PDA

View Full Version : மரணம் எனப்படுவது!!!...



HEMA BALAJI
25-10-2012, 01:00 PM
http://2.bp.blogspot.com/-08rVr_m0Lg4/T3sOzjiCsYI/AAAAAAAAAks/60LzqOoQI8Q/s400/imagesCAM4KGTP.jpg


எப்போதும் கூச்சலுடனும் குழப்பத்துடனும்
எதைத் தேடுகின்றோம்
என்பதே அறியாத மனதை
அமைதியுறச் செய்வது மரணம்...

உடலைத் தள்ளி நின்று பார்க்கும் ஆத்மாவாக
உடல் உள் நோக்குகையில்
இத்தனை நாள் கோபமும் தாபமும்
சுயநலமும் அகங்காரமும்
அதிக அழுத்தமுடன் நாளங்களில்
ரத்தத்துடன் ஓடியிருப்பதைப்
புரிய வைப்பது மரணம்..

அன்பின் துளிகளை கண்ணீர் வழி வடித்து
வாக்கியமாக இருக்கும் பலவையும்
வாக்குகளாக மாற்றி தன் தொடு உணர்வால்
உணரச் செய்வது மரணம்...

இரவுமற்று பகலுமற்று இருக்கும்
சந்தியா காலம் போல
மொழிகளற்று கற்பிக்கப்படும்
உன்னத பாடம் மரணம்...

மரணம் பயத்தின் கடைசி கட்டம்
அமைதி மரணத்தின் உச்ச கட்டம்
ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...

கோபமும் பிரியமுமாய் நடக்கும்
வாழ்க்கை துவந்த யுத்தத்தின்
முற்று மரணம்...

உடலைப் போற்றிய அசுரத்தனம் துறந்து
ஆன்மாவைப் போற்றும்
தேவ நிலை மரணம்...

பிறப்பின் துக்கமல்ல
துறப்பின் தெய்வநிலை மரணம்
ஆன்மாவின் அடுத்த அத்தியாயம்
இந்நீள் தூக்கம்...

சுக்கிலத்தில் பிறந்த உடலை
சுட்டெறித்துத் தொடரும்
புனிதப் பயணம் மரணம்...

செல்வா
25-10-2012, 01:05 PM
நான் வாசித்த வரையில்
மரணத்தைப் பாடிய கவிதைகள் குறைவே.


மரணம் பயத்தின் கடைசி கட்டம்
அமைதி மரணத்தின் உச்ச கட்டம்
ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...

கோபமும் பிரியமுமாய் நடக்கும்
வாழ்க்கை துவந்த யுத்தத்தின்
முற்று மரணம்...

இவை என்னைக் கவர்ந்தவை

தொடருங்கள்... வாழ்த்துக்கள்..!

HEMA BALAJI
25-10-2012, 01:08 PM
உடனடி பின்னூட்டிதற்கு நன்றி செல்வா...

jayanth
25-10-2012, 01:35 PM
மரணத்திற்கு இவ்வளவு உண்டா...

கவிதை நன்றாக இருந்தது ஹேமா...!!!

HEMA BALAJI
25-10-2012, 01:54 PM
நன்றி ஜெயந்த்...

ந.க
28-10-2012, 09:49 AM
மரணம் முடிவல்ல
முடியாத முடிவின் தொடக்கம்.

சிந்திக்கத் தூண்டிய சித்திர வரிகள்.

ஜானகி
28-10-2012, 12:17 PM
புனிதப் பயணத்தின் தொடக்கமான மரணம் கற்பிக்கும் பாடத்தை ஆன்மா புரிந்துகொள்ளுமா....?
சிந்திக்கத் தூண்டும் கவிதை.....

நாகரா
28-10-2012, 01:38 PM
எப்போதும் கூச்சலுடனும் குழப்பத்துடனும்
எதைத் தேடுகின்றோம்
என்பதே அறியாத மனதை
அமைதியுறச் செய்வது மரணம்...

