PDA

View Full Version : ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை வாழ்த்துஆதி
14-10-2012, 04:11 AM
அன்பின் சொந்தங்களே,

வணக்கம். நமது மன்றத்தில் நமக்காக பண்பலை ஆரம்பிக்க பட்டிருப்பதை அறிவீர்கள்

நாம் நமக்காக ஆரம்பித்திருக்கும் நமது பண்பலையில், ஆயுத பூஜைக்கு அல்லது சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்தை குரலொலியில் பதிவு செய்து அனுப்புங்கள் சொந்தங்களே, அத்துடன் தங்ளுக்கு பிடித்த பாட்டையும் சொன்னால் உங்கள் வாழ்த்தோடு அந்த பாட்டும் ஒலிபரப்பாகும்

குரலொலி மூலம் வாழ்த்து சொல்ல இயாலத உறவுகள், தங்கள் வாழ்த்தை இந்த திரியில் பதிவு செய்து, தாங்கள் விரும்பும் பாடலையும் இங்கே தெரிவிக்கலாம்

வாழ்த்து, கவிதையாக கூட இருக்கலாம் சொந்தங்களே

குரலாக்கம் செய்த வாழ்த்த இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் tmantramfm@gmail.com

இது நமது பண்பலை, நமக்கான பண்பலை எந்த தயக்குமும் இல்லாமல் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள்


அன்புடன்
தமிழ்மன்ற பண்பலை குழு

அமரன்
14-10-2012, 07:11 AM
இப்படித்தான் ஒரு தடவை இன்னொரு இடத்தில் வாழ்த்துத் தெரிவிக்கும் போது அனைவருக்கும் என்னினிய ஆயுத பூசை வாழ்த்துகள் என்று சொன்னேன். உடனே ஒருவர் என் இனிய ஆயுதம் எதுப்பா.. உன் இனிய ஆயுத பூசை எதப்பா என்றார்.. அதனால இந்த முறை என் நுக்கு என்னிடம் தடைவிதிச்சுட்டேன்.

கலையரசி
14-10-2012, 06:56 PM
ஆயுஜ பூஜை வாழ்த்து அனுப்பியிருக்கிறேன் ஆதி.

எனக்குப் பிடித்த பாடல் மொழி படத்தில் வரும் காற்றின் மொழி இசையா என்று துவங்கும் பாடல்.

கோபாலன்
18-10-2012, 06:08 PM
அனைவருக்கும் இனிய கலைமகள் வழிபாடு நல்வாழ்த்துக்கள்.
எனக்கு பிடித்த பாடல் "சூரியகாந்தி" படத்திலிருந்து "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது".
நன்றி.:)

govindh
19-10-2012, 10:45 PM
மன்ற உறவுககள் அனைவருக்கும்...
சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.....

என் விருப்பப் பாடல்....

மே மாதம்...படத்திலிருந்து...
ஜெயச் சந்திரன் பாடிய*
'என் மேல் விழுந்த மழைத் துளியே...'

ஆதி
20-10-2012, 10:10 AM
சீக்கிரம் உங்க வாழ்த்தை அனுப்பி வைங்க

கும்பகோணத்துப்பிள்ளை
20-10-2012, 01:23 PM
குடும்பத்தினர் அனைவர்க்கும்
எனது மனமார்ந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
தமிழ்த்தாயின் ஆசிகளுடன் அனைத்து உறுப்பினர்களும்
புதிய சிந்தனைகளையும்
புதிய ஆக்கங்களையும்
பதிவேற்ற எனது வாழ்த்துக்கள்!


எனக்கு பிடித்த பாடல்: நீ காற்று! நான் ஆலமரம்! .... என தொடங்கும் பாடல்

ஆதி
21-10-2012, 01:03 PM
சீக்கிரம் உங்க வாழ்த்தை அனுப்பி வைங்க

நாஞ்சில் த.க.ஜெய்
21-10-2012, 06:28 PM
யாருக்கிட்ட கேக்குறீங்க ஆதி..உறவுகளே வாங்க ...வந்து சொல்லுங்க இவருகிட்ட...

ஆதி
22-10-2012, 05:40 AM
ஹா ஹா ஹா

நம்ம உறவுகள் கிட்டதான் ஜெய்

மக்கா, இன்றைக்குள் அனுப்பிடுங்க, அப்போதுதான் தொகுப்பத்தில் சிரமம் நேராது

இதுவரை அனுப்பி வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி

jayanth
22-10-2012, 06:27 AM
என் அன்பின் தமிழ் மன்ற உறவுகளே ...!!!
அனைவருக்கும் எனதன்பான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மன்றத்தாருடன் எனக்குப் பிடித்த

பாடல் : "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி"
படம் : பட்டணத்தில் பூதம்

பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்...!!!

