PDA

View Full Version : பக்ரித் (தியாகத் திருநாள்) வாழ்த்துக்கள்



மதி
19-10-2012, 05:47 AM
அன்பு மன்ற உறவுகளே,

ஆயுத பூஜைக்கான தங்கள் வாழ்த்தை தங்கள் குரலில் பதிவு செய்து மன்ற பண்பலைக்கு அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி. இனி அனுப்பப்போகின்றவர்களுக்கும் முன்கூட்டிய நன்றி.

அங்ஙனம் அடுத்த சனிக்கிழமையன்று வரப்போகும் பக்ரித் திருநாளுக்காக தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: tmantramfm@gmail.com

நன்றி :icon_b:

தமிழ்மன்ற பண்பலை குழு

ஆதி
25-10-2012, 08:57 AM
அன்பின் சொந்தங்களே, பக்ரித் வாழ்த்தை விரைவில் அனுப்பி வைங்க, நாளை மதியத்துக்குள் அனுப்பிவிடவும் தோழர்களே

நாஞ்சில் த.க.ஜெய்
25-10-2012, 09:28 AM
சகோதர உறவுகளுக்கான வாழ்த்தினை அனுப்பி உள்ளேன் ..

Mano.G.
25-10-2012, 09:47 AM
இந்த இனிய தருணத்தில் எனதருமை
மன்ற இஸ்லாமிய உறவுகளுக்கு தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்



எம்.எஸ்.வியின் அல்லா அல்லா பாடலை இங்கே உறவுகளுக்கு
சமர்பிக்கிரேன்

அண்ணன் மனோ.ஜி

jayanth
25-10-2012, 12:01 PM
தமிழ்மன்ற இஸ்லாமிய உறவுகளுக்கும் அவர் குடும்பத்தவருக்கும் என் இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்...!!!
வாழ்த்தினால் மட்டும் போதுமா...போதாதே...!!!
அதனால் இப் பெருநாளுக்கு பாவமன்னிப்பு படத்தில்இருந்து "எல்லோரும் கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி"
என்ற பாடலை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்...!!!
.
.
.
.
.
.
(பி.கு) : ஆதி... பாட்டெல்லாம் ஒலிபரப்புவீங்கதானே...

HEMA BALAJI
25-10-2012, 12:01 PM
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய தியாகத் திரு நாள் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
25-10-2012, 12:11 PM
துல் அல்கா எனப்படும் ஹஜ் திருநாள் தன்னையும், தனது உடைமைகளையும் அர்ப்பணிக்கக் கூறும் தியாகத் திருநாள். ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காகத் தங்களையே தியாகம் செய்துகொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ளும் உன்னதத் திருநாள். இத்தியாகத் திருநாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கும், தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கும் என் பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆதி
25-10-2012, 12:36 PM
நிச்சயமாக பாடல் ஒலிபரப்படும் ஜெயந்த் அண்ணா

இராஜிசங்கர்
25-10-2012, 12:41 PM
அருமை சகோதரர்களுக்கு இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.அன்பும் அமைதியும் அனைவர் வாழ்விலும் பெருகட்டும்..

leomohan
25-10-2012, 02:14 PM
அனைவருக்கும் இனிய பக்ரித் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

Keelai Naadaan
25-10-2012, 05:28 PM
அன்பிற்கினிய இஸ்லாமிய நண்பர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

கலையரசி
25-10-2012, 05:31 PM
பக்ரீத் வாழ்த்து அனுப்பிட்டேன் மதி. பிடிச்ச பாடலும் கேட்டிருக்கேன்.

ஆதவா
25-10-2012, 06:18 PM
வாழ்த்தை அனுப்பியிருக்கிறேன்..

அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

எனக்கு விண்ணைத் தான்டி வருவாயா படத்திலிருந்து "மன்னிப்பாயா" பாடல் பரப்பவும்.

