PDA

View Full Version : இடம் பொருள் ஏவல்இளசு
06-01-2004, 09:23 PM
இடம் பொருள் ஏவல்

(வயாக்ரா ஜூஸ் பற்றி எழுதும்போது அண்ணல் சொன்னது இது..)

திறந்த வெளி வார்த்தை போட்டு
அதிரவைப்பது புதியதல்லவாம் -
சொல்வது கனிமொழி

எதையும் எங்கும் சொல்லலாம் என்றால்
வீட்டில் கழிப்பறை, உண்ணும் அறை
எதற்குத் தனித்தனியே

விருந்து இலையின் ஓரத்தில் மலம் வைத்தால் அதிர்ச்சிதான்...
இடம் பொருள் பார்க்காமல் எக்குத்தப்பா வார்த்தை வந்தா அதிர்ச்சிதான்..

தமிழ் கேஎஸ்கோபாலகிருஷ்ணன் அப்படின்னு படம் பார்க்கப்போய்
மலையாள கேஎஸ் கோபாலகிருஷ்ணன் படம் காமிச்சா அதிர்ச்சிதான்..

அதப் பாக்காதவனா.. யோக்கியனாட்டம் அலர்றேன்னு கேட்டா
என்ன பதில் சொல்ல முடியும்..?

வீட்டோட சீரியல் பாக்கும்போது பாலசந்தர் தன் நிதர்சன அறிவுஜீவித் தனத்தை.
A முத்திரை உள்ள படத்தில் காட்டவேண்டியதை வீட்டு ஹாலில்
காட்டினால்....
இடம் பொருள் ஏவல் இல்லியான்னுதான் கேட்கணும்..

படிக்காத பாமரத்தாய் அய்ய, அத மூடு -ன்னு அரணாக்கயிறிலிருந்து டிரவுசர் நழுவும் மகனின்
பின்பக்கத்தை கொச்சையாச் சொன்னால்.. அது அந்த இடத்துக்கேற்ற இயல்பு..
அதையே கிழிந்த ஜீன்ஸ் போட்ட யுவதியைப் பார்த்து நான் சொன்னால்..????

இடம், பொருள், ஏவல்...

சில சம்பவங்கள்...

இடம் :மாணவர் விடுதி.
சாதம், சாம்பார், ரசம், கலர்கலராய் சிறு உருளைகளாய்
அப்பளப் பொறி..
அப்பளத்தைக் கொறித்தவன் முகம் சுளித்தேன்..
பரிமாறும் தம்பியிடம் சொல்லி அனுப்ப
சமையல் இன்சார்ஜ் வந்தார்.
"என்ன ஜோசப் இது, அப்பளத்தில் மீன் வாசம்..?"
"அதுவா சார், மதியம் மெனுவில் மீன் ·பிரை சாப்டீங்கள்ல..
நெறய்ய எண்ணை மிச்சம்... அதுலெய்யே அப்பளம்
பொறிச்சுட்டேன்.."
"அதுக்காக, அப்பளத்தை மீன் வறுத்த எண்ணையில்...
பொருத்தமா தெரியுதா உங்களுக்கு?"
"என்னா சார் நீங்க, இதோ பக்கத்துல இருக்காரே
உங்க பிரண்டு.. மூர்த்தி சார்... அவரு சொன்னாலும்
நாயம் இருக்கும்.. நீங்க மீன், கறி எல்லாம் துன்றவரு..
உங்களுக்கு என்னா சார் இதுல ப்ராப்ளம்?"
"ரொம்பச் சரி ஜோசப்... நான் மீனும் சாப்பிடுவேன்..அப்பளமும்
சாப்பிடுவேன். நீங்க சாம்பார் சாதம் சாப்பிடுவீங்களா?"
"என்னா சார்..சாப்பிடுவேனே"
"தண்ணி குடிப்பீங்க?"
"ஹி,,ஹி..நக்கல் சார் நீங்க...குடிப்பேன்..சொல்லுங்க"
குடிநீர் கிளாஸில் கைப்பிடி சாம்பார் சாதம் அள்ளிப்போட்டேன்.
"நீங்க சாப்பிடக்கூடிய ரெண்டுதான் இது...
சாப்பிடுங்களேன் ஜோசப்.."

