PDA

View Full Version : பேனாய்ப் பிறக்கின்ற...



M.Jagadeesan
28-10-2012, 05:22 AM
தேனாய் இனிக்கின்ற தித்திக்கும் குரலுனக்கு!
மானாய் மருண்டு நோக்கும் பார்வையினால்
தூணாய் நின்றவன் துவண்டு விழுந்திட்டேன்
வானாலும் உரிமை வந்தாலும் யான்வேண்டேன்!
பேனாய் உன்தலையில் குடியிருந்து வாழுகின்ற
பெரும்பேறு ஒன்றே போதுமடி! எந்தனுக்கு!

நில்லாய் இளங்கொடியே! வாய்திறந்து நீ பேசும்
சொல்லே வேதமடி!சொக்கவைக்கும் உன்புருவம்
வில்லாய் வளைந்தென்னை வியக்க வைக்குதடி!
கொல்லாமல் கொல்லும் கொலுசின் ஓசைக்கு
அல்லாடும் காதுக்கு அருமருந்தாய் அமைந்தவளே!
புல்லாய்ப் பிறந்தாலும் உன்பாதம் தீண்டாது !
நல்லாய் ! ஆதலினால் உன்வீட்டுப் படிக்கட்டுக்
கல்லாய் பிறந்திடவே காதலியே ! விரும்புகிறேன்!

ஆற்றங் கரையோரம் உன்னருகே நானமர்ந்து
ஊற்றுநீர் தோண்டி உனக்குக் கொடுத்திடுவேன்!
வேற்று மொழியெல்லாம் வேப்பங் காயெனவே
தோற்றம் காட்டுகின்ற குரலினிமை உந்தனுக்கு
மாற்றம் வேண்டுகின்றேன் மாமணியே! நீஉண்ணும்
காற்றாய் பிறந்திடவே காதலியே ! வேண்டுகின்றேன்!

உலகையே பெற்றாலும் எனக்கது பொருட்டல்ல!
விலகாது உந்தன் மடிமீது வைத்திருந்து
பலகாலும் உன்பட்டுக் கைவிரல் தீண்டுகின்ற
அழகான மடிக்கணினி அவதாரம் எடுப்பதையே
உலகாளும் ஈசனை வரமாக வேண்டுகிறேன்.

சுகந்தப்ரீதன்
28-10-2012, 12:07 PM
மடிக்கணினி மனம் கவர்ந்தது..!!:)

ஐயாவின் வேண்டுதல் அனைத்தையும் ஐயன் அருளட்டும்..!!:icon_b:

M.Jagadeesan
28-10-2012, 12:14 PM
சுபியின் பாராட்டுக்கு நன்றி!

ந.க
28-10-2012, 12:16 PM
'பேனாய் உன்தலையில் குடியிருந்து வாழுகின்ற..'
மனதை
அறுத்தெடுத்த
உன்னை
அரித்தெடுக்க,

என்னை
பேனைப் போல்..
உன் ரத்தம்
குடித்தெடுக்க
குடிகொள்ளப் போறேன்

பெருந் தொல்லை
பேன் ஆகி
போதிக்க
கொடுக்கோடு ஒரு பிறவி எடுக்கப் போறேன்.......

அப்படியா?
நன்று ........நன்றி...........

சிவா.ஜி
28-10-2012, 02:19 PM
பேனாய் தலையிலும், கணினியாய் மடியிலும் தவழ வேண்டுகோள் விடுக்கும் கவிதைக்கு செவி சாய்த்து கடவுள் அருளட்டும்...

அழகான வேண்டுகோள்கள் ஐயா. வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
28-10-2012, 02:48 PM
கண்ணப்பு, சிவா.ஜி. ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

arun
28-10-2012, 05:18 PM
ஆகா ஆகா அழகான வரிகள் ! பிரமாதம் பாராட்டுக்கள்

M.Jagadeesan
29-10-2012, 04:49 AM
அருண் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!