PDA

View Full Version : ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள்ஆதி
23-10-2012, 06:23 AM
வணக்கம் உறவுகளே,

இன்று(23/10/12) இந்திய நேரப்படி மாலை 6:00 மணி அளவில் பண்பலையில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் மீண்டும் இரவு 8:30 மணிக்கும், அதன் பிறகு 11:30 மணிக்கும் அதன் பிறகு 3:00 மணிக்கும் ஒலிபரப்பாகும், உறவுகள் அனைவரும் கேட்டு மகிழவும்

அத்தோடு நிகழ்ச்சி குறித்த தங்களின் விமர்சனங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும், முக்கியமாக குறைகள் எது இருந்தாலும் சொல்லவும், அப்போதுதான் தீபாவளி அன்று அடுத்த அடியை இன்னும் நேர்த்தியாக எடுத்து வைக்க இயலும், உறவுகளின் ஆலோசனைகளையும், ஆதரவையும், பங்களிப்பையும் எதிர்ப்பார்த்து

தமிழ்மன்ற பண்பலை குழு
இது நமது பண்பலை நாமே முன்னடத்தில் செல்வோம்

Mano.G.
23-10-2012, 09:32 AM
மன்ற வரலாற்றில் ஒரு மைல்கல் இந்த
பண்பலை சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்தியும்
சிறப்பு நிகழ்ச்சியும்.

வாழ்த்துக்கள் உறவுகளே
இந்திய நேரம் மாலை ஆறு மணி
எங்களுக்கு இரவு 8.30 மணி
காத்திருக்கிரேன் நிகழ்ச்சியை கேட்க
முகம் காணா உறவுகளின் குரல் கேட்க

ஆதி
23-10-2012, 09:38 AM
வாங்க அண்ணா,

எப்படி இருக்கீங்க ?

தீபாவளியில் இருந்து நமது பண்பலை முழு வீச்சில் செயல்படும், அப்படியே தீபாவளி வாழ்த்தை அனுப்பி வச்சுடுங்க அண்ணா, அன்று உங்கள் குரல் நிச்சயம் பண்பலையில் ஒலிக்க வேண்டும், இது என் அன்பு கட்டளை

Mano.G.
23-10-2012, 02:10 PM
எனது அன்பான மன்ற உறவுகளே,
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்,
எனது இல்லத்தில் திடீரென இணைய தொடர்ப்புக்கு தொல்லை, ஆயுத பூசை நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சீக்கிரம் வீடுவந்தும் இப்படியாகிவிட்டதே என சற்று மனசோர்வு, என்ன செய்யலாம் என யோசிக்கையில் ஆப்பிள் ஐபோன் கைகொடுத்தது. ஒரு மணி நேரம்இருபது நிமிடங்கள் தங்கை கீதம் வழிநடத்தி அறிவிப்பு செய்த நிகழ்ச்சி தொழில் முறை அறிவிப்பாளர்களை மிஞ்சும் படி இருந்தது, தொகுக்கப்பட்ட பாடல்கள் அருமையோ அருமை, வாழ்த்துக்கள் கூறிய உறவுகளுக்கும் ,உழைத்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

ஐபோன் செல்லினம் மூலம் தட்டச்சு செய்த பதிப்பு இது

கலையரசி
23-10-2012, 03:10 PM
ஒலி பரப்பை முழுவதும் கேட்டேன். கீதத்தின் தொகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. மன்ற உறவுகளின் குரலைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முதல் நிகழ்ச்சியே குறையேதுமின்றி இருந்தது ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால் ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக கேட்க பொறுமையில்லை என்பதை நான் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எனவே இதை இரண்டாகப் பிரித்து இடைவெளி விட்டு ஒலி பரப்பியிருக்கலோமோ என்று தோன்றியது. தம்பி அமரனின் குரல் மட்டும் ஒலிக்குறைவாக இருந்தது போலிருந்தது.
மற்றபடி ஓ.கே.
இதற்காக உழைத்த மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி.