இடம் பொருள் ஏவல்..
நீங்களும் சொல்லுங்கள்..

முத்து
06-01-2004, 09:30 PM
இளசு அண்ணா ..
முதலில் படிக்க நகைச்சுவையாக இருந்தாலும்
சிந்திக்க இதில் நிறைய இருக்கிறது .. :D
நன்றி அண்ணா ..

puppy
06-01-2004, 09:30 PM
¿øÄ À¾¢×..........¿ÁìÌ ÀÊì¸ ¾¡ý ¦¾Ã¢Ôõ...¿¢¨È ¦¸¡Î*¸ ....¿¡Ûõ ÀÊîÍ츢§Èý.........

இளசு
06-01-2004, 09:34 PM
இடம் பொருள் ஏவல்

காலை 5 மணி
மார்கழிக்குளிர்
பஸ்ஸில் மொத்தமே பத்து -பதினைந்து பேர்தான்..
இரண்டு மணி நேரப் பயணம்..

என் பின் சீட்டில் இருந்தவர் ஏறிய அடுத்த நிமிடமே
ஒன்று பற்றவைத்தார்..
நானோ, வேறு யாரோ ஒன்றும் சொல்லவில்லை..

அந்த சிகரட் முடிந்த, மறுநிமிடமே இன்னொன்று...
எழுந்து, திரும்பி பிடுங்கி எறிந்தேன்..
"ஏய் என்னா.."
நான் அமைதியாய் இருக்க
மீதி ஆள் எல்லாம்
"என்னா, என்னடா, செயின் ஸ்மோக்கரா நீய்..?
டாக்ஸியில போடா, காருல போ..
பொது இடத்துல, காலங்கார்த்தாலா
இருமல், மயக்கம் கெளப்பிட்டு
சவுண்டா விடறே...பொத்துடா.."

வழியில் டீக்கடையில் நிறுத்தம்..

ஒதுங்கி சவுக்குத்தோப்பின் ஓரம்
ஆனந்தமாய் நான் பற்றவைக்க
அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி..
தம்மை விட சுகமாய்..

(புகைப்பது முன்பிருந்தது..)

முத்து
06-01-2004, 09:38 PM
..........நமக்கு படிக்க தான் தெரியும்...நிறைய கொடுங்க ....நானும் படிச்சுக்கிறேன்.........

அண்ணா ..
பில்டப்பு .. பில்டப்பு அப்படின்னு சொல்வாங்களே
அது என்ன ... ? :lachen001:

நிலா
06-01-2004, 09:53 PM
காட்டமான பதிவு!

"தூங்குறவனை எழுப்பலாம்!தூங்குற மாதிரி நடிக்கறவனை ?????????"

இப்படித்தான் சில ஜென்மங்கள்!செய்யக்கூடாது,பேசக்கூடாது எனத்தெரிந்தும் செய்பவை!

தொடருங்கள் தலை!பாராட்டுகள்!நன்றி!

இளசு
06-01-2004, 10:01 PM
முத்து, பப்பி, நிலா நன்றி

பஸ்ஸில் பெண்கள், குழந்தைகள் காதில் விழும்படியாக
ஆபாசமாய்ப் பேசும் சில மிருகங்களைக் கண்டு
கொதித்திருக்கிறீர்களா??

என் கோபம் கண்டு என் அப்பா என்னை நடுவழியில் இறக்கி தானும் இறங்கி
ஆசுவாசப்படுத்திய சம்பவம் உண்டு..

என்னை மாணவர் விடுதியில் சனி இரவுகளில்
என் நண்பர் வட்டத்தின் நடுவில் பார்த்திருக்கவேண்டும்
அந்த பன்றிகளுக்கு கெட்டவார்த்தை வகுப்பெடுக்கும் அளவுக்கு
"புலமை" உண்டு எனக்கு...

இடம்....
பொருள்...
ஏவல்....

gankrish
07-01-2004, 04:59 AM
இளசு அருமையான தொகுப்பு. நீ கூறியது போல் நிறைய சம்பவம் இருக்கு.

