PDA

View Full Version : கண்ணற்றது காதல்



ந.க
30-10-2012, 05:29 PM
கண்ணற்றது காதல்

விண்வெளி வந்தது ஓரு தேவதை
கூட்டுக்குள் ஓன்றாய் ஒட்டி நின்ற
ஓரு கூட்டுக் கோள்கள் வந்து கூடின
மின்னல் கொடிகள் ஆட்டிக் கூடின

கோடிக் கோளங்கள் -அவள்
கண் கண்டு சூடுகொண்டு
தங்கள் இடங்களை மாற்றிக்கொண்டன

தேனாய்ச் சிரித்தாள்
பித்துப்பிடித்த கோள்கள்
சுழன்றன சுழன்றன

அவள் தோளில் தொடங்கிச்
பாதம்வரை வந்து சேர்த்தன
தங்களால் அவளைச் சோடித்தன

காதலில் கூடிய கோளங்களை
கையில் கூட்டி எடுத்து
கோலமிட்டாள் பால் வெளியெங்கும்
பந்தயப் பாதையிட்டாள்

முந்துபவரை
முடிசசுப் போட்டு
சூடிக்கொள்வதாய்த்
திருமணப் பந்தவலயத்துள்

காதல் கொண்ட கோள்கள்
சோதிப்்பெண்ணைச்்சொந்தம் கொள்ள
ஒன்றையொன்று முந்த ஓடின
அவள் போட்ட முடிவிலிக் கோலத்துள்்

ஒன்றொடொன்று முட்டி மோதி
காதல் நெருப்பில் அவிந்து
துண்டங்களாகித் துணைக் கோள்களாகி
சோதிப்பெண்ணைச் சொந்தங்கொள்ள
காதற் கவர்ச்சியில் கட்டுண்ட பாதையில்

மோதி மோதி
சோதி சோதி
பெருகிப் பெருகி
சோதிப் பெண்ணைத் தேடித் தேடி
சுழலும் கோள்களோ கோடி கோடி

அவள் அழகில்
பெருகிய சூரியர்களுக்கு
போட்டி போட்டி
வெளியெங்கும் அவளன் காதலில்
சுழலும் சோதிகள்

முடுக்கிய முடிவில்லாக் காதல்
அழகில் பெருகிய அதிசய வெளி

காதலில் பெருக்கம்
காதலில் அழகு
காதலில் இயக்கம்

விண்வெளி முற்றம்
விந்தைகள் மையம்
காதலில்் சுழலும்
திசையறியாக்
கண்ணற்ற கோள்கள்
அவளைச் சுற்றி
அவளின் பாதையில்

நித்தியக் காதலில்
கண்ணற்ற காதலில்
சோதி சோதி....

கீதம்
01-11-2012, 01:44 AM
சூரியனைக் காதலியாகவும், கோள்களை அவள் காதலர்களாகவும் கொண்டு கவிதை படைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பால்வெளி மண்டலத்தின் பரந்துபட்ட குடும்பத்தை பாவழி ரசிக்கச் செய்தமை அழகு. பாராட்டுகள்.

கலைவேந்தன்
01-11-2012, 12:20 PM
கவிதை சும்மா ஜிவ்வுன்னு அருமையா இருக்கு. ஆனா சொல்லவந்தது என்னன்னு தான் ஒரே கிறக்கமா இருக்கப்பு கண்ணப்பு.

ஒரு தேவதை பற்றிய அருமையான வனப்பதிகாரம். அதை அருமையாய் ரசிக்க முடிந்தது, ஆனால் கண்ணற்ற காதல் என்பதுக்கு தான் நானும் குழப்பமாகி விடை தேட முயன்று தோற்கிறேன். இதுக்கு தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம நான் எழுதின கலையாமல் கலைக்கும் கலை பரவாயில்ல போலிருக்கே.. :) ( சும்மா தமாசுக்கு சொன்னேன் கண்ணப்பு. )

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அப்பு. கொஞ்சூண்டு தலைப்பையும் நியாயப்படுத்திட்டீங்கன்னு வைங்க.. இன்னும் சூப்பரா இருக்கும். இல்லைன்னா என் மரமண்டைக்குதான் ஒண்ணுமே விளங்கலையோ என்னமோ.. :)

பாராட்டுகள் கண்ணப்பு.

