PDA

View Full Version : குறுங்கவிதைகள்..

HEMA BALAJI
18-10-2012, 06:28 AM
"என் பழைய பக்கங்களில் இருந்து"

1. வீடு...
வளைத்து வளைத்து சேர்த்துப் பின்னி
அழகாகத்தான் கட்டுகிறாய்
அடித்து அடித்துக் கலைத்தாலும்
மீண்டும் மீண்டும் உன் வீட்டை
என் வீட்டில் ஒட்டடையாக.....

2. 500 ரூபாய் நோட்டு....
காந்தியே...
இன்னும் ஏழையைச் சேராமல்
உனக்குமா ஏளனச் சிரிப்பு?!...

3.வெய்யில்...
சற்றே வெயில் அதிகம் தான்
வியர்த்துத்தான் போகிறது
ஐஸ் வாட்டர் பாட்டிலுக்கும்...

4.சிகரெட்...
அவள் இடை
என் இரு விரல்களுக்கு இடையில்
எங்கள் 18 வருட தாம்பத்தியத்தில்
பிறந்தது கேன்சர் குழந்தை...

5.தன் மானம்...
இறக்கும் போதும்
இரக்க விருப்பமில்லை
வாய்க்கரிசி போடாதே....

jayanth
18-10-2012, 02:26 PM
வீடும், 500 ரூபாய் நோட்டும் மற்றும் சிகரெட்டும் அருமை...!!!

HEMA BALAJI
19-10-2012, 07:01 AM
நன்றி ஜெயந்த்..

கோபாலன்
27-10-2012, 05:56 PM
வீடு, 500 ரூபாய் நோட்டு, வெயில், சிகரெட் , தன்மானம் என அனைத்து கவிதைகளும் அபாரமாக இருந்தன. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். :)

சுகந்தப்ரீதன்
28-10-2012, 12:25 PM
ஒட்டடையில் ஓர் அழகு...ஏளனத்தில் எதார்த்தம்...பனித்துளிகளோ பாவம்...நீண்டதோர் பேறுக்காலம்...முதிராத உதிர்தல்...கலக்குங்க ஹேமாஹி..!!

ந.க
28-10-2012, 12:32 PM
குறும்பாக்களின் முடிவில் ஒரு தத்துவத்தின் கூர்- வைர வரிகளுக்கான பொறியின்(கருவியின்) நாக்கு...... நன்றி.

HEMA BALAJI
28-10-2012, 03:15 PM
வீடு, 500 ரூபாய் நோட்டு, வெயில், சிகரெட் , தன்மானம் என அனைத்து கவிதைகளும் அபாரமாக இருந்தன. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். :)

நன்றி கோபாலன்...

HEMA BALAJI
28-10-2012, 03:16 PM
ஒட்டடையில் ஓர் அழகு...ஏளனத்தில் எதார்த்தம்...பனித்துளிகளோ பாவம்...நீண்டதோர் பேறுக்காலம்...முதிராத உதிர்தல்...கலக்குங்க ஹேமாஹி..!!

நன்றிங்க சுகந்தப்ரீதன்...

HEMA BALAJI
28-10-2012, 03:17 PM
குறும்பாக்களின் முடிவில் ஒரு தத்துவத்தின் கூர்- வைர வரிகளுக்கான பொறியின்(கருவியின்) நாக்கு...... நன்றி.

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கண்ணப்பு அவர்களே..

குணமதி
04-11-2012, 11:54 AM
ஐந்தும் அருமை!

மஞ்சுபாஷிணி
04-11-2012, 02:01 PM
மனிதன் ப்ளான் போட்டு பணம் சேர்த்து லோன் எடுத்து வீடு கட்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுது... அதே சிலந்திக்கோ உழைப்பும் கலைநயமும் மட்டும் இருந்தால் போறும் அழகிய வலை அதற்கென்று வீடு.... அதை அற்புதமாக வரியில் அமைத்தது அழகு ஹேமா..

எதையும் வேண்டாத எளிய மனிதர் காந்தி... அவரின் படம் போட்ட பணமோ ஏழைகளை நெருங்க இயலா சீனச்சுவராக.... மிக அருமை ஹேமா..

வெயில் அதிகமானால் வியர்ப்பது நமக்கு... குளிர் அதிகமானால் வியர்ப்பது வாட்டர் பாட்டிலுக்கா.. அழகிய சிந்தனைப்பா ஹேமா...