ஆதி
26-10-2012, 09:19 AM
மக்களே, அனுப்ப விருப்பம் கொள்கிறவர்கள், மாலைக்குள் அனுபவும், அதற்கு பின் அனுப்பினால், நிகழ்ச்சி தொகுப்பதற்கு நேரம் இருக்காது மக்கா

ந.க
26-10-2012, 10:46 AM
இறை கருணையின் இணையற்ற திரு நாள் - சமத்துவம் சஹோதரத்துவம் விளங்கட்டும்- வாழட்டும் வளமாய் எல்லோரும்! வாழ்த்துக்கள்......

ஜானகி
26-10-2012, 11:19 AM
மன்ற உறவுகளுக்கு மனம் கனிந்த 'தியாகத் திருநாள் ' வாழ்த்துக்கள் !

எங்கும் ஒற்றுமை உணர்வு பரவி, மனித நேயம் மலர்ந்து மணம் வீசட்டும்.

ரங்கராஜன்
26-10-2012, 05:46 PM
எனக்கு பிரியாணி தரும் உறவுகளுக்கு மட்டும் பக்ரீத் வாழ்த்துகள்....சும்மா தமாஷு...... இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை,.... அந்த பாடலில் என்னை பாதித்த வரிகள் இவை... தேடும் நேயர் நெஞ்சங்களில் குடி இருப்பவன், தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்.....இன்ஷா அல்லா,..... இந்த திருநாள் அனைத்து மதத்தினவருக்கும் நன்மை அளிக்க வேண்டும்........ முக்கியமாக உணவில்லாமல் எம் மக்கள் பட்டினியில் இறப்பதை நிறுத்த அல்லா மனது வைக்க வேண்டும்.......

பக்ரீத் தின வாழ்த்துக்கள்.... உறவுகளே...

கலைவேந்தன்
27-10-2012, 02:32 AM
நானும் வாழ்த்து அனுப்பிட்டேன். ஆனா தியாகத்திருநாள் என்பதற்கு பதிலாக ஈகைத்திருநாள் என்று வாழ்த்து சொல்லிவிட்டேன். தவறிருந்தால் பொறுத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும்.

டெல்லி வந்தப்பறம் பிரியாணி உண்ண யாரும் அழைப்பதில்லை ஆதலால் இந்த குளறுபடி. :) எனக்கு பிடிச்ச பாட்டு சொல்ல மறந்துட்டேன். என்ன போடச்சொல்லலாம்..?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ.. இப்படி தொடங்கும் ஊமைவிழிகள் படப்பாடல். போடுவீங்க தானே..?

மக்கா .. பண்பலை கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க..

ஆதி
27-10-2012, 02:37 PM
அன்பின் உறவுகளே

பக்ரித் சிறப்பு நிகழ்ச்சி முதல் ஒலிபரப்பு இன்று மாலை 6 மணிக்கு, மறு ஒலிபரப்பு இரவு 8:30 மணிக்கு ஒலிபரப்பாகும்

அனைவரும் கேட்டு மகிழவும், தங்களின் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளவும்

நாஞ்சில் த.க.ஜெய்
27-10-2012, 04:31 PM
எனது முஸ்ஸீம் சகோதர உறவுகளின் சந்தோக்ஷத்தினூடே சுவையான பாதர்த்தஙகள் பல உண்டு மகிவில் திளைத்திருக்க அப்போது நினைவு வந்தது மன்ற பண்பலையின் நிகழ்ச்சிகள் உடனே வந்தேன் மின்வேட்டு அப்போது தான் நின்றது பண்பலை திறந்து கேட்கையில் ஒரு மகிழ்ச்சி ஆய்த பூஜையில் இல்லாத பல மன்ற உறவுகளின் குரல் கேட்க்கையில் ஆக்ஷா என்ன வென்று சொல்ல... ஆனால் பேச்சு குரல்களினிடையே வரும் காற்றடைப்பு போன்ற சிறு குறையாக பட்டது..நானும் பதிவு செய்யும் போது இக்குறை தென்பட்டது.இதை தவிர மற்றபடி இன்னுமோர் படிக்கல்லில் மன்ற பண்பலை ..வாழ்த்துக்கள் மன்ற உறவுகளே...

