Log in

View Full Version : உன்னுள் நான்!



M.Jagadeesan
13-10-2012, 02:11 AM
என்னுள் நீ இருப்பதைக் காட்டிலும்
உன்னுள் நான் இருப்பது பெருமையே!
ஆண்களின் நெஞ்சம் அவலத்தின் சின்னம்!
ஆயிரம் பெண்கள் இருப்பார் ஆங்கே!
மண்ணுலக மனிதரில் ஒருவருக்கு மட்டுமே
பெண்ணின் நெஞ்சில் இடமுண்டு அறிவேன்!
ஆயிரம்பேர் இருக்கின்ற வீட்டைக் காட்டிலும்
ஆருயிரே! உன்னிதய வீட்டினிலே தனித்திருக்கும்
இனிமையே எனக்கின்பம் அதையே வேண்டுகிறேன்.

கோபாலன்
14-10-2012, 10:41 AM
பெண்ணின் நெஞ்சில் ஒருவருக்கு மட்டுமே இடமுண்டு.
ஆனால் ஆண் நிறைய பெண்களின் நெஞ்சில் இடம்பிடிக்க ஆசைபடுகிறான் போலும்.
கவிதை நன்றாக இருந்தது. :)

kulakkottan
15-10-2012, 01:06 PM
ஜெகதீசன் காலங்காலமான அத்தனை ஆண்களின் எதிர்பார்ப்பையும்
ஒற்றை கவிதையில் சொல்லிவிடீங்க ,சபாஸ் !