மனதின் சுமையை
மெய் ஏன் சுமக்க வேண்டும்
வீணே சுமந்து அது ஏன்
பொய் ஆகிப் போக வேண்டும்


உடலைத் தள்ளி நின்று பார்க்கும் ஆத்மாவாக
உடல் உள் நோக்குகையில்
இத்தனை நாள் கோபமும் தாபமும்
சுயநலமும் அகங்காரமும்
அதிக அழுத்தமுடன் நாளங்களில்
ரத்தத்துடன் ஓடியிருப்பதைப்
புரிய வைப்பது மரணம்..

இதை மெய்யுள் இருக்கையிலேயே புரிந்தால்
மனச் சுமையை இருதயத்துள் இறக்கி
மெய்யை மெய்யாகவே
மெய்யாய் மாற்றி இருக்கலாமே
அதைப் பொய்த்துப் போகச் செய்யாமல்


அன்பின் துளிகளை கண்ணீர் வழி வடித்து
வாக்கியமாக இருக்கும் பலவையும்
வாக்குகளாக மாற்றி தன் தொடு உணர்வால்
உணரச் செய்வது மரணம்...

மெய்யுள் இருந்த போதே
நெஞ்சக் கண்ணீர் அன்பை வடித்திருந்தால்
வள்ளல் அன்பின் அருள் வாக்கைத் தொட்டு
மெய்யைக் கற்பூரமாய்
மணக்க விட்டிருக்கலாமே


இரவுமற்று பகலுமற்று இருக்கும்
சந்தியா காலம் போல
மொழிகளற்று கற்பிக்கப்படும்
உன்னத பாடம் மரணம்...

இறப்புமற்ற*ப் பிறப்புமற்ற*
இரண்டுக்கும் இடையே ஈனப் பிழைப்புமற்ற*
பெரு வாழ்வின் கலையை
பருவுடல் மெய் உள்ள போதே கற்றிருக்கலாமே?


மரணம் பயத்தின் கடைசி கட்டம்
அமைதி மரணத்தின் உச்ச கட்டம்
ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...

"அபயம் யாமுளோம்"
மரண பயத்தை நீக்கும்
அன்பே தானெடுத்த மெய்யைத்
தன்னுள் கரைக்கும்
இதுவன்றோ பெருவாழ்வின் உச்சம்


கோபமும் பிரியமுமாய் நடக்கும்
வாழ்க்கை துவந்த யுத்தத்தின்
முற்று மரணம்...

இருமை இருளை
அருண்மை அருளால்
மெய்யுள்ள போதே
நீக்கி இருக்கலாமே


உடலைப் போற்றிய அசுரத்தனம் துறந்து
ஆன்மாவைப் போற்றும்
தேவ நிலை மரணம்...

மெய்யை மறைக்கும் அசுத்தம் உரித்து
அன்பில் கரைக்கும்
அமர நிலை இருக்க*
எதற்கு மரணம்


பிறப்பின் துக்கமல்ல
துறப்பின் தெய்வநிலை மரணம்
ஆன்மாவின் அடுத்த அத்தியாயம்
இந்நீள் தூக்கம்...

பிறந்தோமில்லை
இறப்போமில்லை
அன்பின் உயிர்நிலையில் மெய் ஒன்ற
ஓங்கும் உயிர்மெய் ஓர்மை
அன்பின் அதீத விழிப்பு


சுக்கிலத்தில் பிறந்த உடலை
சுட்டெறித்துத் தொடரும்
புனிதப் பயணம் மரணம்...
நாத விந்து கலாதி
குரு வாசி அளியின்(அமுத) திடமாங்
கற்ப மெய்யை உணராது
இட்டும் சுட்டும் செய்யும் பிரமைகள்
கட்டுங் கற்பிதக் கதையே மரணம்

என்னைத் தீர்க்கமாக சிந்திக்கத் தூண்டிய உம் கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஹேமா.

HEMA BALAJI
28-10-2012, 03:21 PM
மரணம் முடிவல்ல
முடியாத முடிவின் தொடக்கம்.

சிந்திக்கத் தூண்டிய சித்திர வரிகள்.

நன்றி கண்ணப்பு அவர்களே...