பஸ்ஸில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து வெத்தலை எச்சிலை
(ஈச்க்குன்னு) வெளியே துப்பும் நம்மூர் ஆசாமிகள்...

மேலும் கொடு தெரிந்து.. தெளிந்து கொள்கிறோம்.

poo
07-01-2004, 06:01 PM
பாலச்சந்தரை நடுப்புல போட்டதுக்கு நன்றி... (அந்த சீரியல் பார்த்தப்போ உங்க ஞாபகம் வந்துச்சி... நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கறவரோன்னு!!)

கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறீங்கபோல...

உங்க ரவுசுகள எடுத்துவுடுங்க....

கோக்கு-மாக்கு கணக்கா ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்.. சைவ விஷயங்களோட...

தொடர்ந்து எழுதுங்கண்ணா...

நிலா
07-01-2004, 06:07 PM
கோக்கு-மாக்கு கணக்கா ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்.. சைவ விஷயங்களோட...

கோக்கு---குடிக்கிற கோக்கா? :mini023:
மாக்குனா என்ன? :mini023:

poo
07-01-2004, 06:14 PM
எடக்கு-மடக்குன்னு சொல்வாங்களே... ..அதும்மா.. அது!

நிலா
07-01-2004, 06:15 PM
இப்பப்புரியுதுங்கண்ணா!

poo
07-01-2004, 06:18 PM
இப்பப்புரியுதுங்கண்ணா!
ஆகா... பழிவாங்கும் படலம் ஆரம்பிச்சிட்டீங்களா நிலா?!!
(சுத்தி சுத்தி அடிக்கிறீங்களே!!!!)

சேரன்கயல்
08-01-2004, 02:40 PM
இனிய இளசு...
உள்ளுக்குள் இருக்கும் எத்தனையோ இதுபோன்ற சமூகத்தின் மீதான...நானும் அவனும், அவளுமாய் செய்யும் அசட்டைத்தனம், மடத்தனம், வெறித்தனங்கள் குறித்த வெறுப்பு, வேதனை, கோபம் இதையெல்லாம் உங்களின் வார்த்தைகள் கண்ணாடி பிம்பமாய் பிரதிபலிக்கின்றன...
பூ சொன்னது போல...எனக்குள்ளும் இதுபோல ஒரு நல்ல அம்சத்தை மையப்படுத்தி கொஞ்சம் எழுதனும் என்று ஆசையிருந்ததுண்டு(ஏதாவது ஒரு வடிவத்தில்) உங்களின் வடிவில் இங்கே ஆசை நிறைவேறுகிறது கண்டு மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது...
தொடர்ந்து எழுதுங்கள்...

இளசு
09-01-2004, 10:22 PM
இனிய கான்கிரீஷ், இனிய சேரன்
கருத்துக்கு நன்றி.

பூ, சேரன், நிலா உள்பட எல்லாரும் எழுதுங்க...

நம்மைச் சுற்றியுள்ள ஏவலறியா இங்கித சத்ருக்களைச் சாடுங்க...

இளசு
11-01-2004, 11:40 PM
இடம் பொருள் ஏவல் பற்றி ஏற்கனவே சொன்னது இன்று கண்ணில் பட்டது...இடம், பொருள், ஏவலில்தான் சிக்கல்.
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=48712#48712

Mano.G.
11-01-2004, 11:53 PM
அடிச்சுகிடலாம் கடிச்சி கிடலாம்
ஆனா குத்திக்க கூடாது பா

வழியில கிடக்குற கோடாரிய
எடுத்து கால்ல போட்டுகிட்டு
பிறகு குத்துதே குடையுதேன்னு

இல்லாம

போட்டி இருக்கலாம்
பொறாமை இருக்ககூடாது

என

கூடிவாழ்ந்தால் கோடி நன்மைன்னு

பொங்கும் எங்கும்
மங்களம் என
கூடிவாழ்வோமே

மனோ.ஜி

இளசு
12-01-2004, 12:03 AM
அருமை மணோஜி நண்பரே..

