PDA

View Full Version : அந்தரத்தில்.....!

govindh
23-10-2012, 10:15 PM
அந்தரத்தில்..தான்
அவ*ர்க*ள் வாழ்க்கை..!
அந்த ரங்கன் தான்
அவர்களைக் காக்க வேண்டும்...!

சாதாரணமாக நடந்தால்...
தமக்கு வாழ்க்கை வாய்க்காதென..
கயிற்றின் மேல் நடை பயின்றனர்..!
நம்மை மகிழ்விக்க அவர்கள் துன்புறுகின்றனர்..!

உணவும் குறைவு...
உறக்கமும் குறைவு...

கைதட்டல்கள் தான்..
அவர்களுக்கு காரசார உணவு...!

விலங்குகள் தான்..
விருப்பமான நண்பர்கள்...!

நூலிழையில்...
அவர்களின் உயிரிழை...!

அனுதினமும் அல்லல் மயம்...!
அவர்களுக்கில்லை...
எங்கெங்கும் இன்ப மயம்..!

உலோக உருண்டைக்குள்..
உர்..உர்...என்ற* மோட்டார் சாகச பயணம்...
நம் உள்ளத்தை உறுத்துகின்றது...!

உழைத்து..களைத்து...
உயர்கிறார்கள்..!
அவர்கள் இருப்பது...
உயரத்தில் தான்...!

ஆனால் -
அந்தரத்தில்..தான்
அவ*ர்க*ள் வாழ்க்கை..!
அந்த ரங்கன் தான்
அவர்களைக் காக்க வேண்டும்...!

கீதம்
24-10-2012, 05:17 AM
அந்தரத்தில் அவர்கள் படும் பாட்டை அந்த ரங்கன் காக்கவேண்டுமென்று இந்த ரங்கன் பாடும் பாட்டு மனம் தொடுகிறது. களவாடி வயிறு நிறைக்கும் கயவர்களைக் காட்டிலும், கயிற்றிலாடி வயிறு நிறைக்கும் கழைக்கூத்தாடிகளின் உழைப்பும் திறமையும் பாராட்டுக்குரியது. அவர்களைப் போற்றும் அருமையானதொரு கவிதைக்குப் பாராட்டுகள் கோவிந்த்.

செல்வா
25-10-2012, 03:14 AM
வைரமுத்துவும் வாலியும் கலந்து கட்டியது போல் போல் வார்த்தைத் தெரிவு.
குறிப்பாக

கைதட்டல்கள் தான்..
அவர்களுக்கு காரசார உணவு...!

விலங்குகள் தான்..
விருப்பமான நண்பர்கள்...!

நூலிழையில்...
அவர்களின் உயிரிழை...! - வைரமுத்து டச்

அனுதினமும் அல்லல் மயம்...!
அவர்களுக்கில்லை...
எங்கெங்கும் இன்ப மயம்..! வாலி டச்

அருமையான கவிதை... வாழ்த்துக்கள் கோவிந்த்.

அழகுச் சிலை வடிவம் பெற்றுவிட்டது
இன்னும் கொஞ்சம் வழவழப்பாக்கியிருக்கலாமோ?

M.Jagadeesan
25-10-2012, 04:37 AM
கழைக் கூத்தாடிகளின் வாழ்க்கையை கவிதையாய்க் காட்டிய கோவிந்த் அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஆனால் உலோக உருண்டைக்குள் உர்..ரென்ற பயணம் கழைக் கூத்தாடிகள் காட்டுவதில்லையே! சர்க்கஸில் அல்லவா அது நடக்கும்!

govindh
26-10-2012, 11:20 PM
அருமையான கவிதை... வாழ்த்துக்கள் கோவிந்த்.

அழகுச் சிலை வடிவம் பெற்றுவிட்டது
இன்னும் கொஞ்சம் வழவழப்பாக்கியிருக்கலாமோ?[/QUOTE]

உண்மை தான் செல்வா....அவர்களே..
இன்னும் பளபளப்பாக்கி இருக்கலாம்....
அடுத்தடுத்து...முயல்கிறேன்.....

ஊக்கமிகு வாழ்த்துக்கு மிக்க நன்றி...

govindh
26-10-2012, 11:24 PM
கழைக் கூத்தாடிகளின் வாழ்க்கையை கவிதையாய்க் காட்டிய கோவிந்த் அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஆனால் உலோக உருண்டைக்குள் உர்..ரென்ற பயணம் கழைக் கூத்தாடிகள் காட்டுவதில்லையே! சர்க்கஸில் அல்லவா அது நடக்கும்!

ஆம்....சரி தான் ஐயா.
சர்க்கஸ் பாரத்து விட்டு
வந்தவுடன் எழுதியது இது.

தங்கள் பாராட்டு கிடைத்ததால்..
மிக மகிழ்கிறேன்...மிக்க நன்றி ஐயா.

govindh
26-10-2012, 11:32 PM
அந்தரத்தில் அவர்கள் படும் பாட்டை அந்த ரங்கன் காக்கவேண்டுமென்று இந்த ரங்கன் பாடும் பாட்டு மனம் தொடுகிறது. களவாடி வயிறு நிறைக்கும் கயவர்களைக் காட்டிலும், கயிற்றிலாடி வயிறு நிறைக்கும் கழைக்கூத்தாடிகளின் உழைப்பும் திறமையும் பாராட்டுக்குரியது. அவர்களைப் போற்றும் அருமையானதொரு கவிதைக்குப் பாராட்டுகள் கோவிந்த்.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கீதம் அக்கா.
உங்கள் பாராட்டையும்...
செல்வா மற்றும் ஜெகதீசன் ஐயா...
வாழ்த்தையும் படித்த பின்பு தான்..
என் எடிட்டரிடமிருந்து பாராட்டு கிடைத்தது...

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

ந.க
28-10-2012, 09:45 AM
அந்தரத்தில் அந்தரப் படுவோரை சிந்திக்க வைத்த சிறப்பான ஆக்கம். நன்றி.