ஆதி
28-10-2012, 01:21 AM
உறவுகள் பலராலும், பக்ரித் சிறப்பு நிகழ்ச்சி கேட்க இயலாத படியல், பக்ரித் நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு, திங்கள் கிழமை இரவு இந்திய நேரப்படி 8:30 மணிக்கு ஒலிபரப்பாகும், உறவுகள் கேட்டு மகிழவும், தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளவும்

கலைவேந்தன்
28-10-2012, 02:32 AM
மன்றப்பண்பலை மூலம் தமிழ்மன்றத்தில் முகம் காண வியலாத பல நண்பர்களின் குரலில் தியாகத்திருநாள் வாழ்த்துகளைக் கேட்டு மகிழ்ந்தேன். அனைவருடைய குரலும் மிகவும் அருமையாக இருந்தது. ஒரே ஒருவர் தான் மிக நன்றாகச் சொதப்பி இருந்தார். :) மற்றபடி மிக அருமையான நிகழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து மன்றப்பண்பலை மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

jayanth
28-10-2012, 04:18 AM
நேற்று பண்பலை ஓலி பரப்பாகும் நேரத்தில் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை...
நாளை இரவு தவறாமல் கேட்கவேண்டும்...!!!

அனுராகவன்
28-10-2012, 05:27 AM
என் வாழ்த்துக்களும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
பக்ரீத் தின வாழ்த்துக்கள்...

மதி
29-10-2012, 06:20 AM
பக்ரீத் சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை இந்தியநேரப்படி 6:30 அளவில் மறுஒலிபரப்பாகும். கேட்கத் தவறிய உறவுகள் மறக்காமல் கேளுங்கள்!! :icon_b:

சிவா.ஜி
29-10-2012, 08:05 AM
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள். சனியன்று கேட்கத் தவறியதை இன்று மீண்டும் கேட்க வைக்கும் மதிக்கு நன்றி.

மதி
29-10-2012, 01:32 PM
மன்னிக்கவும். கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதியில் நிறுத்த நேர்ந்தது.

jayanth
29-10-2012, 01:35 PM
மன்னிக்கவும். கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதியில் நிறுத்த நேர்ந்தது.

மறுபடியும் ஒலிபரப்புவீர்களா மதி...

மதி
29-10-2012, 01:49 PM
போய் கொண்டிருக்கிறது ஜெயந்த்.

மதி
29-10-2012, 01:50 PM
முடிந்ததும் மறுபடியும் ஒலிபரப்புகிறேன்.

வீட்டில் யூபிஎஸ்ஸில் கருகும் வாசனை. அதான் தனிப்படுத்திவிட்டு தொடர்கிறேன். இதெல்லாம் சகஜம் தானுங்களே :confused:

மதி
29-10-2012, 01:53 PM
தவறவிட்ட உறவுகளுக்காக இந்திய நேரப்படி 7:40க்கு மறுபடியும் ஒலிபரப்பாகும். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

M.Jagadeesan
29-10-2012, 02:52 PM
குரல் தெளிவாகக் கேட்க எவ்வாறு ஒலிப்பதிவு செய்யவேண்டும்? பெரும்பாலான மன்ற உறுப்பினர்களின் ( நான் உள்பட ) குரல் தெளிவாகக் கேட்கவில்லை. கீதத்தின் குரல் பிசிறு இல்லாமல் தெளிவாகக் கேட்டது. இவ்வாறு கேட்க என்ன செய்யவேண்டும்? எப்படிப்பட்ட ஒலிவாங்கி பயன்படுத்தவேண்டும்? A / C அறையில் பதிவு செய்யவேண்டுமா? போன்ற விவரங்களைத் தெரியப்படுத்தவும்.