அழகாச் சொன்னீங்க..

பைத்தியகாரன்
12-01-2004, 12:38 PM
அண்ணா நமக்கு அந்த அளவுக்கு திடம் கிடையாது......என்னா செஞ்சாலும் அமைதியா மனசுக்குள்ளே கருவுற சுபாவம் நம்முது.............

இளசு
12-01-2004, 10:03 PM
அண்ணா நமக்கு அந்த அளவுக்கு திடம் கிடையாது......என்னா செஞ்சாலும் அமைதியா மனசுக்குள்ளே கருவுற சுபாவம் நம்முது.............

பலநேரம் நானும் அப்படித்தான்

குறிப்பாய் நாம் நம் வீட்டுக் குழந்தைகள், பெண்களுடன் இருக்கும்போது
சாக்கடை ஜந்துக்களைப் போல் இதுகளை
ஒதுங்கிப் போகவேண்டிய கட்டாயம்..

"கருவிய" நிகழ்வுகளை பகிருங்களேன் நண்பரே..

puppy
12-01-2004, 10:10 PM
அண்ணா நமக்கு அந்த அளவுக்கு திடம் கிடையாது......என்னா செஞ்சாலும் அமைதியா மனசுக்குள்ளே கருவுற சுபாவம் நம்முது.............

எனக்கு தெரியும்..இவரும் இவுக ஆளும் படம் பார்க்க போய் இருப்பாக....தனியா ஒரு பெண்மணி வந்து இருக்கும்..தம்பி நீங்க அங்கே போய் உட்கார்ந்துங்க நான் பொம்பளை ஆளோடு உட்கார்ந்துக்கிறேன்னு தனியா உட்கார வைச்சு இருக்கும்....முடியாதுன்னு சொல்லி இருப்பீக...தியேட்டர்காரன் வந்து சத்தம் போட........அப்படிதானே பை.கா?

novalia
13-01-2004, 11:45 AM
இடம் பொருள் ஏவல்..
பார்த்தால் பிரச்சனைகளே இல்லை...

இளசு அவர்களின் முத்தான
படைப்பு...

தொடருங்கள் இன்னும்...
வாழ்த்துக்கள்...

பைத்தியகாரன்
13-01-2004, 01:27 PM
பப்பி அங்க அந்த தனியா வந்தது நீங்கதானா ? அய்யோ பார்த்து நடக்கணும் போல இருக்கே.......................................

சரி இளசு அண்ணாச்சி, ஒரு ஒட்டெடுப்பு வேணுமே அதாவது குழந்தைகள் உள்ள விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் நடந்தால் அந்த குழந்தைகளுக்கு யார் பொறுப்பு?அது சரிப்பட்டு வருமா?

கண்டிப்பாக பெண்களுக்கு துணை தேவை ஆனால் எப்படி?

இதற்கு சரியான முறையில் தீர்வு காண விரும்புகிறேன்........
தனிப்பட்டமுறையிலும் நெருங்கியவர் ஒருவருக்கு செய்ய வேண்டி இருக்கிறது..அவர் தற்போது நன்றாக படித்தும் நல்ல வேலையிலும் இருக்கிறார்..............ஆனால் எது சரி என்று புலப்படவில்லை............

poo
13-01-2004, 02:39 PM
நண்பர் பை.கா அவர்களே... ஓட்டெடுப்புக்கான ஆலோசனைகள் சொல்ல தனி இடமே உள்ளது...இங்கே..

http://www.tamilmantram.com/board/viewtopi...=asc&highlight=

அடிக்கடி வாருங்கள்.. அப்போதுதான் கண்ணில் புலப்படும்..

உங்கள் தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது. நிச்சயம் தீர்வு காணப்படுமென நம்பலாம்.. அண்ணன் வாக்கெடுப்பில் விடுவாரெனில்!!

இளசு
14-01-2004, 12:00 AM
நண்பர் நோவாலியாவின் கருத்துக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.

பூ, நண்பர் பை.காவின் யோசனையை விரைவில் வாக்கெடுப்பாய் செய்துவிடலாம்.