ஆதி
23-10-2012, 03:12 PM
அடுத்த முறை இதனை கவனத்தில் வைத்து செய்துடலாம் அக்கா

மற்றவர்களும் தங்கள் மனதில் பட்டக் குறைகளை சொல்லவும்

கலைவேந்தன்
23-10-2012, 03:16 PM
இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கீதமின் தொகுப்பும் குரல்வளமும் மிக அருமை. அமரன் வாழ்த்து கேட்டேன். அடுத்து அதிசயம் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இனி தொடர்ந்து ஒலிபரப்பு நேரங்களில் கேட்பேன்.

M.Jagadeesan
23-10-2012, 03:45 PM
கீதம் அவர்களின் குரல்வளம், தேர்ந்த ஒரு வானொலி அறிவிப்பாளரின் குரல்போல இருந்தது. தொகுத்து அளித்தவிதமும் மிகவும் அருமை! பன்முகக் கலைஞருக்கு என் வாழ்த்துக்கள் ! கலையரசி அவர்கள் சொன்னது போல நிகழ்ச்சிக்கு இடையே சிறிது இடைவெளி இருந்திருப்பின் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். நிகழ்ச்சியைக் கேட்கும் நேரத்தில் மின்தடை இல்லாமல் போனது அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தீபாவளி நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்றே எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!

கலைவேந்தன்
23-10-2012, 03:54 PM
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் போது இடை இடையில் பட்டாசுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். நான் எங்கள் இல்லத்தில் பட்டாசுகளுக்குத் தடா போட்டுவிட்டதால் இங்காவது கேட்கலாமே என்றுதான். :)

A Thainis
23-10-2012, 04:35 PM
:icon_b::icon_b:இனிய தமிழ் மன்ற சொந்தங்களே! ஆயத பூசை முன்னிட்டு மன்றம் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன். இந்நிகழ்ச்சி மிகவும் அழகாக சிறந்த கோர்வையுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது, தொகுத்து வழங்கிய கீதம் அவர்களின் குரல் இனிய கீதமாக ஒலித்தது அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும், சிறப்புடனும் இருந்தது, வாழ்த்துக்கள் கீதம் அவர்களே. இந்நிகழ்ச்சியை தயாரித்து மிகச்சிறப்புடன் நம் அனைவருக்கும் வழங்கிய மன்ற நிர்வாகிகளை மனமாற பாராட்டி மகிழ்வதில் நானும் இம்மன்றத்தில் உறுப்பினர் என்ற முறையில் பெருமைபடுகிறேன். மன்றத்தார் கேட்டுயிருந்த அனைத்து பாடல்களும் மிகவும் இனிமை, நேரம்போனது தெரியவில்லை, மேலும் மன்றத்தின் அன்பர்கள் சிலரின் குரல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். என்னை அற்புத கவிஞர் என்று அழைத்து என் தமிழ் பணிக்கு உற்சாகம் தந்த கீதம் அவர்களுக்கு நன்றி. பண்பலை சிறக்கட்டும், திக்கட்டும் அதன் குரல் இனிக்கட்டும். :icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
23-10-2012, 04:38 PM
இதுவரை காணாத மன்ற உறவுகளின் குரலினை முழுவதும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி .. கீதம் அக்கா அவர்களின் தொகுப்பு அருமை அதெநேரம் கலைஅரசி அவர்களின் குரலும் அமரன் அவர்களின் குரலும் வாசிப்பும் நன்றாக இருந்தது .இடையிடையே இணைய தடை மின் தடை வேறு இந்த தடையிலும் கேட்கும் வாய்ப்பு அமைந்தது இருப்பினும் முன்னவர்கள் சிலர் குரலை கேடக்க இயலவில்லை..அனைத்து உறவுகளின் வாழ்த்தினை கேட்டுகொண்டு பாட்டையும் ரசித்ததில் நேரம் போனதே தெரியவில்லை இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் என கேட்க்கும் ஆசை அதிகரித்ததெ தவிர குறையவில்லை சில நேரஙக்ளில் வாழ்த்துகள் கூறும் குரல்களின் ஒலிக்கும் ஒலிகள் குறைவாக ஒலித்தன..மொத்ததில் நான் அறிந்த வகையில் குறையேதும் இல்லை ..வாழ்த்துக்கள் பண்பலை உறவுகளே..

ஜானகி
23-10-2012, 04:57 PM
இறை அருளாலும், எல்லோருடைய உழைப்பினாலும், பண்பலை நிகழ்ச்சி மிகவும் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. பாடல்கள் அனைத்துமே இதமாக இருந்தன.

கீதம் அவர்கள் மிகவும் பழக்கப்பட்டவர் போல அநாயசமாகத் தொகுத்தளித்தார் !

இரண்டு பாகங்களாக ஒலிபரப்பலாமோ என்று தோன்றியது.

மேன்மேலும் மெருகேற வாழ்த்துக்கள் !

என்னுடைய வாழ்த்துக்களை ஒலிமாற்றம் செய்த கீதத்திற்கு நன்றிகள்.

கொலு பற்றிய கவிதை சிறுபிராய நினைவுகளைக் கொணர்ந்தது.

ஆதி
23-10-2012, 05:26 PM
அன்பின் உறவுகளே, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த சிறப்பு நிகழ்ச்சி இனியே நடந்ததற்கு நம்முடைய ஒவ்வொரு உறவின் ஒத்துழைப்பே காரணம்

வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முன் வந்ததில் இருந்து ஒவ்வொன்றிலும் மிக ஆர்வமாய் ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

அடுத்து இந்த நிகழ்ச்சி இவ்வளவு பேரின் மனங்களை கொள்ளையடித்ததற்கு ஒரே காரணம் நம் கீதம் அக்கா, இந்த வெற்றியின் எல்லா புகழும் அவங்க ஒருத்தரையே சாரும், அவ்வளவு உழைப்பு, அக்காவோட அந்த ஈடுபாட்டுக்கும் வேகத்துக்கும் ஈடு கொடுப்பது மிகக் கடினம், எல்லா புகழும் அக்காவுக்கே

அப்புறம் உறவுகளே, அக்காவுக்கு ஒரு ரசிகர் மன்றம் உறுவாக்கினா அதில் என் பெயரை நிச்சயமா சேர்த்துடுங்க, அக்காவின் முதல் ரசிகன் நான் தான், இப்பவே துண்டு போட்டுடேன் :)

வாழ்த்துக்களை குரல் மூலம் அனுப்பி வைத்த நாஞ்சில் த க ஜெய், கோபாலம், கோவிந்த், கலையரசி அக்கா, இன்பக்கவி, ஜெகதீசன் ஐயா, ஆதவா, அமரன் மற்றும் வாழ்த்து திரியில் பதிவு செய்த கும்பகோணத்து பிள்ளை, ஜெயந்த், மதி, தைனிஸ், ஜானகி அம்மா, முரளி ரசிகன், ஹேமா மற்றும் ஆர்வமாய் பண்பலை நிகழ்ச்சிகளை கேட்டு கருத்திட்ட மனோஜி அண்ணா, கலை ஐயா, அகத்தியன், கமலக்கண்ணன், இன்பக்கவி மற்றும் நம்முடைய* உறவுகளுக்கும் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்

உறவுகளின் உற்சாகத்தை பார்க்கை மனதில் தெம்பும், பாரதி சொன்னது போல் ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, தீபாவளியில் ஒலிக்க இருக்கும் பண்பலை நிகழ்ச்சிகள் பட்டாசு சத்தத்தைவிட சத்தமாக இருக்க வேண்டும் மக்கா, அது உங்க ஒவ்வொருத்தருடைய பொறுப்பும்

இது நமது பண்பலை, நாமே முன் நடத்திச் செல்வோம்

அமரன்
23-10-2012, 08:43 PM
பொதுப் போக்குவரத்தில் அமர்ந்து கேட்கத் துவங்கிய நேரம் அதிசயம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. தொடர்ந்து கேட்டேன்.. பாரதி சொன்ன தேன் வந்து பாய்ந்தது காதினிலே..

