11-2012, 01:55 PM
உண்மைதான் கோவிந்த் மக்கள் சக்தி இழந்து சவலைகளாகிவிட்டனர்....கவலைப்பட யாருமில்லை. மிக்க நன்றி.

சிவா.ஜி
04-11-2012, 01:55 PM
சரியாக சொன்னீர்கள் கண்ணப்பு. மிக்க நன்றி.