ந.க
04-11-2012, 11:53 AM
கீதம் , கலைவேந்தன் உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இந்த எண்ண ஓட்டம் பதினிரண்டு ஆண்டுகளுக்கு முன்பதிவாகியது. அண்டம் ஒரு வெளி அந்த மாசக்தி ஒரு பெண் , அத்தனை கோள்களுக்கும் தாயும் காத்லியும் அவள் - அந்தப் பால்வெளி இயக்கம் முழுமை ஒரு காதல் , கோள்களுக்கு கண் இல்லையோ - இடறுகின்றன - மோதுகின்றன- கவரப்படுகின்றன-கவருகின்றன. இந்தக் காதல் ஈர்ப்பில் கண்ணில்லை..........தெளிவில்லாமல் இருந்தால் , எனது எண்ணப்பதிவில் எங்கோ கோளாறு என்று தான் பொருள். திருத்திக்கொள்கின்றேன். மிக்க நன்றி

மஞ்சுபாஷிணி
04-11-2012, 02:20 PM
ரசனையுள்ள கவிதை வரிகள் சிறப்புப்பா....

பூவுலகில் காதல்... மனிதரிடம் காதல்... மிருகங்கள் காதல்... பக்*ஷிகள் காதல்..... இப்ப கோள்கள் காதலா.. அட்டகாசம்... கோள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதை அழகாய் உவமைகளுடன் அமைத்த காதல்வரிகள் அழகு...

அன்புவாழ்த்துகள்பா...

ந.க
13-11-2012, 04:49 PM
பண்பலையில் உங்கள் நேர்முகம் கேட்டேன் திருமதி மஞ்சுபாஷிணி அவர்களே, தங்களின் அடக்கமான மனதின் வெளிப்பாடு வாழ்த்தாய் தெரிந்தது. மிக்க நன்றி.

மஞ்சுபாஷிணி
13-11-2012, 06:52 PM
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கண்ணப்பு... என்னுடையதை நான் கேட்கவில்லைப்பா... ஆனால் மூவருடையது கேட்கும் வாய்ப்பு கிடைத்ததுப்பா...

நாஞ்சில் த.க.ஜெய்
13-11-2012, 10:13 PM
உண்மையை தேடும் பக்குவட்ட மனித மனதின் வரிகள் ...

ந.க
14-11-2012, 06:28 AM
மிக்க நன்றி நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே.

செல்வா
15-11-2012, 01:24 AM
நட்சத்திரங்களுக்கும் கோள்களுக்குமிடையே இருக்கும் ஈர்ப்புவிசையை காதலாய் உருவகப்படுத்தியது அழகு.
ஒரு சின்ன நெருடலாய் எனக்குத் தோன்றுவது என்ன வென்றால். நட்சத்திரங்களைச் சுற்றி கோள்கள் வருகின்றன. அப்படி விண்ணில் நிறைய நட்சத்திரங்களும் அவற்றைச் சுற்றி கோள்களும் இருக்கின்றன.
அவள் வரைந்த கோலங்கள் வழியேச் சுழலும் கோள்கள் எனும் போது அவள் இயற்கை அல்லது கடவுள் என உருவம் கொள்கிறாள்.
அவள் மீதுள்ள ஈர்ப்பால் (காதலால்) கோள்கள் சுழலுகின்றன எனும் போது அவள் நட்சத்திரமாகிறாள்.

கொஞ்சம் விளக்குங்களேன்.

அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ந.க
16-11-2012, 01:54 PM
நட்சத்திரங்களுக்கும் கோள்களுக்குமிடையே இருக்கும் ஈர்ப்புவிசையை காதலாய் உருவகப்படுத்தியது அழகு.
ஒரு சின்ன நெருடலாய் எனக்குத் தோன்றுவது என்ன வென்றால். நட்சத்திரங்களைச் சுற்றி கோள்கள் வருகின்றன. அப்படி விண்ணில் நிறைய நட்சத்திரங்களும் அவற்றைச் சுற்றி கோள்களும் இருக்கின்றன.
அவள் வரைந்த கோலங்கள் வழியேச் சுழலும் கோள்கள் எனும் போது அவள் இயற்கை அல்லது கடவுள் என உருவம் கொள்கிறாள்.
அவள் மீதுள்ள ஈர்ப்பால் (காதலால்) கோள்கள் சுழலுகின்றன எனும் போது அவள் நட்சத்திரமாகிறாள்.

கொஞ்சம் விளக்குங்களேன்.
. விஞ்ஞானம் சொல்வதைப்படி பார்த்தால் கோள்-துணைக்கோள்-சூரிய குடும்பம்-நட்சத்திரக்குடும்பம் மொத்தமாக ஒரு ஒழுங்கில் ஒரு ஈர்ப்பில் எல்லாம் துரத்தி விளையாடுவது-ஒரு பாதையில் வலம் வருவது உண்மை.

ஆத்மீக அழகியில் உணர்வில் ஒன்றி பார்த்தால் ஒரு மையம் எங்கோ இருக்க வேண்டும், நான் நினைக்கின்றேன் அதுதான் அவள்-அது- அந்த ஈர்ப்பின் கரு-

நீங்கள் சொல்வது போல் நட்சத்திரங்களின் கருவாகிறாள்-நானும் அதைத்தான் கருதினேன் அன்று பதின்ரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்.

இங்கே அந்தப் பால்வெளிப் பரப்பில் ஒரு பெரும் காதல் -ஈர்ப்புண்டு,
பூமியிலே பூமியை நோக்கிய ஈர்ப்பு.
பூமிக்கும் சந்திரனும்மும் ஈர்ப்பு,
சூரியனுக்கும் பூமிக்கும் ஈர்ப்பு.
பின்னர் மொத்தமாய் சூரிய குடும்பங்கள் பலவற்றிற்கிடையே ஈர்ப்பு.

இந்த ஈர்ப்பு காதல்.
இந்த ஈர்ப்பு சுழற்சியின் சூட்சுமப் பொருள்.
இது காதலின் கரு,
கடவுளின் கருவும் கூட...

உங்கள் ஆழ்ந்த சிந்தனையான ரசனையின் முடிவில் வந்த கேள்வியில் பதிலையும் சொன்னீர்கள்,
அதில் நீங்கள் உறுதியாச் சொன்னீர்கள் அவள் நட்சத்திரமா என்று அதில் எனக்கு உடந்தையே,


வெளியில் வேடிக்கை புரியும்
கோள்களின் சுழற்சியின் காலும்-
காரணமும் அவள் ஆனாள்
சுற்றப் பண்ணியதால்
சுற்றிய இடமெல்லாம்
அதுதான் அந்தப் பால்வெளியும்
அவளானாள்,

அவள்
ஏவி விடுகிறாள்
ஏந்தி விளையாடுகிறாள்,

அவளை அவளால் சுத்துகின்றன
அவள்,
அவற்றில்
காரணமும் காரியமுமாய்க் கலக்கிறாள்
இதனால் அவள் கடவுள்...
கவர்ச்சியில் கட்டிப் போட்டதால்
அவள் நட்சத்திரம்.......


உங்கள் கேள்வியில் உங்களின் நிறைவான விளக்கம் ரசனை புரிகிறது மிகப் பெரிய சந்தோசம் நன்றி.

செல்வா அவர்களே நீங்கள் என்னை மீண்டும் அந்தக் காதலுக்குள் சுழலவிட்டீர்கள் நன்றி.....