மதி
22-10-2012, 06:56 AM
அனைவருக்கும் என் ஆயுத பூசை மட்டும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் வரும் "பஞ்சாலைக்காரி" என்னும் பாடலை ஒளிபரப்பவும். ஆலையில் இருக்கும் இயந்திரங்களை தெய்வமாக கொண்டாடும் ஆயுதபூஜைத் திருநாளைப்பற்றிய பாடல் இது.

M.Jagadeesan
22-10-2012, 07:19 AM
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை சரஸ்வதியே!
தூய மனத்தோடு உன்னை வணங்குகிறேன்
வாய் திறந்துந்தன் வரத்தை நல்கிடுவாய்!

நாள்தோறும் எந்தன் நாவினிலே குடியிருந்து
நான்விடும் மூச்செல்லாம் தமிழ்மணம் கமழ்ந்திடவும்
நான்பேசும் பேச்செல்லாம் நற்றமிழ் பாட்டெனவும்
நாட்டிலுள்ள மக்கள் போற்றிடவே வரந்தருவாய்!

பண்பலை என்னும் ஒப்பற்ற ஆயுதத்தால்
மன்றத்து மக்களின் குரலெங்கும் ஒலித்திடவும்
சில்லென்ற தமிழ்த்தென்றல் எங்கும் வீசிடவும்
நல்வழி காட்டிடுவாய் நாமகள் சரஸ்வதியே!

சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும்
சிறப்புடன் கொண்டாடி சீர்மிகு நலன்களை
மன்றத்து மக்கள் யாவரும் பெற்றிட
குன்றத்து முருகனைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்!

விருப்பமான பாடல்:
================
இக்காலப் பாடல்கள் எனக்குப் பிடிப்பதில்லை
அக்காலப் பாடல்களே எனக்கு அமிர்தமாம்!
எல்லையில்லா இன்பம் எனக்கு தருகின்ற
முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
என்ற
உத்தம புத்திரன் பாடலைக் கேட்டிடவே
மெத்த விரும்புகிறேன் ; கேட்க செய்திடுவீர்!

ஆதி
22-10-2012, 07:33 AM
//பண்பலை என்னும் ஒப்பற்ற ஆயுதத்தால்
மன்றத்து மக்களின் குரலெங்கும் ஒலித்திடவும்
சில்லென்ற தமிழ்த்தென்றல் எங்கும் வீசிடவும்
நல்வழி காட்டிடுவாய் நாமகள் சரஸ்வதியே!
//

கலை மகளிடம் நானும் இதே பிராத்தனையை முன் வைக்கிறேன், அருள் புரிக தாயே

A Thainis
22-10-2012, 07:37 AM
மன்ற உறவுகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்நாளில் நாம் அனைவரும் உழைப்பால் உயரவும், கல்வியால் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

எனக்கு பிடித்தமான பாடல், சந்தோசம், சந்தோசம் வாழ்கையில் பாதி பலம்.

முரளி
22-10-2012, 08:04 AM
அனைவருக்கும் எனது கலைமகள் பூசை வாழ்த்துக்கள்.

பூஜை என்கிற வார்த்தையே பூசை எனும் தமிழ் சொல்லிலிருந்து வட மொழிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.பூ + செய்
(பூவால் செய்யும் தொழுகை) பூசை. சரியாக இருக்குமோ?


எனக்கு பிடித்த பாடல் : பாரதி படத்தில் "மயில் போல" அல்லது பிதாமகன் படத்தில் "இளங்காத்து வீசுதே"

மிக்க நன்றி

முரளி

ஜானகி
22-10-2012, 01:03 PM
மன்ற சொந்தங்களுக்கு இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் !

நம்மை ஆட்டிவைக்கும் அரக்கர்களான மும்மலங்களையும், விவேகம் வைராக்கியம் எனும் சக்தியின் துணைகொண்டு நம் கட்டுப்பாட்டில் கொணர்ந்து,

நம்முள் ஒளிரும் இறைத்தன்மையினைக் கண்டுகொண்டு, எங்கும் எதிலும் யாவர்க்கும் நலமே புரிந்து,

வாழ்க்கையின் உண்மையான லட்சியத்தை அடைந்து வெற்றிவாகை சூடுவோமாக !

