PDA

View Full Version : பூரண ஞாபகம்!



நாகரா
29-10-2012, 01:40 PM
அமிழ்தம்
நிரம்பி வழியுங் கோப்பை
நீ

திறக்க முடியாத மூடியால்
நிரம்ப முடியாது காலியாய்க்
கிடப்பதாய் பிரமையில்

உன் மீது பொழியும் அமிழ்தம்
மூடிப் பிரமையைக் கரைக்கும்
ஞான அமிலம்

நிரம்பிப் பருகி
வழிந்துப் பகிரும்
உன் நிதர்சனத்தை
மறக்கலாம்
மறைக்கலாம்
மறுக்கலாம்
ஆனால் அழிக்க முடியாது

மறந்தது நினைவுக்கு வரும்
மறைந்தது வெளிப்படும்
மறுத்தது ஏற்கப்படும்

இது சத்தியம் நிச்சயம்

கோப்பையுன் உடைபடா திடம்
காலி இருதயம்
மூட முடியா மெய்வழி

அம்மெய்வழி பாயும்
நித்திய ஜீவாமிழ்தம்
நின் மெய்த்திடத்தை
உடைபடாத காலியாக்கும்

மெய்வழி ஜீவனின்
பூரணப் பிரமாணம்
நீ

பருகிப் பகிர
எப்போதும் திறந்திருக்கும்
உன் நிதர்சனத்தை
உணரக்
கட
உள்

கோப்பையுன்னில் அடங்காது வழியும்
உன் காலி மார்பில் காலியாகாது பொழியும்
நேச அமிழ்தத்தைப்
பருகிப் பகிரக்
கட
உள்

பகரலாகா
உன் நிதர்சனத்தைப்
பகரும்
'ப'கர வடிவம்

கூர்ந்து பார்
கருந்திடத்தில்
அடைபடா வெண்மையின்
அனக விரிவை

இதுவே
உன்
விசுவ ரூபம்

என்றென்றுஞ் ஜீவித்திருக்கும்
எல்லா விதத்திலும் பூரணமாய் வெளிப்பட்டுள்ள
என்/உன்/ஒவ்வொன்றின் பூரணத்துவம்
(சிறிய 'ப'வை பெரிய வெள்ளைத் தாளின் நடுவில் கருப்பு மையில் எழுதிக் கூர்ந்து பார்!)

ஜானகி
29-10-2012, 03:14 PM
தாங்கள் பெற்ற இன்பம் எல்லோரும் பெற நீங்கள் விழைவது.....இறையாண்மையின் மேன்மைதான்...

நாகரா
01-11-2012, 01:05 PM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி ஜானகி