PDA

View Full Version : போன்சாய் காடு...



HEMA BALAJI
28-10-2012, 03:50 PM
http://2.bp.blogspot.com/-6RC_rxiQAtY/T87sCRnElMI/AAAAAAAAApU/9ygqNPPhsxk/s400/Bonsai.jpg

தனித்தே விளையாடிப் பழகிய சிறுவன்
தனக்கென விளையாட ஒரு
காட்டை சித்தரித்தான்
போன்சாய் மரங்களுடனும்
போன்சாய் விலங்குகளுடனும்

வானுயரும் சில்வர் ஓக்கும்
தேகம் விரிக்கும் தேக்கு மரமும்
விரிந்து பரந்த ஆலமரமும்
புத்தன் நிரைத்த போதி மரமும்
தன் உருவம் குறுக்கி போன்சாயாக
சிறுவனின் காட்டுக்குள்
சாமரம் வீசிக்கொண்டிருந்தது

கழுத்து நீண்ட ஒட்டகச் சிவிங்கியும்
காட்டுக்கே ராஜா சிலிர்த்த சிங்கமும்
தாவி ஒடும் புள்ளி மானும்
கவ்விப் பிடிக்கும் சிறுத்தைப்புலியும்
வகை வகையாய் பிற மிருகங்களும்
தன் சுயத்தை அடக்கி சிறிய உருவில்
துள்ளித் திரிந்தன சிறுவன் காட்டில்

பார்த்துப் பார்த்துக் களித்த சிறுவன்
சற்றே சலிப்புற மாற்றம் வேண்டி
மனிதனை காட்டுக்குள்
இறக்கினான் போன்சாயாக

சுற்றி சுற்றிப் பார்த்த மனிதன்
அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
சிற்றுருவம் பார்த்துச் சினுங்கிய மனிதன்
தன் பசி தான் தீர்க்க வேண்டி
பிடித்துக் கடித்தான் போன்சாய் முயலை

கடித்தவுடன் கைகள் வளர
அடித்துத் தின்றான் போன்சாய் மானை
அடிக்கக் கடிக்கக் அவன் உருவம் வளர
அதிர்ச்சி காட்டின போன்சாய் உயிர்கள்

புல்லைப் பிய்த்த மானும் வளர
மானை அடித்த புலியும் வளர
ஒட்டகம் பிடித்த சிங்கமும் பெருக்க
மரத்தின் வேர்கள் நகர்ந்து
அடுத்ததை உரிஞ்ச

போன்சாய் காடு ஆனது மிகையாய்
போன்சாய் மிருகங்கள் ஆனது பெரிதாய்
மனிதன் காட்டிய வழியைப் பிடித்து
குறுக்கே ஓடிய அவனை வதைத்து
அனைத்தும் ஓடின வெளியே குதித்து

மறுபடி சிறுவன் தனியனானான்
போன்சாய் பிணத்தை வெறிக்கலானான்..

செல்வா
29-10-2012, 01:03 AM
கடவுள் படைத்த இந்த உலகம் எத்தனை அழகானது
அத்தனையும் அழிக்கும் மனிதன்
அடுத்து என்ன செய்வதென்று சிந்திக்கும் கடவுளோ?

கடவுளையேச் சிறுவனாக்கி விட்டீர்களே...?

கவிதை அருமை .. வாழ்த்துக்கள்..!

HEMA BALAJI
29-10-2012, 08:29 AM
நன்றி செல்வா அவர்களே.

சுகந்தப்ரீதன்
29-10-2012, 09:13 AM
அருமையானதொரு படைப்பை தந்த தங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இன்றைய நிலையில், நான்கில் ஒரு பாலூட்டி... எட்டில் ஒரு பறவை... மூன்றில் ஒரு ஊர்வன... உலகில் அழிந்து கொண்டிருக்கிறதாம்... பூச்சிகளின் இறப்புவிகிதம் வழக்கத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறதாம்... மீன்களின் வாழ்விடம் கால்பாகமே எஞ்சி இருக்கிறதாம்... ஒவ்வொரு வருடமும் உலகில் 30 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காணாமல் போகின்றதாம்...

