PDA

View Full Version : ஊனப் பறவை....



HEMA BALAJI
25-10-2012, 01:05 PM
http://3.bp.blogspot.com/-bHdUw2iw1hk/T8i62BhsmUI/AAAAAAAAAnM/tocWleNzV9c/s400/bird.jpg


சுட்டெறிக்கும் சொற்களை
ஒவ்வொரு நொடியும் வீசுகின்றாய்
பூதானோ என மயங்கியே ஏற்கின்றேன்...

புன்னகையை எதிர்பார்த்து
செந்தனலைப் பெறுகின்றேன்

காலங்கள் பல கடந்து
உன் காதலைப் பெற வந்தேன்
தூரங்கள் பல நடந்து
உன் தோள்களில் சாய வந்தேன்

கண்களாலேயே காயம் செய்து
எட்டி என்னை நிற்க வைத்தாய்

மிகத் தேர்ந்த கண்கட்டு வித்தைக்காரன் நீ

நீ தருகின்ற காயங்களை எல்லாம்
கிரீடங்களாக எனை ஏற்கச் செய்தாய்

என் கூட்டை விட்டு வெகு தூரம்
வந்துவிட்டேன்
உனக்குப் பரிசாக என் சிறகு ஒன்றை
கொய்து கொண்டாய்

நீ இல்லாது நடக்க
கால்களும் அற்று
ஒற்றைச் சிறகுடன் ஊனப் பறவையாக
இத்தனை தூரம் நான் எப்படிக் கடப்பேன்?....

சுகந்தப்ரீதன்
28-10-2012, 08:33 PM
கூட்டை கடந்து வந்த குருட்டு குருவிகளுக்கு எப்படி தெரியும்.. எதிர்பார்ப்புகள் என்பது எப்போதும் நலத்தை மட்டுமே நாடி பயணிக்கும் ஒருவழி சாலை பயணமென்பது..!!:)

உதிர்ந்த சிறகுகளுடன் உலாவரும் பறவைகள் பலவிருக்க... இழந்த ஒற்றை சிறகை எண்ணி உள்ளம் கலங்கி.. இருக்கும் சிறகையும் இழந்துவிடாமல்... தொடர்ந்து முன்னேறு.. தூரமும் உன் துணைக்கு வரும்..!!:icon_b:

govindh
28-10-2012, 09:11 PM
ஊனப் பறவையின்..
ஊமைக் காதல் ஒழிந்து..
உற்சாகக் காதல் ஆகட்டும்..!

ஊனப் பறவையின்...
சோகக் காதல் மறைந்து..
சுகக் காதலாக மலரட்டும்....!

கவி நன்று...பாராட்டுக்கள்..

நாஞ்சில் த.க.ஜெய்
29-10-2012, 03:26 AM
மனம் ஊனமடையா வரை முன் அனுபங்கள் துணை கொண்டு சிறகை இழந்து சிறையில் அடைபடுவதை விட சுதந்திர உலகில் வலம் வரட்டும்....

HEMA BALAJI
29-10-2012, 08:33 AM
கூட்டை கடந்து வந்த குருட்டு குருவிகளுக்கு எப்படி தெரியும்.. எதிர்பார்ப்புகள் என்பது எப்போதும் நலத்தை மட்டுமே நாடி பயணிக்கும் ஒருவழி சாலை பயணமென்பது..!!:)

உதிர்ந்த சிறகுகளுடன் உலாவரும் பறவைகள் பலவிருக்க... இழந்த ஒற்றை சிறகை எண்ணி உள்ளம் கலங்கி.. இருக்கும் சிறகையும் இழந்துவிடாமல்... தொடர்ந்து முன்னேறு.. தூரமும் உன் துணைக்கு வரும்..!!:icon_b:

:)நன்றி...

HEMA BALAJI
29-10-2012, 08:34 AM
ஊனப் பறவையின்..
ஊமைக் காதல் ஒழிந்து..
உற்சாகக் காதல் ஆகட்டும்..!

ஊனப் பறவையின்...
சோகக் காதல் மறைந்து..
சுகக் காதலாக மலரட்டும்....!

கவி நன்று...பாராட்டுக்கள்..

நன்றி கோவிந்...

HEMA BALAJI
29-10-2012, 08:35 AM
மனம் ஊனமடையா வரை முன் அனுபங்கள் துணை கொண்டு சிறகை இழந்து சிறையில் அடைபடுவதை விட சுதந்திர உலகில் வலம் வரட்டும்....

நன்றி ஜெய் அவர்களே....

சிவா.ஜி
29-10-2012, 08:45 AM
கூட்டைத் துறந்த பறவை...விட்டில் பூச்சியாய் விழுந்துவிட்டது. விளக்கின் தன்மையை விளக்கு காட்டிவிட்டது...விட்டில்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

பாராட்டுக்கள் தங்கையே.

HEMA BALAJI
29-10-2012, 08:54 AM
நன்றி சிவா அண்ணா...

கோபாலன்
29-10-2012, 05:18 PM
சிறகிழந்த பறவை நன்றாய் உயரமாகதான் பறக்கிறது எந்தன் உள்ளத்தில்.
கவிதை மிகவும் நன்றாக இருந்தது. :)

கீதம்
29-10-2012, 09:53 PM
கண்மூடித்தனமான அன்பு வெளிப்படுகிறது ஒவ்வொரு வரியிலும். கண்கட்டு வித்தைக்காரன் அவனல்ல. சுடுசொற்களை பூவாகவும், காயங்களை கிரீடமாகவும் ஏற்கும் பறவையின் பலவீனம். அந்த பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக்கொண்டான்.. பரிசாக அதன் சிறகைக் கொய்துகொண்டான். அதை அனுமதித்த பறவையினுடைய முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? இனியும் கூடுதிரும்புமா அல்லது ஒற்றை சிறகோடு அவனைத் தேடித்திரியுமா?

மனம் தொட்ட வரிகள் ஹேமா. பாராட்டுகள்.

HEMA BALAJI
31-10-2012, 07:14 AM
சிறகிழந்த பறவை நன்றாய் உயரமாகதான் பறக்கிறது எந்தன் உள்ளத்தில்.
கவிதை மிகவும் நன்றாக இருந்தது. :)

நன்றி கோபாலன்..

HEMA BALAJI
31-10-2012, 07:16 AM
கண்மூடித்தனமான அன்பு வெளிப்படுகிறது ஒவ்வொரு வரியிலும். கண்கட்டு வித்தைக்காரன் அவனல்ல. சுடுசொற்களை பூவாகவும், காயங்களை கிரீடமாகவும் ஏற்கும் பறவையின் பலவீனம். அந்த பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக்கொண்டான்.. பரிசாக அதன் சிறகைக் கொய்துகொண்டான். அதை அனுமதித்த பறவையினுடைய முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? இனியும் கூடுதிரும்புமா அல்லது ஒற்றை சிறகோடு அவனைத் தேடித்திரியுமா?

மனம் தொட்ட வரிகள் ஹேமா. பாராட்டுகள்.
தெரிந்தே சிறகிழக்கும் முட்டாள் பறவைகள் அதிகம் தான் கீதம்.. நீங்கள் கூறியது மிகச் சரியே. பாராட்டுகளுக்கு நன்றி கீதம்.