PDA

View Full Version : கடல்பறவையின் "கடி "கள்!!



seabird
18-10-2012, 03:40 AM
படித்ததில் பிடித்த நகைச்சுவை தொகுப்புகள் !!
:lachen001:

கே: சார் ... அந்த கடைல என்ன அவ்வளவு கூட்டம் ?

ப: பண்டிகை கால எக்ஸ்சேஞ் ஆபர் தர்றாங்களாம் சார்!!

கே: அப்படி என்ன சார் ஸ்பெஷல் ஆபர்? கூட்டம் அள்ளுது ?

ப: மிக்ஸிய குடுத்துட்டு அம்மிக்கல் வாங்கிக்கலாமாம்.
ஒரு ஏர் கண்டிஷனர் வாங்குனா மூணு கைவிசிறி இலவசமா தராங்களாம்.
ரெண்டு ட்யூப்லைட் வாங்குனா ஆறு மெழுவர்த்தி ப்ரீயா தராங்களாம் சார்!!

*******************************************************************************************************

இன்கம் டாக்ஸ் ரெயிட் வருமோன்னு ரொம்ப பயமா இருக்கு

இன்கம் டாக்ஸ் ரெயிட் வர்ற அளவுக்கு என்ன தொழில் சார் பண்ணறீங்க?

மெழுகுவர்த்தி தயாரிச்சு சேல்ஸ் பண்றேன் சார்!!

கீதம்
18-10-2012, 03:58 AM
நல்லா இருக்கு ஸீபேர்ட். முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு கதை சொல்லும்போது அம்மி, ஆட்டுக்கல் பற்றியெல்லாம் புரியவைக்கிறதுக்குள் போதும் போதுமென்று ஆகிடும். அதெல்லாம் வீடுகளில் இருந்தாலும் பயன்பாடு இல்லாமல் கொல்லைப்புறம் ஒரு ஓரமாய்க்கிடக்கும். இப்போது பிள்ளைகளுக்கு சொல்வது மட்டுமல்ல, செயல்முறையிலும் காட்டிவிடலாம். விறகடுப்பு, விசிறி, அரிக்கேன் விளக்கு போன்ற புழங்கப்படாத பல பொருட்களை பிள்ளைகள் அறிந்துகொண்டுவிட்டனர்.

M.Jagadeesan
18-10-2012, 04:56 AM
மின்தட்டுப்பாடு எல்லாத் தொழில்களையும் முடக்கிவிட்டது. மின் தட்டுப்பாடு காரணமாக அரசு , மிக்சி,கிரைண்டர், ஃ பேன் ஆகிய இலவசப் பொருட்கள் வழங்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. மிக்சிக்குப் பதிலாக அம்மியும், கிரைண்டருக்குப் பதிலாக ஆட்டுக்கல்லும் ,ஃ பேனுக்குப் பதிலாக பனை ஓலை விசிறியும் , மின் விளக்குக்குப் பதிலாக மெழுகு வர்த்தியும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இனி மக்கள் ஆடைகளுக்குப் பதிலாக இலை தலைகளைக் கட்டிக் கொண்டு ஆதிவாசிகளாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
18-10-2012, 08:01 AM
சிந்திக்க வைக்கும் நகைசுவை தொகுப்புக்கள்.மின்சாரம் இல்லையெனில் நமது வாழ்க்கை 50 வருடம் பின்னொக்கி செல்கிறோம் என்பதில் சந்தெகம் இல்லை..இது போல் நிகழ்ந்தால் ஆரோக்கியம் மீண்டும் மீண்டு வரும்..

jayanth
18-10-2012, 10:41 AM
இக்காலத்துக்கேற்ப சிறப்பான கடிகள்...!!!

சுகந்தப்ரீதன்
19-10-2012, 03:02 PM
:icon_b::icon_b::icon_b:

தமிழ்நாட்டுல பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் விற்றா நல்லவருமானம் வரும்ன்னு... சிவாண்ணா எற்றுமதிக்கு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்காரு..!!:icon_rollout:

arun
21-10-2012, 11:35 AM
சிரிப்பதை தவிர வேறெதுவும் சொல்ல தெரியவில்லை !