இவை அத்தனைக்கும் காரணம் மனிதனின் சுயநலம்... எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான இப்பூமியை தனெக்கென சுருக்கி சுருட்டியதன் விளைவு... இதில் உச்சகட்ட அதிர்ச்சி என்னெவென்றால் உலகின் 80 சதவிகித இயற்கை வளங்கள் உலகின் 20 சதவிகித மக்களால் கொள்ளையடிக்கபடுவதுதான்..!!

நேரம் கிடைக்கையில் அதிர்ச்சி அளிக்கும் இந்த காணொளியை (http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU)காணுங்கள்...!!

jayanth
29-10-2012, 09:20 AM
மாய உலகில் உலா வந்த உணர்வு...!!!

பாராட்டுக்கள் ஹேமா...!!!

M.Jagadeesan
29-10-2012, 11:45 AM
மனிதன் நரகத்தை சொர்க்கமாக்குவான்; சொர்க்கத்தை நரகமாக்குவான். நல்ல கற்பனை கதை கொடுத்த H.B. அவர்களுக்கு நன்றி!

ஜானகி
29-10-2012, 03:30 PM
கனவுலகின் மாயம் பலிக்காமல் இருக்கட்டும்...
புதுமையான சிந்தனை......வாழ்த்துக்கள் !

HEMA BALAJI
29-10-2012, 04:13 PM
அருமையானதொரு படைப்பை தந்த தங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இன்றைய நிலையில், நான்கில் ஒரு பாலூட்டி... எட்டில் ஒரு பறவை... மூன்றில் ஒரு ஊர்வன... உலகில் அழிந்து கொண்டிருக்கிறதாம்... பூச்சிகளின் இறப்புவிகிதம் வழக்கத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறதாம்... மீன்களின் வாழ்விடம் கால்பாகமே எஞ்சி இருக்கிறதாம்... ஒவ்வொரு வருடமும் உலகில் 30 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காணாமல் போகின்றதாம்...

இவை அத்தனைக்கும் காரணம் மனிதனின் சுயநலம்... எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான இப்பூமியை தனெக்கென சுருக்கி சுருட்டியதன் விளைவு... இதில் உச்சகட்ட அதிர்ச்சி என்னெவென்றால் உலகின் 80 சதவிகித இயற்கை வளங்கள் உலகின் 20 சதவிகித மக்களால் கொள்ளையடிக்கபடுவதுதான்..!!

நேரம் கிடைக்கையில் அதிர்ச்சி அளிக்கும் இந்த காணொளியை (http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU)காணுங்கள்...!!

கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன் சுகந்தப்ரீதன். பின்னூட்டத்திற்கு நன்றி...

HEMA BALAJI
29-10-2012, 04:14 PM
மாய உலகில் உலா வந்த உணர்வு...!!!

பாராட்டுக்கள் ஹேமா...!!!

:)நன்றி ஜெயந்த்...

HEMA BALAJI
29-10-2012, 04:16 PM
மனிதன் நரகத்தை சொர்க்கமாக்குவான்; சொர்க்கத்தை நரகமாக்குவான். நல்ல கற்பனை கதை கொடுத்த H.B. அவர்களுக்கு நன்றி!

ம்... கற்பனைக் கதை????... ( இதுல ஏதோ உள் குத்து இருக்கறா மாதிரி தெரியுதே) :traurig001:

HEMA BALAJI
29-10-2012, 04:16 PM
கனவுலகின் மாயம் பலிக்காமல் இருக்கட்டும்...
புதுமையான சிந்தனை......வாழ்த்துக்கள் !

நன்றி ஜானகி அவர்களே...