தஞ்சை தமிழன்
14-01-2004, 12:14 PM
இளசுவின் மீண்டுமொரு நல்ல பதிவு.
அவருக்கு பாராட்டுக்கள்.

இந்த இடத்தில்தான் பதிக்கவேண்டுமென இடமறிந்து,
அதில் நல்ல பொருளும் செறிந்த
பதிவை தந்து

நம்மிடமிருந்து நல்ல பதில்களை வரவழைக்கும்
இளசுக்கு இணை உண்டோ???

பைத்தியகாரன்
14-01-2004, 04:01 PM
நன்றி அண்ணாச்சி இளசு அவர்களே.

இளசு
14-01-2004, 11:21 PM
தலைப்பின் சொற்களையே இடம் பார்த்து பதித்து
கருத்து தந்து சிறப்பித்த
என் நண்பன் தஞ்சைத் தமிழனுக்கு நன்றி...

பொங்கல்தின வாழ்த்துகள் நண்பா..

இளசு
10-03-2004, 08:18 PM
எல்லாவற்றையும் எங்கேயும்
ஒப்பனையில்லா வார்த்தைகளில்
சொல்லும் சுதந்தரம் வேண்டுமா?
ஒப்புக்கிறேன்

நாளை மாலை
அண்ணா சாலை
ஸ்பென்ஸர் சந்திப்பில்
முண்டக்கட்டையாய் வா
மேலும் பேசி
முடிவுக்கு வரலாம்!

karikaalan
11-03-2004, 01:53 PM
இளவல்ஜி!

இன்றுதான் இப்பதிவினைப் படித்தேன். எவ்வாறு இத்தனை நாள் படிக்காமல் இருந்தேன் என்றே தெரியவில்லை. மன்னிக்கவும்.

ஏதோ இயல்பாக ஒரு சொற்றொடரைப் பயன் படுத்தப்போய், அதனைத் தாங்கள் இவ்வளவு சுவையுடன் விவரிப்பதைப் படித்ததில் மகிழ்ச்சி.

இடம் பொருள் ஏவல்:

முதலாளி செய்யறது தப்புதான்; அதை அவரிடம் உடனே
சுட்டிக்காட்டினால் .... வேறு வேலை தேட வேண்டியதுதான்.

அதையே அவர் சுமுகமாக இருக்கும் போது, தனியே, எளிய சொற்களில் சொன்னால்..... கிடைப்பது சபாஷ் அல்லவா?

அது மட்டுமல்ல -- சில சமயங்களில் உடனே சுட்டிக்காட்டவேண்டிய நெருக்கடி நேரலாம். அப்போது அதனை ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதிக்காட்டினால்..... தவறு தவிர்க்கப் படலாம். இங்கும் இடம் பொருள் ஏவல்.
===கரிகாலன்

இளசு
21-04-2004, 09:57 PM
நன்றி அண்ணலே.. உங்கள் கருத்து அருமை...

இ.பொ.ஏ........ தொடர்கிறது...

காட்சி 1

சென்னை ராயபுரம்

அரசினர் மகப்பேறு மருத்துவமனை முன்புறம்.... முக்கிய சாலை..

பக்கத்தில் பேருந்து நிறுத்தம்... பரபரப்பான மக்கள் நடமாட்டம்..

குப்பைத் தொட்டி... நாயின் தேடல்...

அய்யோ..அது என்ன... சுருட்டப்பட்ட காஸ் துணிக்கிடையே...

காட்சி 2

சென்னை சௌகார்பேட்டை

குறுகிய தெருக்கள் (சந்துகள் என்பதே சரி)

சராசரியாய் ஒரு நொடிக்கு ஓர் இடத்தை கடக்கும் குறைந்தது இரு பாதசாரி...

சொத்....

காகித பொட்டலம்... அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்தலைவி சமர்ப்பணம்..

சிதறி தரையில். சீ.... கழிவுகள் தரையில் பரவி...

காட்சி 3

சென்னை பொதுமருத்துவமனை

எப்போதும் பரபரப்பாய் நடமாடும் குறுகிய நடைவழி

ஒருபுறம் பலமாடி அறுவை சிகிச்சை வார்டு கட்டடம்..

வெள்ளையும் சொள்ளையுமாய் ஒரு டிப்டாப் ஆசாமி எனக்கு முன்னால்..
ஆரோக்கிய நடை பயின்றவரின் பின்கழுத்தில் காலரில் செங்குருதி திடீரென
வழிந்து... ஆனால் அவர் வலியோ மயக்கமோ காட்டவில்லையே..
சை... காண்ட்டீனில் பாலிதீன் பையில் முடித்து கொடுக்கப்பட்ட தக்காளி சட்னியின் எச்சம்... ஸ்கட் மிஸ்ஸைலாய் மாடி வாசி வீசி எறிந்தது...

உடல், உணவு, மனக் கழிவுகளை அகற்றுவது, அலசுவது....
ஆரோக்கியமான ஒன்றே... மிக அவசியமான ஒன்றே....
அவை நம் உடன் வந்தவை.. தேவையானவை....
ஆனால்....

இடம்.. பொருள்.. ஏவல்.......

மன்மதன்
24-04-2004, 04:27 AM
என்று திருந்தும் இந்த கூட்டம்... ?? தொலைகாட்சியில் எவ்வளவோ சொல்லியும், சிங்கார சென்னை என்று விளம்பரப்படுத்தியும், நகரத்தில் இருக்கும் இவர்களே இப்படி பண்ணினால்.. கிராமங்கள் எவ்வளவோ தேவலை..

gans5001
11-05-2004, 03:41 PM
எழுந்து, திரும்பி பிடுங்கி எறிந்தேன்..

பிடிங்கி எறிய நினைத்திருக்கிறேன்.. ஆனால் இடம் பொருள் ஏவல் தடுத்து விடும்.. (மனதில் துணிச்சலற்றவன் என்பதால் கூட இருக்கலாம்)

இளசு
12-05-2004, 10:57 PM
நன்றி மன்மதன் , கண்ஸ்...

என்றோ எப்போதோ இதுபோல்..
பொதுவாய் நானும் பல நேரங்களில்
இந்தக் கொடுமைகளின் மௌன சாட்சியாய்த்தான்...

pgk53
20-05-2004, 01:51 AM
இளசு அவர்களே மிக நல்ல பதிவுகளைக் கொடுத்துள்ளீர்கள்.
நன்றி.

Iniyan
16-12-2004, 03:30 AM
சில வருடங்களுக்கு முன் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வதற்காய் சிகாகோ நகர பன்னாட்டு நிலையத்தில் இருந்தேன். பெட்டிகளை எல்லாம் பதிந்து உள்ளே அனுப்பி விட்டு கைப்பை மட்டும் கொண்டு இன்னும் 5 மணி நேரம் கழித்தே புறப்பட இருக்கும் விமானத்தினை பிடிக்கும் முன் நேரம் கொல்லும் முயற்சியாய் அங்கும் இங்கும் திரிந்து எப்படியோ விமான நிலையத்தின் வாசல் வந்து விட்டேன். சோவெனக் கொட்டும் மழை. மழைக்கிதமாய் ஒன்றைப் பற்ற வைத்து இழுத்தபடி சுவரோரமாய் மழையில் படாது குறுகி நின்று புகைத்து முடித்த நான், சிகரெட் மிச்சத்தை போடப்பார்க்க சுத்தமான தரையும் ரோடும். சாம்பல் கொட்டும் அழுக்கு வாளியோ நான் நின்று கொண்டிருக்கும் வராண்டாவின் எதிர் வராண்டாவில். இரு வராண்டாக்களுக்கிடயே உள்ள சாலையில் கொட்டு கொட்டென கொட்டும் மழை. மழை பாராது நனைந்தபடி சாலை கடந்து சிகரெட் மிச்சத்தை சரியான இடத்தில் சேர்ப்பித்து பின் மீண்டும் ஓடி நனைந்தபடி நான் விமான நிலையம் புகுந்தேன். இத்தனையும் கனமான அந்த கைப்பையுடன்.