புகையிலை என்னும் பயங்கரத்தை சமாதானம் என்னும் வெண்மைத்தாளில் மறைத்து அழகாக்கி மனிதர் மனதை மயக்கும் போதை உள்ளடக்கி தரும்போது மனிதன் தன் சோகம், சந்தோஷம், நட்பு இப்படி எல்லாத்துக்கும் சிகரெட்டை பயன்படுத்தி அந்த க்*ஷண நேரத்தின் சந்தோஷத்துக்கு ஏங்கி பின் கேன்சர் வந்து மரிப்பதை பார்த்திருக்கிறேன்... அதையே இங்கே கவிதையாக வடித்திருப்பது மிக அழகு சிகரெட்டை பெண்ணின் இடையாக வரைந்ததும் கேன்சரை குழந்தை என்று வரைந்ததும் புதுமை ஹேமா...

இறக்கும்போதும் இரக்க விரும்பவில்லை... இழக்க அப்டின்னு வந்தாலும் பொறுத்தமாக இருக்கும்.... அழகு அழகு சபாஷ் சொல்லவைக்கும் வரிகள் ஹேமா...

முத்துகளாய் பிரகாசிக்கிறது இங்கு வரிகள் ஹேமா.. அன்புவாழ்த்துகள்....

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 05:28 PM
கூர்தீட்டிய வாளின் சிந்தனைகள் ...

கீதம்
06-11-2012, 08:51 AM
குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரசனை. பாராட்டுகள் ஹேமா.. இறுதிக்கவிதை மிகவும் ஈர்த்தது. மனம் விட்டகல நாளாகும்.

HEMA BALAJI
07-11-2012, 05:02 AM
ஐந்தும் அருமை!

நன்றி குணமதி அவர்களே...

HEMA BALAJI
07-11-2012, 05:03 AM
மனிதன் ப்ளான் போட்டு பணம் சேர்த்து லோன் எடுத்து வீடு கட்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுது... அதே சிலந்திக்கோ உழைப்பும் கலைநயமும் மட்டும் இருந்தால் போறும் அழகிய வலை அதற்கென்று வீடு.... அதை அற்புதமாக வரியில் அமைத்தது அழகு ஹேமா..

எதையும் வேண்டாத எளிய மனிதர் காந்தி... அவரின் படம் போட்ட பணமோ ஏழைகளை நெருங்க இயலா சீனச்சுவராக.... மிக அருமை ஹேமா..

வெயில் அதிகமானால் வியர்ப்பது நமக்கு... குளிர் அதிகமானால் வியர்ப்பது வாட்டர் பாட்டிலுக்கா.. அழகிய சிந்தனைப்பா ஹேமா...

புகையிலை என்னும் பயங்கரத்தை சமாதானம் என்னும் வெண்மைத்தாளில் மறைத்து அழகாக்கி மனிதர் மனதை மயக்கும் போதை உள்ளடக்கி தரும்போது மனிதன் தன் சோகம், சந்தோஷம், நட்பு இப்படி எல்லாத்துக்கும் சிகரெட்டை பயன்படுத்தி அந்த க்*ஷண நேரத்தின் சந்தோஷத்துக்கு ஏங்கி பின் கேன்சர் வந்து மரிப்பதை பார்த்திருக்கிறேன்... அதையே இங்கே கவிதையாக வடித்திருப்பது மிக அழகு சிகரெட்டை பெண்ணின் இடையாக வரைந்ததும் கேன்சரை குழந்தை என்று வரைந்ததும் புதுமை ஹேமா...

இறக்கும்போதும் இரக்க விரும்பவில்லை... இழக்க அப்டின்னு வந்தாலும் பொறுத்தமாக இருக்கும்.... அழகு அழகு சபாஷ் சொல்லவைக்கும் வரிகள் ஹேமா...

முத்துகளாய் பிரகாசிக்கிறது இங்கு வரிகள் ஹேமா.. அன்புவாழ்த்துகள்....

ஹை!.. மஞ்சு அக்கா. எப்படி இருக்கீங்க? அன்பான வாழ்த்துக்களுக்கு என் அன்பான நன்றிகள் அக்கா..

HEMA BALAJI
07-11-2012, 05:04 AM
கூர்தீட்டிய வாளின் சிந்தனைகள் ...

நன்றி ஜெய் அவர்களே...

HEMA BALAJI
07-11-2012, 05:05 AM
குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரசனை. பாராட்டுகள் ஹேமா.. இறுதிக்கவிதை மிகவும் ஈர்த்தது. மனம் விட்டகல நாளாகும்.

உங்கள் ரசிப்புக்கு மிக நன்றி கீதம்...