எனது விருப்பம்....இசைஞானியின்....' ஜனனி...ஜனனி....'. முடிந்தால் ஒலிபரப்பவும். நன்றி

ஆதி
22-10-2012, 01:11 PM
//எனது விருப்பம்....இசைஞானியின்....' ஜனனி...ஜனனி....'. முடிந்தால் ஒலிபரப்பவும். நன்றி //


அம்மா, அது என்னமோ இந்த பாட்டை நீங்க கேப்பிங்கனு தோன்றியது

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இந்த பாட்டை போடலாம்னு இருந்தேன், ஜானகி அம்மா வாழ்த்து சொல்லும் போது இந்த பாட்டை கேட்டா என்ன செய்றதுனு மனசு தானா சொல்லுச்சு, பார்த்தா இந்த பாட்டை நீங்க கேட்டிருக்கீங்க :)

ஆதி
22-10-2012, 02:33 PM
இதுவரை வாழ்த்து பதிவு செய்த, ஒலி கோப்பாய் அனுப்பிய அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், நாளை மாலை இந்திய நேரப்படி 6 மணிக்கு உறவுகளின் வாழ்த்துகள் ஒலிபரப்பாகும், மறு ஒலிபரப்பு மீண்டும் மாலை 8:30 மணிக்கு ஒலிபரப்பாகும்

இந்த ஆதரவு இருக்கும் வரை எந்த பெரிய முயற்சிகளையும் செய்யலாம் எனும் நம்பிக்கை மேலிடுகிறது

மிக்க நன்றிகள் அனைவருக்கும்

திபாவளியில் இருந்து முழுவீச்சில் இறங்குவோம், தமிழ்மன்ற பண்பலையை இணையத்தில் பேரலையாய் பாயச் செய்வோம்

HEMA BALAJI
22-10-2012, 04:27 PM
நான் வாழ்த்த பதிவு பன்னி அனுப்பிட்டேன். இங்கயும் சொல்லிடுறேன். மன்ற உறவுகள் அனைவருக்கும் என் இனிய சரஸ்வதி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள். இந் நாளும் இனி வரும் நாளும் அனைவருக்கும் இனிதே அமைய வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன். எனக்கு பிடித்த பாடல் (அன்று நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் மட்டும் போடுவதாய் இருந்தால் கோடை மழை படத்திலிருந்து - காற்றோடு குழலின் நாதமே பாட்டு. மற்ற சினிமா மெலடி பாட்டுகளும் போடுவதாய் இருப்பின் அலைபாயுதே படத்திலிருந்து எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாட்டு.) நேயர் விருப்பம் கேட்டதற்கு நன்றி... நன்றி... நன்றி...

அன்புரசிகன்
23-10-2012, 02:21 AM
நம்ம குரல் எல்லாம் கேட்டா அப்புறமா மன்றப்பக்கமே வரமாட்டார்கள்....

சண்டைபிடிச்சு காசு சேர்த்து நல்லா படிக்க வாழ்த்துக்கள்...

அனுராகவன்
23-10-2012, 06:51 AM
அனைவருக்கும் என் ஆயுத பூசை மட்டும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

ஆதி
23-10-2012, 12:23 PM
இன்னும் 7 நிமிடத்தில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி துவங்கும், உறவுகள் எல்லாம் கேட்க ஆயத்தமாகவும்

jayanth
23-10-2012, 01:44 PM
தங்கை கீதத்தின் குரலில் என் தமிழ் மன்ற உறவுகளுக்கான வாழ்த்துக் கேட்டேன்.மகிழ்ந்தேன்...!!!

நாஞ்சில் த.க.ஜெய்
23-10-2012, 02:47 PM
முழுவதும் இல்லாமல் கேட்டேன் ஒலிபரப்பினை மின்தடையினூடே ..நன்றாக இருந்தது அதே நேரம் ஒலிபெருக்கியில் வைத்து கேட்கயில் மைக்கில் கேட்கும் தேவையற்ற ஒலியினால் கொஞ்சம் இடையூறு ஏற்பட்டது..மற் ஒலிபரப்புக்கு காத்திருக்கிறேன்..

ஆதி
23-10-2012, 02:57 PM
இன்னும் 3 நிமிடத்தில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியின் மறுஒலிபரப்பு துவங்கும், உறவுகள் அனைவரும் கேட்க ஆயத்தமாகவும்

கலைவேந்தன்
23-10-2012, 03:49 PM
கேட்டுக்கிட்டிருக்கோம். கேட்டுக்கிட்டு இருக்கோம். ஆயுதபூஜை வாழ்த்து சொல்ல முடியாம போயிடுச்சு.. மன்னிச்சுக்கோங்க மக்கா.. இதோ இப்ப இங்கே சொல்லிடறேன். நேர்ல சொன்னமாதிரி நினைச்சுக்கோங்க..