மதி
29-10-2012, 03:05 PM
ஐயா..

எல்லோரும் முதன்முறையாக குரலைப்பதிவு செய்வதால் முடிந்தவரை தெளிவாக தர எத்தனித்தோம். சத்தம் இல்லாத அறையில் நல்ல ஒலிவாங்கியைப் பயன்படுத்தினால் எடிட்டிங் வேலைகள் எளிது. நாங்களும் இதற்கு புதிது. கற்றுக்கொண்டிருக்கிறோம். மேல்விவரங்கள் தெரியவரும் போது பகிர்ந்து கொள்கிறோம்.

முடிந்தவரை அமைதியான சூழலில் மைக்கிற்கு அருகில் பேசி அனுப்புதல் நலம். பேசி பதிவு செய்ததும் போட்டுக்கேட்டு திருப்தியாயிருப்பின் அனுப்புங்கள். இல்லையே மறுமுறை பதிவு செய்து அனுப்புங்கள். இது எங்களின் வேலையை சிறிது குறைக்கும்.

மதி
29-10-2012, 03:07 PM
கீதம் அக்கா எப்படி பதிவு செய்கிறார்கள் என பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

ஜானகி
29-10-2012, 03:10 PM
பக்ரித் தின வாழ்த்து பண்பலை ஒலிபரப்பு இப்போதுதான் கேட்டேன்......கச்சிதமாக இருந்தது. வாழ்த்துக்கள் !

பங்கேற்பு அதிகரித்துள்ளது உங்கள் வெற்றிக்குப் பலன் தான்.

சிலரது குரல் தெளிவாக இல்லை....கவனிக்கவும்.

ஆச்சரியம் என்னவென்றால், நான் குறிப்பிடாமலே நான் கேட்க நினத்த பாடலை ஒலிபரப்பியதுதான்....நன்றி.

தெரிவு செய்த பாடல்கள் அனைத்துமே மனதை வருடின.....

கீதம்
29-10-2012, 09:06 PM
கீதம் அக்கா எப்படி பதிவு செய்கிறார்கள் என பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

நான் Digital voice recorder என்னும் ஒரு சிறு கருவியில் பதிந்து அதை audacity மூலம் எடிட்டிங் செய்து அனுப்புகிறேன். அது இந்தியாவிலும் கிடைப்பதாக கலையரசி அக்கா சொன்னார்கள். விலை தெரியவில்லை.

நாங்கள் இருப்பது ஒரு பிரதான சாலையை ஒட்டிய வீடு என்பதால் எப்போதும் வாகனப்போக்குவரத்து சத்தம் இருக்கும். கதவு, சன்னல்களை மூடிவிட்டு வெளிப்புற சத்தத்தைக் கட்டுப்படுத்தி பதிகிறேன். சாதாரண அறைதான். ஏசி இல்லை.

govindh
29-10-2012, 09:46 PM
பக்ரீத் சிறப்பு நிகழ்ச்சி...
பண்பலையில் கேட்டு மகிழ்ந்தோம்...
பெரும் அனுபவம் பெற்ற பண்பலைகள் கூட..
இவ்வளவு சிறப்பாக கொண்டாடி இருக்க மாட்டார்கள்..

வாழ்த்துப் பூக்களைக் கோர்த்து..
வாழ்த்துப் பாமாலையாக்கி...

பக்ரீத் கொண்டாட்டம்...
வெகு சிற*ப்பு...

ம*ன்ற*ப் ப*ண்ப*லை-
மென்மேலும் புக*ழ் பெற*
வாழ்த்துக்கள்...!

jayanth
30-10-2012, 09:44 AM
பணபலையில் மற்றுமொரு மைல் கல்.
நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது.
பண்பலைக் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.