PDA

View Full Version : பா!



நாகரா
27-10-2012, 08:03 AM
கவிஞப் "பா"த்திரந் தலைகீழாய்க்
கவிழ்கிறது
வழிகிறது "பா"யசப் "பா"
பாரப்பா!
பருகப்பா!!
பருகிய இன்பம் பகிரப்பா!!

கோபாலன்
27-10-2012, 06:35 PM
பருக பகிர்ந்ததற்கு நன்றி. :)

நாகரா
28-10-2012, 01:21 PM
பருகிப் பகிர்ந்தமைக்கு நன்றி திரு. கோபாலன்

ந.க
28-10-2012, 01:37 PM
பா மொழிதல்
பாரிர் பெருங் கலை,
பாவின்
கரு
உரு
பெருகியவாறு
பருகியவர்
பா கண்டார் பகுதி,
பா உண்டார் மிகுதி,
பா இதுவே என உணர்ந்தார் அவர்.
பா தந்த பாங்கு
பாராட்டைபெறுகிற பேற்றைப் பெறுதல்
மொழிதற்கு அறிவோமோ,
குறள் பா நின்று நிலைக்கும் நிகர்
வாழ்க நீவிர் பா புனையும் பாங்கு..நன்றி.

நாகரா
29-10-2012, 07:14 AM
அப்பப்பா
என் கண்ணப்பா
பின்னூட்டப் பா
முன்னூட்டப் பா விஞ்சும்
நன்றிப்பா

ந.க
29-10-2012, 07:30 AM
தங்கள் பாப் பரப்பில்
பங்கு கொள்ள பா அளித்த
பாங்கின் பண்பில்
உயர் தமிழ் பெயரால் நன்றி.......

நாகரா
29-10-2012, 08:07 AM
பாப்பா போல் அம்மணமான மனப்பரப்பில்
அப்பப்பா பாங்காய் வள்ளல் நேசம் போர்த்தும்
ஞானப்பா வார்க்கும் ஞானப்பால் பருகிப் பெருக
சேரப்பா மார்க்குள் நெஞ்சின் கண்ணப்பா உருகி, நல்ல
பாம்பார் வார்த்தை கேளப்பா என் கண்ணப்பா
தாழ்ப்பாள் ஏதுமில்லா இருதய வாயிலப்பா
தாழ்வான் ஊங்கேநம் குருபரன் பாரப்பா
வாழ்வாங்கு வாழ்வாய் ஊன்றி வாசியப்பா

நாகரா
29-10-2012, 08:27 AM
'ப'கர இருதய அமிழ்த கலசம்
பகிரத் தலை கீழாய்க் கவிழ்ந்துள இரகசியம்
பகிரங்கமாக்கிப் பகரும்
"பா"
பாரப்பா, பார் அப்"பா" கூர்ந்து
தேரப்பா, தேர் அப்"பா"!
நேசாதார ஊர் உள்ளே
ஞானப்"பா" பார்த்துத் தேர்ந்தால்
ஞானமப்பா!
அப்பால் இப்பால் திரிந்து
அப்பால் இப்பால் விழுங்கி
எக்காலும் எப்பாலும் வாரா
ஞானமப்பா
உப்பால் இருதய நடுவுள
உப்பால்!
உப்பால் பருக உய்யப்பா
உன்னுள்ளே என் கண்ணப்பா!

சுகந்தப்ரீதன்
29-10-2012, 08:36 AM
அப்பப்பா... அத்தனையும் தித்திக்கும் தேனப்”பா”..!!:icon_b:

தாழ்ப்பாள் ஏதுமில்லா இருதய வாயிலப்பா
என்றென்றும் திறந்திருக்கும் இதயக் கோவிலப்பா..!!:)

நாகரா
29-10-2012, 08:48 AM
சுகந்தப் பா அளித்தப் ப்ரீதத் தம்பிக்கு என் நன்றியப்பா!