PDA

View Full Version : பாலும் குழந்தையும்



M.Jagadeesan
23-10-2012, 01:35 AM
அடுப்பிலே பால்; இடுப்பிலே குழந்தை
இறக்கினால் பொங்கி அழும்- குழந்தை
இறக்காவிட்டால் பொங்கி விழும்-பால்
இரண்டையும் இறக்கினால் இல்லத்தரசி!
ஆறியதும் அடங்கியது - பால்
பசி
ஆறியதும் அடங்கியது-குழந்தை!

கும்பகோணத்துப்பிள்ளை
23-10-2012, 10:49 AM
வணக்கமய்யா!

சிலேடைக்குகந்த பொருட்செரிவு!
பாலும் (பசியும்) ஆறும்!..நன்று!.. நன்று!

A Thainis
23-10-2012, 06:19 PM
ஜெகதீசன் அய்யா ரசிக்க வைத்த அழகு வரிகள், நான்கு வரிகளில் பூத்து குலுங்கும் கவிதை.

கீதம்
23-10-2012, 09:19 PM
இடுப்புக் குழந்தையை இறக்க முனைகையிலேயே உதடு பிதுக்கி அழ ஆயத்தமாகும் அதன் செய்கையைக் கற்பனையில் விரிக்கிறது கவிதை.

மிக மிக ரசிக்கவைத்த கவி வரிகள்.மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா.

govindh
23-10-2012, 10:29 PM
''பாலும் குழந்தையும்....
இரண்டையும் இறக்கினால் இல்லத்தரசி!''

பாலும் பொறுத்துக் கொள்ளாது...
குழந்தையும் பொறுத்துக் கொள்ளாது...

அற்புத வரிகள்...!

குறுங் கவிதையில்...
பெரும் உணர்வுகள்...!

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..!

M.Jagadeesan
24-10-2012, 12:57 AM
கும்பகோணத்துப் பிள்ளை, தைனிஸ், கீதம் மற்றும் கோவிந்த் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

கோபாலன்
27-10-2012, 06:16 PM
கவிதை மிகவும் நன்றாக இருந்தது. :)