கோபாலன்
29-10-2012, 05:09 PM
அருமையான கற்பனை. அழகான கவிதை :)

கீதம்
29-10-2012, 10:00 PM
அழகாய்த் துவங்கிய சிறுவனின் உலகம், இப்படி அழிவாய் உருவானதே... செல்வாவின் கருத்தே என்னுடையதும். அருமையான சிந்தனைக்குப் பாராட்டுகள் ஹேமா.

நாஞ்சில் த.க.ஜெய்
30-10-2012, 01:46 AM
இறைவன் படைப்பில் அவரவர் பணியினை திரும்ப திரும்ப செய்து வந்தால் படைத்த படைப்பில் ஒரு ஈர்ப்பு இருக்காதென்று படைத்த மனிதன் அந்த கடவுளின் மனதினை புரிந்து கொண்டான் போலும் ..நம்மில் வார்த்தைகளில் வருத்தபடும் மனிதர்கள் செயலளவில் சிந்தித்தால் போதும்..தன்னலம் பெரிதென்று மற்றவர்களின் வாழ்வாதரம் அழிகின்றதென்று சிந்தித்து வருத்தபடுவதை விடுத்து நம்மால் இயன்றதை செய்யலாமே..நல்லதோர் கருத்துக்கவிதை..இக்கவிதைக்கு என் அன்பளிப்பு ஈபணம் 200 ..
வாழ்த்துக்கள் ஹேமாபாலாஜி அவர்களே...

HEMA BALAJI
31-10-2012, 07:41 AM
அருமையான கற்பனை. அழகான கவிதை :)

நன்றி கோபாலன்...

HEMA BALAJI
31-10-2012, 07:43 AM
அழகாய்த் துவங்கிய சிறுவனின் உலகம், இப்படி அழிவாய் உருவானதே... செல்வாவின் கருத்தே என்னுடையதும். அருமையான சிந்தனைக்குப் பாராட்டுகள் ஹேமா.

நன்றி கீதம்..

HEMA BALAJI
31-10-2012, 07:44 AM
இறைவன் படைப்பில் அவரவர் பணியினை திரும்ப திரும்ப செய்து வந்தால் படைத்த படைப்பில் ஒரு ஈர்ப்பு இருக்காதென்று படைத்த மனிதன் அந்த கடவுளின் மனதினை புரிந்து கொண்டான் போலும் ..நம்மில் வார்த்தைகளில் வருத்தபடும் மனிதர்கள் செயலளவில் சிந்தித்தால் போதும்..தன்னலம் பெரிதென்று மற்றவர்களின் வாழ்வாதரம் அழிகின்றதென்று சிந்தித்து வருத்தபடுவதை விடுத்து நம்மால் இயன்றதை செய்யலாமே..நல்லதோர் கருத்துக்கவிதை..இக்கவிதைக்கு என் அன்பளிப்பு ஈபணம் 200 ..
வாழ்த்துக்கள் ஹேமாபாலாஜி அவர்களே...

ஈ பணம்???? அது என்ன? வாழ்த்துகளுக்கு நன்றி ஜெய் அவர்களே...

சிவா.ஜி
31-10-2012, 08:04 AM
படைக்கப்படும் அனைத்துமே அவைகளின் தன்மையில் சிறப்பானவைதான்....சிறிதோ பெரிதோ தனித்தனி சிறப்பு....அனைத்தையும் மாற்றி அவலத்துள்ளாக்குவது மனிதனின் பொறுப்பு.

ஆண்டவன் ஆதாமை படைக்காமலேயே இருந்திருக்கலாமோ....நானும் ஒரு பறவையாய்...நஞ்சின்றி வாழ்ந்திருப்பேன்.

சிறப்பானக் கவிதைக்கு வாழ்த்துக்கள் தங்கையே.

HEMA BALAJI
31-10-2012, 03:25 PM
நன்றி சிவா அண்ணா..