PDA

View Full Version : அனுபவம்! - குமுதம் (31-10-2012) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
23-10-2012, 12:29 PM
“ரமேஷ் அந்த ஸ்பானரை எடுடா”

“ரமேஷ் தண்ணீர் கொண்டு வா”

“அந்த பர்னரை எடுத்துட்டு வா சீக்கிரம்”

“ரமேஷ் இங்கே வந்து கதவை திற” என்று முதலாளி முரளி முதல் மற்ற அனைவரும் ஆளுக்கு ஆள் ரமேஷை விரட்டியபடி வேலை வாங்கினார்கள். ரமேஷும் முகம் சுளிக்காமல் வேலைகளை மின்னல் வேகத்தில் செய்து முடித்தான்.

ஓரு வருடம் முடிந்ததும் வாகனங்களின் அனைத்து வேலைகளையும் நன்றாக கற்றுக் கொண்ட பின், முரளி, துளசியிடம் விடைபெற்றுச் சென்றான். சில வாரங்கள் கழித்து, முரளியின் வீட்டு வாசலில், பெரிய கார் வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய ரமேஷ். கையில் தட்டுடன் வந்து முரளி, துளசியிடம் கொடுத்து விட்டு, கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். துளசி தட்டை வாங்க, அதில் கண்ணை பறித்தது, சிகப்பு வண்ணப் பட்டுப்புடவை. அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் நின்றனர்.

“இரண்டு பேரும் என்னை மன்னியுங்கள். நான் யார் என்று சொல்லாமல் வேலைக்குச் சேர்ந்ததால்தான் அனைத்து வேலைகளையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடிந்தது. எந்த ஒரு அனுபவமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களை வழிநடத்த முடியுது.” என்றான் ரமேஷ்.

“அப்ப, நீ... நீ... நீங்க யார்?” என்று கேட்டான் முரளி.

“விஸிடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று 10 நாட்கள் ஆகிறது,” என்றான் ரமேஷ்.

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=911&d=1350995305

மதி
23-10-2012, 01:15 PM
நச்சென்ற கதை கமலகண்ணன். இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

க.கமலக்கண்ணன்
23-10-2012, 02:10 PM
நன்றி கீதம்...

நன்றி மதி...

A Thainis
23-10-2012, 06:08 PM
அருமையான கதை, சில வரிகள் காட்டும் வாழ்க்கை பாடம், பணிவும், கனிவும் என்றும் நமக்கு துணிவு தரும்.

கீதம்
24-10-2012, 05:18 AM
வேலை தெரிந்தவனே திறமையானதொரு மேலாளராய் இருக்கமுடியும். அந்த உண்மையை உணர்த்தும் அழகான கதை. பாராட்டுகள் கமலக்கண்ணன்.

க.கமலக்கண்ணன்
24-10-2012, 05:31 PM
நன்றி A Thainis...

நன்றி கீதம்...

கோபாலன்
24-10-2012, 08:11 PM
கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்:)

M.Jagadeesan
25-10-2012, 01:15 AM
ஒரு தொழில் தொடங்கும்போது , அந்தத் தொழிலைப் பற்றிய முழுமையான அறிவு நமக்கு இருத்தல் அவசியம். இல்லையென்றால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள். நீதியை உணர்த்தும் அழகான சிறுகதை தந்த கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
26-10-2012, 04:05 AM
நன்றி கோபாலன் !

நன்றி M.Jagadeesan !

arun
26-10-2012, 09:03 PM
ஒரு பக்க கதைக்கே உரிய அர்த்தம் பொதிந்த கதை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

மஞ்சுபாஷிணி
27-10-2012, 01:19 PM
கருத்துள்ள கதைப்பகிர்வு கமலக்கண்ணா....

தங்களின் கதை குமுதத்தில் வெளிவந்தமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...

முதலாளி என்பவர் முதலாளியின் அறையிலேயே இருந்தால் தொழிலாளர்களின் வேலைத்திறன், அவர்களின் உழைப்பு, அவர்களின் அவஸ்தைகள் எதுவுமே முதலாளியின் காதுக்கு சென்றடைய கால அவகாசம் அதிகமாகலாம்.. அல்லது அவர் காதுக்கு சென்றடையாமலேயே போகலாம் இடைத்தரகர்கள் போல் செயல்படும் ஒருசில மேலாளர்களால்..

ரமேஷின் சமயோஜிதமான அறிவுக்கூர்மை அமைதியான தன்னடக்கம், வேலைக்கற்றுக்கொள்ளும் திறன், இதெல்லாம் தான் ரமேஷின் கம்பனியை முன்னேற்றத்துக்கு கொண்டுச்செல்லும் என்று இனியும் சொல்லவும் வேண்டுமோ?

மிக அருமையான கருத்துள்ள இரத்தின சுருக்கமான கதை கமலக்கண்ணா....

கதையும் கதாப்பாத்திரங்களும் உயிர்ப்புள்ளதாய் அமைத்தது சிறப்பு....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...

அனுராகவன்
28-10-2012, 05:47 AM
பகிர்வுக்கு நன்றி நண்பா...

க.கமலக்கண்ணன்
28-10-2012, 10:57 AM
நன்றிகள் பல மஞ்சுபாஷிணி அக்கா. உங்களின் தெளிவான விளக்க உரையை படித்து நெகிழ்ந்து போனேன். உள்ளே மறைத்து வைத்திருக்கும் பிரச்சனைகளை மிக அழகாக எடுத்துரைத்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...
நீங்கள் பார்த்துவிட்டு சென்றதும் சற்றே மனது கஷ்டபட்டது என்னவே உண்மைதான். ஆனால் இவ்வளவு விரிவாக எடுத்துரைக்கத்தான் என்பதை படித்ததும் உணர்ந்தேன். இந்த பாசமான தம்பியின் நெகிழ்வான வணக்கத்துடன்...


நன்றி arun...


நன்றி அச்சலா. உங்களின் பிண்ணூட்டத்திற்கு நன்றிகள் பல...

ந.க
28-10-2012, 12:23 PM
கற்றவன் மட்டுமல்ல, கீழ் நிலை வேலை கஷ்டம் புரிந்தவன் மேலாளராய் வர தகுதி பெறுகின்றான். சகித்தவன் சரித்திரம் படைக்கின்றான். பெரிய தத்துவத்தைச் சொன்ன சீரிய சிறிய கதை. நன்றி.

சிவா.ஜி
28-10-2012, 12:41 PM
எப்போதும்போல முத்திரை பதிக்கும் முத்தான ஒருபக்க கதை....பல பக்கங்களில் சொல்லவேண்டியதை சுருக்கமாய் அழகாய் சொல்லிச் சென்ற கதைக்கும், குமுதம் இதழில் வந்தமைக்கும் பாராட்டுக்கள் கமலக்கண்ணன். வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
28-10-2012, 04:51 PM
நன்றி NKannappu உங்களின் இனிய வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும்

நன்றி சிவா.ஜி உங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும்