PDA

View Full Version : சருகு...

HEMA BALAJI
22-10-2012, 04:13 PM
http://2.bp.blogspot.com/-475dhON1tRA/UBko9u7AJKI/AAAAAAAAA0g/u29kJ1OWXvE/s400/lf.jpg

என் வன மரத்தின்
நீண்ட கிளை ஒன்று
மௌனமாக அழுது கொண்டிருந்தது
தான் உதிர்த்துவிட்டிருந்த
ஒரு பழுத்த இலைக்காக...

அவ்விலை சருகெனப் பறந்து
நெடிய மலையின் உச்சியில்
சரேலென இறங்கும் அருவி வழி
பயணித்து...

அகன்ற ஆற்றின்
வட்டச் சுழல்களில்
சுற்றிக்கொண்டிருந்து...

சிறிய மீனொன்றின்
முத்தத் தொடுதலில்
துள்ளிப் பறந்து...

சிறுமி ஒருத்தியின்
கை அளாவலில்
ஒட்டிக்கொண்டு...

மீண்டும் வனம் வந்து சேர்ந்தது
வானம் பாடியின்
மெல்லிய இறகோடு...

கீதம்
24-10-2012, 10:01 AM
பழுத்து உதிர்ந்த பின்னும் வனம்விட்டுச் செல்ல மனமில்லையோ அந்த சருகுக்கு?

மரத்தின் மௌன அழுகை காணச் சகியாமல் மீண்டு வந்ததோ மரத்தின் வேருக்கு உரமாகும் நோக்கோடு...

மரங்களுக்கு இருக்கும் ஈரம் மனித மனங்களுக்கு இல்லாமல் போனதேனோ என்று எண்ணச்செய்யும் கவிதை.

பாராட்டுகள் ஹேமா.

கலைவேந்தன்
24-10-2012, 11:56 AM
சருகின் பயணம் மனதை நிறைத்தது ஹேமா.. பாராட்டுகள்..!

M.Jagadeesan
24-10-2012, 12:18 PM
சருகின் பயணம் , உயிரின் பயணமாகவே எனக்குத் தோன்றியது. சருகு , மீண்டும் வனம் வந்து சேர்ந்ததுபோல, போன உயிர் மீண்டும் பிறவி எடுக்கும் என்ற கருத்தை எனக்குள் உணர்த்தி நின்றது. வாழ்த்துக்கள் ஹேமா!

செல்வா
25-10-2012, 03:09 AM
ஜெகதீசன் ஐயாவின் கருத்தையே எனக்குள்ளும் தோற்றுவித்த அழகு கவிதை

வாழ்த்துக்கள்...!

HEMA BALAJI
25-10-2012, 12:22 PM
பழுத்து உதிர்ந்த பின்னும் வனம்விட்டுச் செல்ல மனமில்லையோ அந்த சருகுக்கு?

மரத்தின் மௌன அழுகை காணச் சகியாமல் மீண்டு வந்ததோ மரத்தின் வேருக்கு உரமாகும் நோக்கோடு...

மரங்களுக்கு இருக்கும் ஈரம் மனித மனங்களுக்கு இல்லாமல் போனதேனோ என்று எண்ணச்செய்யும் கவிதை.

பாராட்டுகள் ஹேமா.
நன்றி கீதம்.

HEMA BALAJI
25-10-2012, 12:24 PM
சருகின் பயணம் மனதை நிறைத்தது ஹேமா.. பாராட்டுகள்..!

நன்றி கலை அண்ணா..

HEMA BALAJI
25-10-2012, 12:24 PM
சருகின் பயணம் , உயிரின் பயணமாகவே எனக்குத் தோன்றியது. சருகு , மீண்டும் வனம் வந்து சேர்ந்ததுபோல, போன உயிர் மீண்டும் பிறவி எடுக்கும் என்ற கருத்தை எனக்குள் உணர்த்தி நின்றது. வாழ்த்துக்கள் ஹேமா!

மிகச் சரியே...நன்றி ஐயா.