HEMA BALAJI
28-10-2012, 03:22 PM
புனிதப் பயணத்தின் தொடக்கமான மரணம் கற்பிக்கும் பாடத்தை ஆன்மா புரிந்துகொள்ளுமா....?
சிந்திக்கத் தூண்டும் கவிதை.....

வருகையும் பதிவையும் தந்து மகிழ்வையும் தந்த ஜானகி அவர்களுக்கு என் நன்றிகள்.

HEMA BALAJI
28-10-2012, 03:25 PM
மனதின் சுமையை
மெய் ஏன் சுமக்க வேண்டும்
வீணே சுமந்து அது ஏன்
பொய் ஆகிப் போக வேண்டும்

இதை மெய்யுள் இருக்கையிலேயே புரிந்தால்
மனச் சுமையை இருதயத்துள் இறக்கி
மெய்யை மெய்யாகவே
மெய்யாய் மாற்றி இருக்கலாமே
அதைப் பொய்த்துப் போகச் செய்யாமல்

மெய்யுள் இருந்த போதே
நெஞ்சக் கண்ணீர் அன்பை வடித்திருந்தால்
வள்ளல் அன்பின் அருள் வாக்கைத் தொட்டு
மெய்யைக் கற்பூரமாய்
மணக்க விட்டிருக்கலாமே

இறப்புமற்ற*ப் பிறப்புமற்ற*
இரண்டுக்கும் இடையே ஈனப் பிழைப்புமற்ற*
பெரு வாழ்வின் கலையை
பருவுடல் மெய் உள்ள போதே கற்றிருக்கலாமே?

"அபயம் யாமுளோம்"
மரண பயத்தை நீக்கும்
அன்பே தானெடுத்த மெய்யைத்
தன்னுள் கரைக்கும்
இதுவன்றோ பெருவாழ்வின் உச்சம்

இருமை இருளை
அருண்மை அருளால்
மெய்யுள்ள போதே
நீக்கி இருக்கலாமே

மெய்யை மறைக்கும் அசுத்தம் உரித்து
அன்பில் கரைக்கும்
அமர நிலை இருக்க*
எதற்கு மரணம்

பிறந்தோமில்லை
இறப்போமில்லை
அன்பின் உயிர்நிலையில் மெய் ஒன்ற
ஓங்கும் உயிர்மெய் ஓர்மை
அன்பின் அதீத விழிப்பு

நாத விந்து கலாதி
குரு வாசி அளியின்(அமுத) திடமாங்
கற்ப மெய்யை உணராது
இட்டும் சுட்டும் செய்யும் பிரமைகள்
கட்டுங் கற்பிதக் கதையே மரணம்

என்னைத் தீர்க்கமாக சிந்திக்கத் தூண்டிய உம் கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஹேமா.

சிந்திக்கத் தூண்டினேன் எனக் கூறி, கூரியதாய் கேள்வியுடன் கருத்திட்ட உங்கள் ஞானத்திற்கு என் வணக்கம் நாகரா ஐயா...உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்.

நாஞ்சில் த.க.ஜெய்
28-10-2012, 04:33 PM
மரணம் எனும் ஆன்மாவின் தேடல் கூறும் உண்மையின் துவக்கம்...

govindh
28-10-2012, 09:21 PM
மரணம் எனப்படுவது...
மனம் அறியாதது...!

''ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...!''

கவியை ரசித்தேன்...
பாராட்டுக்க*ள்..

HEMA BALAJI
29-10-2012, 08:27 AM
மரணம் எனும் ஆன்மாவின் தேடல் கூறும் உண்மையின் துவக்கம்...

நன்றி ஜெய் அவர்களே.

HEMA BALAJI
29-10-2012, 08:28 AM
மரணம் எனப்படுவது...
மனம் அறியாதது...!

''ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...!''

கவியை ரசித்தேன்...
பாராட்டுக்க*ள்..
நன்றி திரு. கோவிந்..

த.ஜார்ஜ்
29-10-2012, 10:40 AM
மரணம் பயமானால் மனங்கள் பக்குவமடையலாம்..

HEMA BALAJI
29-10-2012, 04:19 PM
மரணம் பயமானால் மனங்கள் பக்குவமடையலாம்..

:)...