PDA

View Full Version : தனியாவாய்! எனக்குக் கனியாவாய்!

M.Jagadeesan
13-10-2012, 01:18 AM
உறவுகள் என்றும் உதவாது அந்த
உறவினை உதறி வந்துவிடு- வந்தால் நீ
தனியாவாய்! எனக்குக் கனியாவாய் !

நோயால் வருந்தும் பிள்ளைக்குப் பாலூட்டும்
தாய்போல் இருந்து காத்திடுவேன் -என்னை
ஏற்றிடுவாய் துன்பம் மாற்றிடுவாய்!

உன்மடியில் நான்தூங்க என்மடியில் நீதூங்க
பொன்மயிலே!உந்தன் போகம் வேண்டுமடி!
வந்திடுவாய் முத்தம் தந்திடுவாய்!

அடுக்கடுக்காய் துன்பங்கள் வந்தாலும் உன்முகத்தை
ஒருதடவை பார்த்தாலும் போதுமே! அவையெல்லாம்
போகுமே என்நெஞ்சம் வேகுமே!

ஈருடலும் ஒருயிராய் இருக்கும் நம்மைப்
பிரித்திடவே எண்ணுகின்ற கயவர் தமக்குப்
பிணியாவேன் ஏழரைச் சனியாவேன்!

கீதம்
13-10-2012, 05:30 AM
காதலியின் வருகைக்காக இறைஞ்சும் வரிகள் அருமை. வந்தால் உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்வேன் என்று விவரிப்பது அழகு. கடைசி வரிகள் சற்றே முறுவல் தந்தன. ரசிக்கவைத்த அழகுக் கவிதை. பாராட்டுகள் ஐயா.

கடைசிப்பத்தியில் ஈருடலும் ஓருயிருமாய் என்றிருந்தால் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.

M.Jagadeesan
13-10-2012, 06:30 AM

ஓசை நயத்திற்காக ' ஓருயிராய் " என்று எழுதினேன்.

கீதம்
13-10-2012, 08:06 AM
ஓசை நயத்திற்காக ' ஓருயிராய் " என்று எழுதினேன்.

தங்கள் விளக்கத்திற்கு நன்றி ஐயா.

kulakkottan
15-10-2012, 01:14 PM
ஏக்கங்களின் வலி வரிகளை படிக்கும் போதே
தொற்றி கொள்கிறது

ஒருதடவை பார்த்தாலும் போதுமே! அவையெல்லாம்
போகுமே என்நெஞ்சம் வேகுமே!
ஏதோ முரண் தெரிகிறதல்லவா ?
ஏன் ஒரு தடவை பார்த்தால் நெஞ்சம் (வேகுமே) துன்பப்பட வேண்டும் !

தனியாவாய்! ______கனியாவாய்!
சந்தமும் அர்த்தமும் ஒரு சேர பொருந்தி வருகிறது

M.Jagadeesan
15-10-2012, 05:15 PM
ஏக்கங்களின் வலி வரிகளை படிக்கும் போதே
தொற்றி கொள்கிறது

ஏதோ முரண் தெரிகிறதல்லவா ?
ஏன் ஒரு தடவை பார்த்தால் நெஞ்சம் (வேகுமே) துன்பப்பட வேண்டும் !

தனியாவாய்! ______கனியாவாய்!
சந்தமும் அர்த்தமும் ஒரு சேர பொருந்தி வருகிறது

இங்கு , " வேகுமே " என்ற சொல்லுக்கு " அமைதி அடையுமே " என்று பொருள்.

கலைவேந்தன்
15-10-2012, 05:33 PM
சந்தங்கள் மிகுந்த அருமையான எதிர்பார்ப்புக் கவிதை. எதிர்பார்க்கும் தன் இணைக்குத் தன்னால் என்ன இயலும் என்று மனம் திறந்து சொல்லும் வரிகள் அருமை.

ஈருடலும் ஒருயிராய் இருக்கும் நம்மைப்
பிரித்திடவே எண்ணுகின்ற கயவர் தமக்குப்
பிணியாவேன் ஏழரைச் சனியாவேன்!

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. பாராட்டுகள் ஐயா.

கோபாலன்
15-10-2012, 07:08 PM
காதலுக்காக ஏங்குவதும் காதலுக்காக ஆயுதம் தாங்குவதும் நல்ல கவிதை.:)

M.Jagadeesan
16-10-2012, 01:22 AM
குளக்கோட்டன், கலைவேந்தன், கோபாலன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
16-10-2012, 10:21 AM
காதலியின் வருகையினை எதிர்நோக்கும் கவிதை வரிகள் அருமை..

M.Jagadeesan
16-10-2012, 10:33 AM
நாஞ்சில் த.க. ஜெய் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

kulakkottan
16-10-2012, 02:53 PM
உங்கள் தெளிவு படுத்தலுக்கு நன்றி M.Jagadeesan

அர்த்தம் புரிந்த பின் இன்னும் கவி ரசனையை மாறி விட்டது