ஒரு வழியாய் சென்னை வந்தது. என்னடா மாப்பிள்ளை எப்படி இருக்கே? என அன்பாய் குசலம் விசாரிக்கும் நண்பர்கள் இடையே என் பெற்றோரோ பெரியோரோ யாருமில்லா தைரியத்தில் ஆனந்தமாய் பத்த வைத்து புகைத்தபடி அளவளாவி நான் சிகரெட்டை என் காலடியில் போட்டு மிதித்த போது எனக்குள் ஏதோ ஒன்று மிதித்தது.

இதே நான் மேல் நாட்டில் கொட்டும் மழையெனப் பாராது, இழுக்கும் கனமான பையை கருத்திலும் கருதாமல் அழுக்கு வாளி தேடி அலைந்த நான் இப்போது என் தாய்த் திரு நாட்டில் என் மண்ணில் குப்பையை ரோட்டில் எறிகின்றேனே என என்னை என் மனச்சாட்சி மிதித்த வலியில் தானாய்க் குனிந்து அணைத்து எறிந்த சிகரட் தேடி எடுத்து குப்பைக் கூடையில் போட்டதும் கொஞ்சம் நிம்மதி.

நீ மட்டும் இப்படி குப்பைல போட்டா போதுமா? பாரு ஏற்கனவே குப்பையாய்த் தானே இருக்கு என்று என்னிடம் வாதிட்ட நண்பன் அடுத்த அரை மணியில் தான் புகைத்த சிகரெட்டுத் துண்டை கீழே எறியாமல் குப்பைக் கூடை தேடிய போது எனக்கு என்னையும் அறியாமல் புன்முறுவல் பூத்தது.

நாங்கள் மாறுவோம். நல்லவை எங்கிங்கிருப்பினும் கண்டு கொண்டு எலோரும் போல எனக்கென்ன என்றிராது ஒவ்வொருவராய் சுயதிருத்தம் செய்ய நாங்கள் பாரதி கண்ட புதிய சமுதாயம் அமைப்போம். என்ன கொஞ்சம் நாளாகளாம். பத்து திங்கள் தாய் வயிற்றில் முழுதாக சூல் கொண்ட குழந்தை தானே ஆரோக்கியம்???

gragavan
16-12-2004, 03:56 AM
அருமை இனியன். இருட்டு என்று புலம்புவதை விடுத்து ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

ஊருக்குள் இருக்கும் இரயில்வே பாலங்களுக்கு அடியில் இரயில் போகும் வேளையில் போவதும் ஒரு சாபமே. பலர் பட்ட கஷ்டங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

அரவனுக்கு மலையம்மாவின் மீது என்ன ஆத்திரம்?
http://www.tamilmantram.com/new/inde...showtopic=4731

பாரதி
16-12-2004, 06:43 AM
பாராட்டுக்கள் இனியன். எவ்வளவு தூரப்பயணம் என்றாலும் ஒரு சிறிய காலடியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அது போல உங்கள் செயல். என் மனமார பாராட்டுகிறேன்.

Iniyan
18-12-2004, 09:02 PM
ராகவன் மற்றும் பாரதியின் பாராட்டுகளுக்கு நன்றி. ஏதோ நம்மால் முடிந்த சின்ன மாற்றம்.

aren
19-12-2004, 01:11 AM
இன்றுதான் இந்த பதிவைக் கண்டேன். நான் எவ்வளவு அருமையான பதிவுகளை விட்டிருக்கிறேன் என்று இன்றுதான் தெரிகிறது.

பப்பி அவர்கள் சொல்வதுபோல் எனக்கு படிக்கத்தான் முடியும், இந்த மாதிரி அருமையாக பதிவுசெய்யமுடியாது.

இனியன் அவர்கள் ஒரு சிறுகாரியம் செய்ததன் பலனாக அவருடைய நண்பர் ஒருவரை திருத்தினார். அந்த நண்பர் பல நண்பர்களை திருத்துவார் என்று நம்புவோம்.

இளசு அவர்களே, தொடருங்கள். உங்கள் எழுத்துக்களைப் படித்தாவது நான் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறேன். அப்படித் தெரிந்துகொண்டு என்னையும் நான் மாற்ற முயற்சிக்கிறேன்.

இளசு
21-12-2004, 10:18 PM
இனியன்,
உங்கள் கையெழுத்தை செயலாய்க் காட்டிய நிகழ்ச்சி...
நண்பர்களின் மிகையில்லாப் பாராட்டில் நானும் கலந்துகொள்கிறேன்.

அன்பின் ஆரெனின் பாராட்டு மொழிகள் என்னை உற்சாகம் கொள்ளவைக்கின்றன..
நன்றி ஆரென்.

பாரதி
01-05-2008, 07:56 AM
இடம், பொருள் விளக்கிய இனிய அண்ணா... எப்போது ஏவல் சொல்ல வரப்போகிறீர்கள்?

அனுராகவன்
02-05-2008, 01:15 AM
நானும் காத்திருக்கிறேன் இளசு அவர்களே!!
முதலிருந்து படித்தேன்..
அருமையான பகுதி..

பூமகள்
12-05-2008, 07:48 AM
மன்றத்தில் புதைந்திருந்த மற்றொரு பொக்கிஷம்..!!
அலிபாபா கொள்ளையர் கூட்டம் செய்யும் கொள்ளை போல.. எங்களின் மனம் கொள்ளை கொண்ட பெரியண்ணாவின் மற்றொரு பதிவு..!!

இடம்... பொருள்... ஏவல்...

இப்படி எண்ணியெண்ணியே... நான் அமைதி காத்த இடங்கள் ஏராளம் ஏராளம்....

சில நகழ்வுகள்... பகிரமுடியாதவை... புகைந்து துமைந்த நாட்கள் ஆயிரம்...
அத்தகைய நிகழ்வுகளினை எதிர் கொண்டு தாக்கிய பதிவுகளைக் காணுகையில்.. மனவாறுதல்.. பெருமிதம் கொள்கிறேன்...

இடம் பொருள் ஏவல்..

இடம்: பேருந்து நிறுத்தம்
நேரம்: மாலை ஆறு மணி
அலுவலகம் சென்று அசதியில் திரும்பிய நான்..

கிட்டத்தட்ட முப்பது பேர் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில்...
ஒருவர்..பின்புறம் நின்று.. அனாசியமாக பற்ற வைத்து.. ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார்..

விடும் புகை... முன்புறம் வந்து.. சிலப்பலரின் மூக்கு துளைத்து.. இருமல் வர வைக்கிறது...

நான்.. கைக்குட்டை கொண்டு... முகத்தின் கண் தவிர அனைத்தையும் மறைத்து... திரும்பிப் பார்த்து.. காரமாக முறைத்தேன்...

ஆணாக இருந்திருந்தால்.. சட்டம் பேசியிருப்பேன்.. சில நாட்கள் முன் அரசு போட்ட.. உத்தரவு சொல்லி ஆதரவு தேடி சண்டையிட்டிருப்பேன்..

முறைப்பதும்.. சற்று.. தூரம் தள்ளி நிற்பதும் தவிர.. வேறு வழி தெரியவில்லை...

முகம் சுழித்து முறைத்துப் பார்த்த அர்த்தம் கூட.. புரியாதது போல்... அடுத்தது பற்ற வைக்கும் ஆளைப் பார்த்து.. மனத்தில் குமைந்து கொண்டே... மூச்சு முட்ட... வேறு இடம் தேடி.. புகைக்காதவர்(??) இருக்கும் இடம் தேடி நகர்ந்தேன்..

மனத்தில் இது போல்... புகைந்த சம்பவங்கள்... ஏராளம்... அகராதி மறுக்கும் வார்த்தைகள் கூட அர்த்தமறியாத என்னால்.. எப்படி எதிர்கொள்வது இத்தகைய கயவர்களை என்று புரியவில்லை...

தங்களின் பதிவு... என் மனசாட்சிக்கு விருந்து... பாராட்டுகள் பெரியண்ணா.....

எப்போது வருவீர்கள்... மீண்டும் இடம்.. பொருள்.. ஏவல் சொல்ல....??!!