சில கலையகங்களில் ஒலிவாங்கிக்கும் வாய்க்கும் இடையில் ஃபில்டர் இருக்கும். துல்லியமான ஒலிப்பதிவுக்கு இது உதவும். இன்னும் கொஞ்சம் நவீன கலையங்களில் ஒலிப்பதிவு/ஒலிபரப்பு சாதனத்தில் ஃபில்டர் இருக்க, சாதாரண ஹெட்செட் போன்று ஆனால் நவீன ஒலிவாங்கியைக் கொண்ட ஹெட்செட் இருக்கும். ஒலிவீச்சை ஒரே அளவில் பேணும் தொழில்நுடபம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் இந்தளவு சிறப்பாக ஒலிபரப்பு அமைந்தது உறவுகளின் ஈடுபாட்டினால் மட்டுமே.. தொகுத்தளித்த கீதாக்காவை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை. தெரிந்தவர்களிடம் இரவல் வாங்கலாம் என்றால் அவர்களிடமும் இல்லை.. தொழில்நுட்ப விடயங்களைக் கவனித்த ஆதியும் அவ்வாறே. மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் நண்பர்களே..!!

தீபாவளி ஒலிபரப்பு இப்பவே எதிர்பார்ப்பைத் தூண்டுது.

கீதம்
23-10-2012, 08:58 PM
பண்பலையின் முதல் நிகழ்ச்சி இத்தனை பேருடைய பாராட்டையும் பெற்றது மிகுந்த மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. இதன் பின்னணியில் உழைத்த நம் மன்ற நிர்வாக மற்றும் பண்பலைக்குழுவினரின் உழைப்பு சொல்லில் அடங்காதது. முக்கியமாய் ஆதி, மதி, இராசகுமாரன் அவர்கள், அன்புரசிகன், அமரன், பாரதி அவர்கள், இன்பக்கவி.... அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும். பண்டிகைக்கான வாழ்த்துக்களை ஒலியாகவும், எழுத்தாகவும் வழங்கிய மன்ற உறவுகள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். உங்களுடைய ஒத்துழைப்பின்றி அந்த நிகழ்ச்சியை அப்படி வடிவமைத்திருக்க இயலாது என்பதை நீங்களும் அறிவீர்கள். தொடர்ந்து உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருக்குமானால் நம் மன்றமும் பண்பலையும் உச்சத்தை எட்டும். என்னைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அத்தனைப் பாராட்டையும் பண்பலையின் ஒவ்வொரு அங்கத்தவர்க்கும் உரியதாக்கி மகிழ்கிறேன். நன்றி அன்புள்ளங்களே...

கீதம்
23-10-2012, 09:00 PM
பொதுப் போக்குவரத்தில் அமர்ந்து கேட்கத் துவங்கிய நேரம் அதிசயம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. தொடர்ந்து கேட்டேன்.. பாரதி சொன்ன தேன் வந்து பாய்ந்தது காதினிலே..

சில கலையகங்களில் ஒலிவாங்கிக்கும் வாய்க்கும் இடையில் ஃபில்டர் இருக்கும். துல்லியமான ஒலிப்பதிவுக்கு இது உதவும். இன்னும் கொஞ்சம் நவீன கலையங்களில் ஒலிப்பதிவு/ஒலிபரப்பு சாதனத்தில் ஃபில்டர் இருக்க, சாதாரண ஹெட்செட் போன்று ஆனால் நவீன ஒலிவாங்கியைக் கொண்ட ஹெட்செட் இருக்கும். ஒலிவீச்சை ஒரே அளவில் பேணும் தொழில்நுடபம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் இந்தளவு சிறப்பாக ஒலிபரப்பு அமைந்தது உறவுகளின் ஈடுபாட்டினால் மட்டுமே.. தொகுத்தளித்த கீதாக்காவை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை. தெரிந்தவர்களிடம் இரவல் வாங்கலாம் என்றால் அவர்களிடமும் இல்லை.. தொழில்நுட்ப விடயங்களைக் கவனித்த ஆதியும் அவ்வாறே. மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் நண்பர்களே..!!