HEMA BALAJI
25-10-2012, 12:25 PM
ஜெகதீசன் ஐயாவின் கருத்தையே எனக்குள்ளும் தோற்றுவித்த அழகு கவிதை

வாழ்த்துக்கள்...!

நன்றி செல்வா...

ந.க
26-10-2012, 08:00 AM
உதிர்
சருகைச் சாகவிடமால்
சங்கீதப் பறவை
உதிர்
இறகைத் தாங்கி ஒட்டி
பறக்க வைத்த
உயிர் வைத்த
கவியழகு நன்று.
நன்றி.

சுகந்தப்ரீதன்
26-10-2012, 07:28 PM
உயிரின் பயணத்தை சருகின் சாயலில் வெளிப்படுத்திய கவிதைக்கு வாழ்த்துக்கள்..!!:icon_b:

தான் உதிர்த்துவிட்டிருந்த”தன்னில் உதிர்ந்துவிட்டிருந்த” என்றிருக்க வேண்டுமோ ஹேமாஜி..!!:)

நாகரா
27-10-2012, 07:47 AM
http://2.bp.blogspot.com/-475dhON1tRA/UBko9u7AJKI/AAAAAAAAA0g/u29kJ1OWXvE/s400/lf.jpg

என் வன மரத்தின்
நீண்ட கிளை ஒன்று
மௌனமாக அழுது கொண்டிருந்தது
தான் உதிர்த்துவிட்டிருந்த
ஒரு பழுத்த இலைக்காக...

அவ்விலை சருகெனப் பறந்து
நெடிய மலையின் உச்சியில்
சரேலென இறங்கும் அருவி வழி
பயணித்து...

அகன்ற ஆற்றின்
வட்டச் சுழல்களில்
சுற்றிக்கொண்டிருந்து...

சிறிய மீனொன்றின்
முத்தத் தொடுதலில்
துள்ளிப் பறந்து...

சிறுமி ஒருத்தியின்
கை அளாவலில்
ஒட்டிக்கொண்டு...

மீண்டும் வனம் வந்து சேர்ந்தது
வானம் பாடியின்
மெல்லிய இறகோடு...
என் வன மரத்தடி மண்ணில் புதைந்து
மீண்டும் உயிர்த்தது
தன்னை உதிர்த்த கிளைக்கு உவகையூட்டி

சருகின் பயணத்தைப் படம் பிடிக்கும் கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஹேமா

HEMA BALAJI
27-10-2012, 04:19 PM
உதிர்
சருகைச் சாகவிடமால்
சங்கீதப் பறவை
உதிர்
இறகைத் தாங்கி ஒட்டி
பறக்க வைத்த
உயிர் வைத்த
கவியழகு நன்று.
நன்றி.
பின்னூட்டமும் கவிதை வடிவில்!!!..நன்றி...

HEMA BALAJI
27-10-2012, 04:21 PM
உயிரின் பயணத்தை சருகின் சாயலில் வெளிப்படுத்திய கவிதைக்கு வாழ்த்துக்கள்..!!:icon_b:

”தன்னில் உதிர்ந்துவிட்டிருந்த” என்றிருக்க வேண்டுமோ ஹேமாஜி..!!:)

:fragend005: தெரியலயே!!.. வாழ்த்துக்களுக்கு நன்றி சுப்ஜீ..:)

HEMA BALAJI
27-10-2012, 04:23 PM
என் வன மரத்தடி மண்ணில் புதைந்து
மீண்டும் உயிர்த்தது
தன்னை உதிர்த்த கிளைக்கு உவகையூட்டி

சருகின் பயணத்தைப் படம் பிடிக்கும் கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஹேமா
எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நாகரா ஐயா...

நாஞ்சில் த.க.ஜெய்
27-10-2012, 04:43 PM
உதிர்ந்த இலையின் பயணம் என் மனதினூடே...

HEMA BALAJI
27-10-2012, 05:02 PM
உதிர்ந்த இலையின் பயணம் என் மனதினூடே...

நன்றி..:)