தீபாவளி ஒலிபரப்பு இப்பவே எதிர்பார்ப்பைத் தூண்டுது.


உங்கள் அன்பான பாராட்டுக்கு நன்றி அமரன். வாழ்த்திய எல்லோரும் அவரவர் விருப்பப் பாடலைக் கேட்டிருந்தார்கள். நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. உங்களிடம் கேட்டு இணைக்க நேரம் போதவில்லை.அதனால் நானே உங்களுக்காக அதிசயம் பாடலைத் தேர்ந்தெடுத்து இணைத்துவிட்டேன். :) உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

govindh
23-10-2012, 09:44 PM
மன்றப் பண்பலையின்...
ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி....
அற்புத நிகழ்ச்சியாக அமைந்திருந்தது...!

தொகுத்தளித்த கீதம் அவர்களுக்கு...
பன்மடங்கு பாராட்டுக்கள்...!
தொகுத்தளித்த விதம்....மிக அருமை..!

முகமறியா மன்ற உறவுகளின்...
குரலறிந்து....அவர்களின் விருப்பமறிந்து....
படைக்கப்பட்ட...இனிய நிகழ்ச்சி....
திகட்டாத ஓர் இசை விருந்து...!

தமிழ் மன்றப் பண்பலைக் குழுவினருக்கு...
மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

ஆதி
24-10-2012, 08:41 AM
உறவுகளுக்கு வணக்கம், நேற்று நிகழ்ச்சியை கேட்க தவறியவர்கள் இன்று கேட்க விரும்பினால் இந்த திரியில் சொல்லவும், இந்திய நேரப்படி எப்பொழுது ஒலிபரப்பினால் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று சொல்லுங்கள், ஒலிபரப்பி விடலாம்

பண்பலையில் தற்போது இளையாராஜா பாடல்கள் ஒலிபரப்பாகிறது கேட்க விரும்புகிறவர்கள் கேட்கலாம்

jayanth
24-10-2012, 10:04 AM
பண்பலைக் குழு உறவுகளுக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துத் திரியிலேயே கருத்தைப் பதிவு செய்ததால் இத்திரியை கவனிக்கவில்லை.
நேற்று மாலை இருமுறையும் நிகழ்ச்சியை கேட்டேன்.
ஒரு தேர்ந்த அறிவிப்பாளர் போல நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்த தங்கை கீதத்தின் குரலில் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
தங்கைக்கு விசேஷமான பாராட்டுக்கள். அனைவருக்கும் தனிமடல் எழுதி அனைத்து உறவுகளையும் பங்குகொள்ள ஊக்குவித்த எனதருமைத் தம்பி ஆதிக்கும் என்னுடைய விசேஷமான பாராட்டுக்கள்.
திரை முன்னும் மறைவிலும் உழைத்த பண்பலைக் குழு உறவுகளுக்கு மற்றுமொருமுறை என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோபாலன்
25-10-2012, 07:36 PM
என்னால் பண்பலை ஒலிபரப்பை முழுமையாக கேட்க முடியவில்லை. அதேவேளை என்னுடைய வாழ்த்துக்கள் ஒலித்ததையும் தவறவிட்டுவிட்டேன். கேட்டவரை அருமையாக இருந்தது. பிறகு பதிவுசெய்யப்பட்ட ஒலிக் கோப்புகளிலிருந்து முழுவதையும் கேட்டு காதுகளித்தேன். அனைவரின் பாடல் தெரிவும் அவர்களின் உள்ளங்களைப்போலவே அருமையாக இருந்தது. பண்பலைக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் பதிவு செய்து கொள்கிறேன். மென்மேலும் தொடருங்கள். :)

அனுராகவன்
28-10-2012, 05:30 AM
நானும் கொஞ்ச நேரம் கேட்டேன்...கேட்ட வரை அருமை...
மென்மேலும் தொடருங்கள்